1ஆபிரகாம் வயது சென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்.And Abraham was old, and well stricken in age: and the LORD had blessed Abraham in all things.
2அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி:And Abraham said unto his eldest servant of his house, that ruled over all that he had, Put, I pray thee, thy hand under my thigh:
3நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்;And I will make thee swear by the LORD, the God of heaven, and the God of the earth, that thou shalt not take a wife unto my son of the daughters of the Canaanites, among whom I dwell:
4நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின் கீழ் வை என்றான்.But thou shalt go unto my country, and to my kindred, and take a wife unto my son Isaac.
5அதற்கு அந்த ஊழியக்காரன்: அவ்விடத்துப் பெண் என் பின்னே இந்தத் தேசத்துக்கு வர மனதில்லாதிருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்குத்தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ என்று கேட்டான்.And the servant said unto him, Peradventure the woman will not be willing to follow me unto this land: must I needs bring thy son again unto the land from whence thou camest?
6அதற்கு ஆபிரகாம்: நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.And Abraham said unto him, Beware thou that thou bring not my son thither again.
7என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்து வந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்.The LORD God of heaven, which took me from my father's house, and from the land of my kindred, and which spake unto me, and that sware unto me, saying, Unto thy seed will I give this land; he shall send his angel before thee, and thou shalt take a wife unto my son from thence.
8பெண் உன் பின்னே வர மனதில்லாதிருந்தாளேயாகில், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அங்கேமாத்திரம் என் குமாரனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்றான்.And if the woman will not be willing to follow thee, then thou shalt be clear from this my oath: only bring not my son thither again.
9அப்பொழுது அந்த ஊழியக்காரன் தன் கையைத் தன் எஜமானாகிய ஆபிரகாமின் தொடையின்கீழ் வைத்து, இந்தக் காரியத்தைக்குறித்து அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்.And the servant put his hand under the thigh of Abraham his master, and sware to him concerning that matter.
10பின்பு அந்த ஊழியக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னுடனே கொண்டுபோனான்; தன் எஜமானுடைய சகலவித உச்சிதமான பொருள்களும் அவன் கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊரில் சேர்ந்து,And the servant took ten camels of the camels of his master, and departed; for all the goods of his master were in his hand: and he arose, and went to Mesopotamia, unto the city of Nahor.
11ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே, ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்:And he made his camels to kneel down without the city by a well of water at the time of the evening, even the time that women go out to draw water.
12என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்.And he said O LORD God of my master Abraham, I pray thee, send me good speed this day, and show kindness unto my master Abraham.
13இதோ, நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே.Behold, I stand here by the well of water; and the daughters of the men of the city come out to draw water:
14நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.And let it come to pass, that the damsel to whom I shall say, Let down thy pitcher, I pray thee, that I may drink; and she shall say, Drink, and I will give thy camels drink also: let the same be she that thou hast appointed for thy servant Isaac; and thereby shall I know that thou hast showed kindness unto my master.
15அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாயிருக்கிற பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டு வந்தாள்.And it came to pass, before he had done speaking, that, behold, Rebekah came out, who was born to Bethuel, son of Milcah, the wife of Nahor, Abraham's brother, with her pitcher upon her shoulder.
16அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள்; அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்.And the damsel was very fair to look upon, a virgin, neither had any man known her: and she went down to the well, and filled her pitcher, and came up.
17அப்பொழுது அந்த ஊழியக்காரன், அவளுக்கு எதிர்கொண்டோடி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றான்.And the servant ran to meet her, and said, Let me, I pray thee, drink a little water of thy pitcher.
18அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக் கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.And she said, Drink, my lord: and she hasted, and let down her pitcher upon her hand, and gave him drink.
19கொடுத்தபின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன் என்று சொல்லி;And when she had done giving him drink, she said, I will draw water for thy camels also, until they have done drinking.
20சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள்.And she hasted, and emptied her pitcher into the trough, and ran again unto the well to draw water, and drew for all his camels.
21அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தான்.And the man wondering at her held his peace, to wit whether the LORD had made his journey prosperous or not.
22ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச்சேக்கல் எடைப்பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக் கொடுத்து,And it came to pass, as the camels had done drinking, that the man took a golden earring of half a shekel weight, and two bracelets for her hands of ten shekels weight of gold;
23நீ யாருடைய மகள், எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இராத்தங்க இடம் உண்டா என்றான்.And said, Whose daughter art thou? tell me, I pray thee: is there room in thy father's house for us to lodge in?
