1அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,And Jesus entered and passed through Jericho.
2ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,And, behold, there was a man named Zacchaeus, which was the chief among the publicans, and he was rich.
3இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,And he sought to see Jesus who he was; and could not for the press, because he was little of stature.
4அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.And he ran before, and climbed up into a sycomore tree to see him: for he was to pass that way.
5இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.And when Jesus came to the place, he looked up, and saw him, and said unto him, Zacchaeus, make haste, and come down; for to day I must abide at thy house.
6அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான்.And he made haste, and came down, and received him joyfully.
7அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார் என்று முறுமுறுத்தார்கள்.And when they saw it, they all murmured, saying, That he was gone to be guest with a man that is a sinner.
8சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.And Zacchaeus stood, and said unto the Lord: Behold, Lord, the half of my goods I give to the poor; and if I have taken any thing from any man by false accusation, I restore him fourfold.
9இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.And Jesus said unto him, This day is salvation come to this house, forsomuch as he also is a son of Abraham.
10இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.For the Son of man is come to seek and to save that which was lost.
11அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:And as they heard these things, he added and spake a parable, because he was nigh to Jerusalem, and because they thought that the kingdom of God should immediately appear.
12பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பி வரும்படி தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.He said therefore, A certain nobleman went into a far country to receive for himself a kingdom, and to return.
13புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.And he called his ten servants, and delivered them ten pounds, and said unto them, Occupy till I come.
14அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.But his citizens hated him, and sent a message after him, saying, We will not have this man to reign over us.
15அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.And it came to pass, that when he was returned, having received the kingdom, then he commanded these servants to be called unto him, to whom he had given the money, that he might know how much every man had gained by trading.
16அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.Then came the first, saying, Lord, thy pound hath gained ten pounds.
17எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.And he said unto him, Well, thou good servant: because thou hast been faithful in a very little, have thou authority over ten cities.
18அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.And the second came, saying, Lord, thy pound hath gained five pounds.
19அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.And he said likewise to him, Be thou also over five cities.
20பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.And another came, saying, Lord, behold, here is thy pound, which I have kept laid up in a napkin:
21நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.For I feared thee, because thou art an austere man: thou takest up that thou layedst not down, and reapest that thou didst not sow.
22அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,And he saith unto him, Out of thine own mouth will I judge thee, thou wicked servant. Thou knewest that I was an austere man, taking up that I laid not down, and reaping that I did not sow:
23பின்னே ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக்கொள்வேனே என்று சொல்லி;Wherefore then gavest not thou my money into the bank, that at my coming I might have required mine own with usury?
24சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.And he said unto them that stood by, Take from him the pound, and give it to him that hath ten pounds.
25அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.(And they said unto him, Lord, he hath ten pounds.)
26அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.For I say unto you, That unto every one which hath shall be given; and from him that hath not, even that he hath shall be taken away from him.
27அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்But those mine enemies, which would not that I should reign over them, bring hither, and slay them before me.
28இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்திநடந்துபோனார்.And when he had thus spoken, he went before, ascending up to Jerusalem.
29அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபித்தபோது, தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி:And it came to pass, when he was come nigh to Bethphage and Bethany, at the mount called the mount of Olives, he sent two of his disciples,
30உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.Saying, Go ye into the village over against you; in the which at your entering ye shall find a colt tied, whereon yet never man sat: loose him, and bring him hither.
31அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.And if any man ask you, Why do ye loose him? thus shall ye say unto him, Because the Lord hath need of him.
32அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள்.And they that were sent went their way, and found even as he had said unto them.
33கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.And as they were loosing the colt, the owners thereof said unto them, Why loose ye the colt?
34அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,And they said, The Lord hath need of him.
35அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல்போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.And they brought him to Jesus: and they cast their garments upon the colt, and they set Jesus thereon.
36அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.And as he went, they spread their clothes in the way.
37அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளானகூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித͠Τுச் சந்தோஷப்பட்டு,And when he was come nigh, even now at the descent of the mount of Olives, the whole multitude of the disciples began to rejoice and praise God with a loud voice for all the mighty works that they had seen;
38கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.Saying, Blessed be the King that cometh in the name of the Lord: peace in heaven, and glory in the highest.
39அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள்.And some of the Pharisees from among the multitude said unto him, Master, rebuke thy disciples.
40அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.And he answered and said unto them, I tell you that, if these should hold their peace, the stones would immediately cry out.
41அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,And when he was come near, he beheld the city, and wept over it,
42உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.Saying, If thou hadst known, even thou, at least in this thy day, the things which belong unto thy peace! but now they are hid from thine eyes.
43உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,For the days shall come upon thee, that thine enemies shall cast a trench about thee, and compass thee round, and keep thee in on every side,
44உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் வரும் என்றார்.And shall lay thee even with the ground, and thy children within thee; and they shall not leave in thee one stone upon another; because thou knewest not the time of thy visitation.
45பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி:And he went into the temple, and began to cast out them that sold therein, and them that bought;
46என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார்.Saying unto them, It is written, My house is the house of prayer: but ye have made it a den of thieves.
47அவர் நாடோறும் தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும்,And he taught daily in the temple. But the chief priests and the scribes and the chief of the people sought to destroy him,
48ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக் கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்.And could not find what they might do: for all the people were very attentive to hear him.
1Avar erikovil piravaesiththu, athin valiyaaka nadanthupokaiyil,And Jesus entered and passed through Jericho.
2Aayakkaararukkuth thalaivanum aisuvariyavaanumaayiruntha sakaeyu ennappatta oru manushan,And, behold, there was a man named Zacchaeus, which was the chief among the publicans, and he was rich.
3Yesu eppatippattavaro entu avaraip paarkka vakaithaetinaan. Avan kullanaanapatiyaal, janakkoottaththil avaraik kaanakkoodaamal,And he sought to see Jesus who he was; and could not for the press, because he was little of stature.
4Avar pokum valiyil munnaaka oti, avaraip paarkkumpati oru kaattaththi maraththil aerinaan.And he ran before, and climbed up into a sycomore tree to see him: for he was to pass that way.
5Yesu antha idaththil vanthapothu, annnnaanthupaarththu, avanaik kanndu: sakaeyuvae, nee seekkiramaay irangivaa, intaikku naan un veettilae thangavaenndum entar.And when Jesus came to the place, he looked up, and saw him, and said unto him, Zacchaeus, make haste, and come down; for to day I must abide at thy house.
6Avan seekkiramaay irangi, santhoshaththotae avarai alaiththukkonndu ponaan.And he made haste, and came down, and received him joyfully.
7Athaik kannda yaavarum: ivar paaviyaana manushanidaththil thangumpatiponaar entu muraுmuraுththaarkal.And when they saw it, they all murmured, saying, That he was gone to be guest with a man that is a sinner.
8Sakaeyu nintu, karththarai Nnokki: aanndavarae, en aasthikalil paathiyai aelaikalukkuk kodukkiraேn, naan oruvanidaththil ethaiyaakilum aniyaayamaay vaanginathunndaanaal, naalaththanaiyaakath thirumpach seluththukiraேn entan.And