24அதற்கு அவள்: நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமன்றி,And she said unto him, I am the daughter of Bethuel the son of Milcah, which she bare unto Nahor.
25எங்களிடத்தில் வைக்கோலும் தீவனமும் வேண்டியமட்டும் இருக்கிறது; இராத்தங்க இடமும் உண்டு என்றாள்She said moreover unto him, We have both straw and provender enough, and room to lodge in.
26அப்பொழுது அந்த மனிதன் தலை குனிந்து, கர்த்தரைப் பணிந்து கொண்டு,And the man bowed down his head, and worshipped the LORD.
27என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம்பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டுவந்தார் என்றான்.And he said, Blessed be the LORD God of my master Abraham, who hath not left destitute my master of his mercy and his truth: I being in the way, the LORD led me to the house of my master's brethren.
28அந்தப் பெண் ஓடி, இந்தக்காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்தான்.And the damsel ran, and told them of her mother's house these things.
29ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பேர்; அந்த லாபான் வெளியே துரவண்டையில் இருந்த அந்த மனிதனிடத்துக்கு ஓடினான்.And Rebekah had a brother, and his name was Laban: and Laban ran out unto the man, unto the well.
30அவன் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து, இன்ன இன்னபடி அந்த மனிதன் என்னோடே பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், அந்த மனிதனிடத்தில் வந்தான்; அவன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான்.And it came to pass, when he saw the earring and bracelets upon his sister's hands, and when he heard the words of Rebekah his sister, saying, Thus spake the man unto me; that he came unto the man; and, behold, he stood by the camels at the well.
31அப்பொழுது அவன்: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன் என்றான்.And he said, Come in, thou blessed of the LORD; wherefore standest thou without? for I have prepared the house, and room for the camels.
32அப்பொழுது அந்த மனிதன் வீட்டுக்குப் போனான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடே வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான்.And the man came into the house: and he ungirded his camels, and gave straw and provender for the camels, and water to wash his feet, and the men's feet that were with him.
33பின்பு, அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் என்றான். அதற்கு அவன் சொல்லும் என்றான்.And there was set meat before him to eat: but he said, I will not eat, until I have told mine errand. And he said, Speak on.
34அப்பொழுது அவன்: நான் ஆபிரகாமுடைய ஊழியக்காரன்.And he said, I am Abraham's servant.
35கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.And the LORD hath blessed my master greatly; and he is become great: and he hath given him flocks, and herds, and silver, and gold, and menservants, and maidservants, and camels, and asses.
36என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவர் தமக்கு உண்டான யாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.And Sarah my master's wife bare a son to my master when she was old: and unto him hath he given all that he hath.
37என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண் கொள்ளாமல்,And my master made me swear, saying, Thou shalt not take a wife to my son of the daughters of the Canaanites, in whose land I dwell:
38நீ என் தகப்பன் வீட்டுக்கும், என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனுக்குப் பெண்கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கும்படி சொன்னார்.But thou shalt go unto my father's house, and to my kindred, and take a wife unto my son.
39அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என்பின்னே வராதேபோனாலோ என்று கேட்டதற்கு,And I said unto my master, Peradventure the woman will not follow me.
40அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய்.And he said unto me, The LORD, before whom I walk, will send his angel with thee, and prosper thy way; and thou shalt take a wife for my son of my kindred, and of my father's house:
41நீ என் இனத்தாரிடத்துக்குப் போனால், என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பெண்கொடாமற்போனாலும், நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் என்றார்.Then shalt thou be clear from this my oath, when thou comest to my kindred; and if they give not thee one, thou shalt be clear from my oath.
42அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால்,And I came this day unto the well, and said, O LORD God of my master Abraham, if now thou do prosper my way which I go:
43இதோ, நான் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், தண்ணீர் மொள்ள வரப்போகிற கன்னிகையை நான் நோக்கி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் எனக்குக் குடிக்கத் தரவேண்டும் என்று கேட்கும்போது:Behold, I stand by the well of water; and it shall come to pass, that when the virgin cometh forth to draw water, and I say to her, Give me, I pray thee, a little water of thy pitcher to drink;
44நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாகவேண்டும் என்றேன்.And she say to me, Both drink thou, and I will also draw for thy camels: let the same be the woman whom the LORD hath appointed out for my master's son.
45நான் இதை என் இருதயத்தில் சொல்லி முடிக்குமுன்னே, இதோ, ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து, துரவில் இறங்கிப்போய்த் தண்ணீர் மொண்டாள். அப்பொழுது நான்: எனக்குக் குடிக்கத் தரவேண்டும் என்றேன்.And before I had done speaking in mine heart, behold, Rebekah came forth with her pitcher on her shoulder; and she went down unto the well, and drew water: and I said unto her, Let me drink, I pray thee.
46அவள் சீக்கிரமாய்த் தன் தோள்மேலிருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் வார்ப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் வார்த்தாள்.And she made haste, and let down her pitcher from her shoulder, and said, Drink, and I will give thy camels drink also: so I drank, and she made the camels drink also.
47அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு;And I asked her, and said, Whose daughter art thou? And she said, the daughter of Bethuel, Nahor's son, whom Milcah bare unto him: and I put the earring upon her face, and the bracelets upon her hands.
48தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.And I bowed down my head, and worshipped the LORD, and blessed the LORD God of my master Abraham, which had led me in the right way to take my master's brother's daughter unto his son.
49இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலது புறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றான்.And now if ye will deal kindly and truly with my master, tell me: and if not, tell me; that I may turn to the right hand, or to the left.
50அப்பொழுது லாபானும் பெத்துவேலும் பிரதியுத்தரமாக: இந்தக்காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நலம் பொலம் ஒன்றும் சொல்லக் கூடாது.Then Laban and Bethuel answered and said, The thing proceedeth from the LORD: we cannot speak unto thee bad or good.
51இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள்.Behold, Rebekah is before thee, take her, and go, and let her be thy master's son's wife, as the LORD hath spoken.
52ஆபிரகாமின் ஊழியக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது, தரைமட்டும் குனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டான்.And it came to pass, that, when Abraham's servant heard their words, he worshipped the LORD, bowing himself to the earth.
53பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான்.And the servant brought forth jewels of silver, and jewels of gold, and raiment, and gave them to Rebekah: he gave also to her brother and to her mother precious things.
54பின்பு அவனும் அவனோடிருந்த மனிதரும் புசித்துக் குடித்து, இராத்தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: என் எஜமானிடத்துக்கு என்னை அனுப்பிவிடுங்கள் என்றான்.And they did eat and drink, he and the men that were with him, and tarried all night; and they rose up in the morning, and he said, Send me away unto my master.
55அப்பொழுது அவள் சகோதரனும் அவள் தாயும், பத்து நாளாகிலும் பெண் எங்களோடிருக்கட்டும், பிற்பாடு போகலாம் என்றார்கள்.And her brother and her mother said, Let the damsel abide with us a few days, at the least ten; after that she shall go.
56அதற்கு அவன்: கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க, நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்குப் போக என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.And he said unto them, Hinder me not, seeing the LORD hath prospered my way; send me away that I may go to my master.
57அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி,And they said, We will call the damsel, and inquire at her mouth.
58ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள்.And they called Rebekah, and said unto her, Wilt thou go with this man? And she said, I will go.
59அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து,And they sent away Rebekah their sister, and her nurse, and Abraham's servant, and his men.
60ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.And they blessed Rebekah, and said unto her, Thou art our sister, be thou the mother of thousands of millions, and let thy seed possess the gate of those which hate them.
61அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்களின்மேல் ஏறி, அந்த மனிதனோடேகூடப் போனார்கள். ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான்.And Rebekah arose, and her damsels, and they rode upon the camels, and followed the man: and the servant took Rebekah, and went his way.
62ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ என்னப்பட்ட துரவின் வழியாய்ப் புறப்பட்டுவந்தான்.And Isaac came from the way of the well Lahairoi; for he dwelt in the south country.
63ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான்.And Isaac went out to meditate in the field at the eventide: and he lifted up his eyes, and saw, and, behold, the camels were coming.
64ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது,And Rebekah lifted up her eyes, and when she saw Isaac, she lighted off the camel.
65ஊழியக்காரனை நோக்கி: அங்கே நமக்கு எதிராக நடந்து வருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.For she had said unto the servant, What man is this that walketh in the field to meet us? And the servant had said, It is my master: therefore she took a vail, and covered herself.
66ஊழியக்காரன் தான் செய்த சகல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச் சொன்னான்.And the servant told Isaac all things that he had done.
67அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதலடைந்தான்.And Isaac brought her into his mother Sarah's tent, and took Rebekah, and she became his wife; and he loved her: and Isaac was comforted after his mother's death.
1Abraham vayathu sentu muthirnthavanaanaan. Karththar aapirakaamaich sakala kaariyangalilum aaseervathiththu vanthaar.And Abraham was old, and well stricken in age: and the LORD had blessed Abraham in all things.
2Appoluthu Abraham than veettilullavarkalil vayathil mooththavanum, thanakku unndaana ellaavattirkum athikaariyumaakiya than ooliyakkaaranai Nnokki:And Abraham said unto his eldest servant of his house, that ruled over all that he had, Put, I pray thee, thy hand under my thigh:
3Naan kutiyirukkira kaanaaniyarutaiya kumaaraththikalil nee en kumaaranukkup pennkollaamal;And I will make thee swear by the LORD, the God of heaven, and the God of the earth, that thou shalt not take a wife unto my son of the daughters of the Canaanites, among whom I dwell:
4Nee en thaesaththukkum en inaththaaridaththukkum poy, en kumaaranaakiya eesaakkukkup pennkolvaen entu, vaanaththukkuth thaevanum poomikkuth thaevanumaakiya Karththarpaeril enakku aannaiyittukkodukkumpatikku, nee un kaiyai en thotaiyin geel vai entan.But thou shalt go unto my country, and to my kindred, and take a wife unto my son Isaac.
5Atharku antha ooliyakkaaran: avvidaththup penn en pinnae inthath thaesaththukku vara manathillaathirunthaal, neer vittuvantha thaesaththirkuththaanae ummutaiya kumaaranai maraுpatiyum alaiththuppokavaenndumo entu kaettan.And the servant said unto him, Peradventure the woman will not be willing to follow me unto this land: must I needs bring thy son again unto the land from whence thou camest?
6Atharku Abraham: nee en kumaaranai maraுpatiyum angae alaiththukkonndupokaathapatikku echcharikkaiyaayiru.And Abraham said unto him, Beware thou that thou bring not my son thither again.
7Ennai en thakappanutaiya veettilum en inaththaar irukkira thaesaththilumirunthu alaiththu vanthavarum, un santhathikku intha thaesaththaith tharuvaen entu enakkuch solli aannaiyittavarumaana vaanaththukkuth thaevanaakiya Karththar, nee angaeyirunthu en kumaaranukku oru pennnnaik konnduvarumpatikku, thammutaiya thoothanai unakku munpaaka anuppuvaar.The LORD God of heaven, which took me from my father's house, and from the land of my kindred, and which spake unto me, and that sware unto me, saying, Unto thy seed will I give this land; he shall send his angel before thee, and thou shalt take a wife unto my son from thence.
8Penn un pinnae vara manathillaathirunthaalaeyaakil, appoluthu nee intha en aannaikku neengalaayiruppaay; angaemaaththiram en kumaaranai maraுpatiyum alaiththukkonndu pokavaenndaam entan.And if the woman will not be willing to follow thee, then thou shalt be clear from this my oath: only bring not my son thither again.
9Appoluthu antha ooliyakkaaran than kaiyaith than ejamaanaakiya aapirakaamin thotaiyingeel vaiththu, inthak kaariyaththaikkuriththu avanukku aannaiyittukkoduththaan.And the servant put his hand under the thigh of Abraham his master, and sware to him concerning that matter.
10Pinpu antha ooliyakkaaran than ejamaanutaiya ottakangalil paththu ottakangalaith thannudanae konnduponaan; than ejamaanutaiya sakalavitha uchchithamaana porulkalum avan kaiyil irunthana; avan elunthu purappattuppoy, mesoppoththaamiyaavilae naakorutaiya ooril sernthu,And the servant took ten camels of the camels of his master, and departed; for all the goods of his master were in his hand: and he arose, and went to Mesopotamia, unto the city of Nahor.
11Oorukkup purampae oru thannnneerth thuravanntaiyilae, thannnneer molla sthireekal purappadukira saayangaala vaelaiyilae, ottakangalai madakki, thanakkullae sollikkonndathu ennavental:And he made his camels to kneel down without the city by a well of water at the time of the evening, even the time that women go out to draw water.
12En ejamaanaakiya aapirakaamukku thaevanaayirukkira karththaavae, intaikku neer enakkuk kaariyam siththikkappannnni, en ejamaanaakiya aapirakaamukkuth thayavu seytharulum.And he said O LORD God of my master Abraham, I pray thee, send me good speed this day, and show kindness unto my master Abraham.
13Itho, naan inthath thannnneerth thuravanntaiyilae nirkiraேn, intha ooraarutaiya pennkal thannnneer mollap purappattu varuvaarkalae.Behold, I stand here by the well of water; and the daughters of the men of the city come out to draw water:
14Naan kutikka un kudaththaich saaykkavaenndum entu naan sollumpothu: kuti entum, un ottakangalum kutikkumpati vaarppaen entum sollum penn evalo, avalae neer ummutaiya ooliyakkaaranaakiya eesaakkukku niyamiththavalaayirukkavum, en ejamaanukku anukkirakam seytheer entu naan athinaalae ariyavum seytharulum entan.And let it come to pass, that the damsel to whom I shall say, Let down thy pitcher, I pray thee, that I may drink; and she shall say, Drink, and I will give thy camels drink also: let the same be she that thou hast appointed for thy servant Isaac; and thereby shall I know that thou hast showed kindness unto my master.
15Avan ippatich solli mutikkum munnae, itho, aapirakaamutaiya sakotharanaakiya naakorin manaivi milkkaalutaiya kumaaranaayirukkira peththuvaelukkup pirantha repekkaal kudaththaith tholmael vaiththukkonndu purappattu vanthaal.And it came to pass, before he had done speaking, that, behold, Rebekah came out, who was born to Bethuel, son of Milcah, the wife of Nahor, Abraham's brother, with her pitcher upon her shoulder.
16Anthap penn makaa roopavathiyum, purushanai ariyaatha kannikaiyumaay irunthaal; aval thuravil irangi, than kudaththai nirappikkonndu aerivanthaal.And the damsel was very fair to look upon, a virgin, neither had any man known her: and she went down to the well, and filled her pitcher, and came up.
17Appoluthu antha ooliyakkaaran, avalukku ethirkonntooti: un kudaththilirukkira thannnneeril konjam kutikkath tharavaenndum entan.And the servant ran to meet her, and said, Let me, I pray thee, drink a little water of thy pitcher.
18Atharku aval: kutiyum en aanndavanae entu seekkiramaayk kudaththaith than kaiyil irakkik konndu, avanukkuk kutikkak koduththaal.And she said, Drink, my lord: and she hasted, and let down her pitcher upon her hand, and gave him drink.
19Koduththapin, ummutaiya ottakangalum kutiththuth theerumattum avaikalukkum monndu vaarppaen entu solli;And when she had done giving him drink, she said, I will draw water for thy camels also, until they have done drinking.
20Seekkiramaayth than kudaththuth thannnneeraith thottiyilae oottivittu, innum monnduvarath thuravanntaiyil oti, avanutaiya ottakangalukkellaam monndu vaarththaal.And she hasted, and emptied her pitcher into the trough, and ran again unto the well to draw water, and drew for all his camels.
21Antha manithan avalaikkuriththu aachchariyappattu, Karththar than pirayaanaththai vaaykkappannnninaaro illaiyo entu ariyumporuttu mavunamaayirunthaan.And the man wondering at her held his peace, to wit whether the LORD had made his journey prosperous or not.
22Ottakangal kutiththuth theernthapin, antha manithan araichchaேkkal etaiyulla porkaathanniyaiyum, aval kaikalukkup paththuchchaேkkal etaipponnulla iranndu kadakangalaiyum eduththuk koduththu,And it came to pass, as the camels had done drinking, that the man took a golden earring of half a shekel weight, and two bracelets for her hands of ten shekels weight of gold;
23Nee yaarutaiya makal, enakkuch sollavaenndum; naangal un thakappan veettil iraaththanga idam unndaa entan.And said, Whose daughter art thou? tell me, I pray thee: is there room in thy father's house for us to lodge in?
24Atharku aval: naan naakorukku milkkaal petta kumaaranaakiya peththuvaelin makal entu sonnathumanti,And she said unto him, I am the daughter of Bethuel the son of Milcah, which she bare unto Nahor.
25Engalidaththil vaikkolum theevanamum vaenntiyamattum irukkirathu; iraaththanga idamum unndu entalShe said moreover unto him, We have both straw and provender enough, and room to lodge in.
26Appoluthu antha manithan thalai kuninthu, karththaraip panninthu konndu,And the man bowed down his head, and worshipped the LORD.
27En ejamaanaakiya aapirakaamin thaevanaayirukkira karththarukku Sthoththiram; avar thammutaiya kirupaiyaiyum, thammutaiya unnmaiyaiyum en ejamaanai vittu neekkavillai; naan pirayaanampannnnivarukaiyil, Karththar en ejamaanutaiya sakotharar veettukku ennai alaiththukkonnduvanthaar entan.And he said, Blessed be the LORD God of my master Abraham, who hath not left destitute my master of his mercy and his truth: I being in the way, the LORD led me to the house of my master's brethren.
28Anthap penn oti, inthakkaariyangalaith than thaayin veettilullavarkalukku ariviththaan.And the damsel ran, and told them of her mother's house these things.
29Repekkaalukku oru sakotharan irunthaan; avanukku laapaan entu paer; antha laapaan veliyae thuravanntaiyil iruntha antha manithanidaththukku otinaan.And Rebekah had a brother, and his name was Laban: and Laban ran out unto the man, unto the well.
30Avan than sakothari thariththiruntha anthak kaathanniyaiyum, aval kaikalil pottiruntha kadakangalaiyum paarththu, inna innapati antha manithan ennotae paesinaanentu than sakothari repekkaal sonna vaarththaikalaik kaettamaaththiraththil, antha manithanidaththil vanthaan; avan thuravu arukae ottakangal anntaiyil nintukonntirunthaan.And it came to pass, when he saw the earring and bracelets upon his sister's hands, and when he heard the words of Rebekah his sister, saying, Thus spake the man unto me; that he came unto the man; and, behold, he stood by the camels at the well.
31Appoluthu avan: karththaraal aaseervathikkappattavarae, ullae vaarum; neer veliyae nirpaanaen? Umakku veedum, ottakangalukku idamum aayaththampannnniyirukkiraேn entan.And he said, Come in, thou blessed of the LORD; wherefore standest thou without? for I have prepared the house, and room for the camels.
32Appoluthu antha manithan veettukkup ponaan. Laapaan ottakangalin kattavilththu, ottakangalukku vaikkolum theevanamum pottu, avanum, avanotae vanthavarkalum thangal kaalkalaik kaluvikkollath thannnneer koduththaan.And the man came into the house: and he ungirded his camels, and gave straw and provender for the camels, and water to wash his feet, and the men's feet that were with him.
33Pinpu, avanukku munpaaka pojanam vaikkappattathu. Appoluthu avan: naan vantha kaariyaththaich sollumunnae pusikkamaattaேn entan. Atharku avan sollum entan.And there was set meat before him to eat: but he said, I will not eat, until I have told mine errand. And he said, Speak on.
34Appoluthu avan: naan aapirakaamutaiya ooliyakkaaran.And he said, I am Abraham's servant.
35Karththar en ejamaanai mikavum aaseervathiththirukkiraar, avar seemaanaayirukkiraar; Karththar avarukku aadumaadukalaiyum, velliyaiyum, ponnaiyum, vaelaikkaararaiyum, vaelaikkaarikalaiyum, ottakangalaiyum, kaluthaikalaiyum koduththirukkiraar.And the LORD hath blessed my master greatly; and he is become great: and he hath given him flocks, and herds, and silver, and gold, and menservants, and maidservants, and camels, and asses.
36En ejamaanutaiya manaiviyaakiya saaraal muthirvayathaanapothu, en ejamaanukku oru kumaaranaip pettaாl; avar thamakku unndaana yaavaiyum avanukkuk koduththirukkiraar.And Sarah my master's wife bare a son to my master when she was old: and unto him hath he given all that he hath.
37En ejamaan ennai Nnokki: naan kutiyirukkira kaanaan thaesaththaarutaiya kumaaraththikalil nee en kumaaranukkup penn kollaamal,And my master made me swear, saying, Thou shalt not take a wife to my son of the daughters of the Canaanites, in whose land I dwell:
38Nee en thakappan veettukkum, en inaththaaridaththukkum poy, en kumaaranukkup pennkollavaenndum entu aannaiyittukkodukkumpati sonnaar.But thou shalt go unto my father's house, and to my kindred, and take a wife unto my son.
39Appoluthu naan en ejamaanai Nnokki: oruvaelai anthap penn enpinnae varaathaeponaalo entu kaettatharku,And I said unto my master, Peradventure the woman will not follow me.
40Avar: naan valipadum Karththar unnotae thammutaiya thoothanai anuppi, un pirayaanaththai vaaykkappannnuvaar; en inaththaaridaththilum, en thakappan veettilum nee en kumaaranukkup pennkolvaay.And he said unto me, The LORD, before whom I walk, will send his angel with thee, and prosper thy way; and thou shalt take a wife for my son of my kindred, and of my father's house:
41Nee en inaththaaridaththukkup ponaal, en aannaikku neengalaayiruppaay; avarkal unakkup pennkodaamarponaalum, nee en aannaikku neengalaayiruppaay entar.Then shalt thou be clear from this my oath, when thou comest to my kindred; and if they give not thee one, thou shalt be clear from my oath.
42Appatiyae naan intu thuravanntaiyilae vanthu: en ejamaanaakiya aapirakaamin thaevanaakiya karththarae, en pirayaanaththai neer ippoluthu vaaykkappannnuveeraanaal,And I came this day unto the well, and said, O LORD God of my master Abraham, if now thou do prosper my way which I go:
43Itho, naan thannnneerth thuravanntaiyilae nirkiraேn, thannnneer molla varappokira kannikaiyai naan Nnokki: un kudaththilirukkira thannnneeril konjam enakkuk kutikkath tharavaenndum entu kaetkumpothu:Behold, I stand by the well of water; and it shall come to pass, that when the virgin cometh forth to draw water, and I say to her, Give me, I pray thee, a little water of thy pitcher to drink;
44Nee kuti entum, un ottakangalukkum monndu vaarppaen entum sollum pennnnee Karththar en ejamaanutaiya kumaaranukku niyamiththa sthireeyaakavaenndum enten.And she say to me, Both drink thou, and I will also draw for thy camels: let the same be the woman whom the LORD hath appointed out for my master's son.
45Naan ithai en iruthayaththil solli mutikkumunnae, itho, repekkaal than kudaththaith tholmael vaiththukkonndu purappattuvanthu, thuravil irangippoyth thannnneer monndaal. Appoluthu naan: enakkuk kutikkath tharavaenndum enten.And before I had done speaking in mine heart, behold, Rebekah came forth with her pitcher on her shoulder; and she went down unto the well, and drew water: and I said unto her, Let me drink, I pray thee.
46Aval seekkiramaayth than tholmaeliruntha kudaththai irakki, kutiyum, ummutaiya ottakangalukkum vaarppaen ental. Naan kutiththaen; ottakangalukkum vaarththaal.And she made haste, and let down her pitcher from her shoulder, and said, Drink, and I will give thy camels drink also: so I drank, and she made the camels drink also.
47Appoluthu: nee yaarutaiya makal entu avalaik kaettaேn; atharku aval: naan milkkaal naakorukkup petta kumaaranaakiya peththuvaelin makal ental; appoluthu avalukkuk kaathanniyaiyum, aval kaikalilae kadakangalaiyum pottu;And I asked her, and said, Whose daughter art thou? And she said, the daughter of Bethuel, Nahor's son, whom Milcah bare unto him: and I put the earring upon her face, and the bracelets upon her hands.
48Thalaikuninthu, karththaraip panninthukonndu, naan en ejamaanutaiya sakotharan kumaaraththiyai avar kumaaranukkuk kolla ennai naervaliyaay nadaththivantha en ejamaanaakiya aapirakaamin thaevanaayirukkira karththarai sthoththiriththaen.And I bowed down my head, and worshipped the LORD, and blessed the LORD God of my master Abraham, which had led me in the right way to take my master's brother's daughter unto his son.
49Ippoluthum neengalum en ejamaanukkuth thayaiyum unnmaiyum utaiyavarkalaay nadakka manathullavarkalaanaal, enakkuch sollungal; illaiyental athaiyum enakkuch sollungal, appoluthu naan valathu puraththaiyaakilum idathupuraththaiyaakilum Nnokkip povaen entan.And now if ye will deal kindly and truly with my master, tell me: and if not, tell me; that I may turn to the right hand, or to the left.
50Appoluthu laapaanum peththuvaelum pirathiyuththaramaaka: inthakkaariyam karththaraal vanthathu, umakku naangal nalam polam ontum sollak koodaathu.Then Laban and Bethuel answered and said, The thing proceedeth from the LORD: we cannot speak unto thee bad or good.
51Itho, repekkaal umakku munpaaka irukkiraal; Karththar sonnapatiyae aval umathu ejamaanutaiya kumaaranukku manaiviyaakumpatikku, avalai alaiththukkonndupom entarkal.Behold, Rebekah is before thee, take her, and go, and let her be thy master's son's wife, as the LORD hath spoken.
52Aapirakaamin ooliyakkaaran avarkal vaarththaikalaik kaettapothu, tharaimattum kuninthu, karththaraip panninthukonndaan.And it came to pass, that, when Abraham's servant heard their words, he worshipped the LORD, bowing himself to the earth.
53Pinpu antha ooliyakkaaran velliyutaimaikalaiyum, ponnutaimaikalaiyum, vasthirangalaiyum eduththu, repekkaalukkuk koduththathumanti, avalutaiya sakotharanukkum thaaykkum sila uchchithangalaiyum koduththaan.And the servant brought forth jewels of silver, and jewels of gold, and raiment, and gave them to Rebekah: he gave also to her brother and to her mother precious things.
54Pinpu avanum avanotiruntha manitharum pusiththuk kutiththu, iraaththanginaarkal; kaalaiyilae elunthirunthu, avan: en ejamaanidaththukku ennai anuppividungal entan.And they did eat and drink, he and the men that were with him, and tarried all night; and they rose up in the morning, and he said, Send me away unto my master.
55Appoluthu aval sakotharanum aval thaayum, paththu naalaakilum penn engalotirukkattum, pirpaadu pokalaam entarkal.And her brother and her mother said, Let the damsel abide with us a few days, at the least ten; after that she shall go.
56Atharku avan: Karththar en pirayaanaththai vaaykkappannnniyirukka, neengal enakkuth thataiseyyaathirungal; naan en ejamaanidaththukkup poka ennai anuppividavaenndum entan.And he said unto them, Hinder me not, seeing the LORD hath prospered my way; send me away that I may go to my master.
57Appoluthu avarkal: pennnnai alaiththu, aval vaayppirappaik kaetpom entu solli,And they said, We will call the damsel, and inquire at her mouth.
58Repekkaalai alaiththu: nee intha manithanotaekoodap pokiraayaa entu kaettarkal. Aval: pokiraேn ental.And they called Rebekah, and said unto her, Wilt thou go with this man? And she said, I will go.
59Appatiyae avarkal thangal sakothariyaakiya repekkaalaiyum, aval thaathiyaiyum, aapirakaamin ooliyakkaaranaiyum, avan manitharaiyum anuppuviththu,And they sent away Rebekah their sister, and her nurse, and Abraham's servant, and his men.
60Repekkaalai vaalththi: engal sakothariyae, nee kodaakotiyaayp perukuvaayaaka; un santhathiyaar thangal pakainjarutaiya vaasalkalaich suthanthariththukkolvaarkalaaka entu aaseervathiththaarkal.And they blessed Rebekah, and said unto her, Thou art our sister, be thou the mother of thousands of millions, and let thy seed possess the gate of those which hate them.
61Appoluthu repekkaalum aval vaelaikkaarikalum elunthu ottakangalinmael aeri, antha manithanotaekoodap ponaarkal. Ooliyakkaaran repekkaalai alaiththukkonnduponaan.And Rebekah arose, and her damsels, and they rode upon the camels, and followed the man: and the servant took Rebekah, and went his way.
62Eesaakku thenthaesaththil kutiyirunthaan. Appoluthu avan: lakaayroyee ennappatta thuravin valiyaayp purappattuvanthaan.And Isaac came from the way of the well Lahairoi; for he dwelt in the south country.
63Eesaakku saayangaalavaelaiyilae thiyaanampannna veliyilae poyirunthu, than kannkalai aeraெduththup paarththapothu, ottakangal varakkanndaan.And Isaac went out to meditate in the field at the eventide: and he lifted up his eyes, and saw, and, behold, the camels were coming.
64Repekkaalum than kannkalai aeraெduththu eesaakkaik kanndapothu,And Rebekah lifted up her eyes, and when she saw Isaac, she lighted off the camel.
65Ooliyakkaaranai Nnokki: angae namakku ethiraaka nadanthu varukira antha manithan yaar entu kaettal. Avarthaan en ejamaan entu ooliyakkaaran sonnaan. Appoluthu aval ottakaththai vittirangi mukkaatittukkonndaal.For she had said unto the servant, What man is this that walketh in the field to meet us? And the servant had said, It is my master: therefore she took a vail, and covered herself.
66Ooliyakkaaran thaan seytha sakala kaariyangalaiyum eesaakkukku vivariththuch sonnaan.And the servant told Isaac all things that he had done.
67Appoluthu eesaakku repekkaalaith than thaay saaraalutaiya koodaaraththukku alaiththukkonndupoy, avalaith thanakku manaiviyaakkikkonndu, avalai naesiththaan. Eesaakku than thaaykkaakak konntiruntha thukkam neengi aaraுthalatainthaan.And Isaac brought her into his mother Sarah's tent, and took Rebekah, and she became his wife; and he loved her: and Isaac was comforted after his mother's death.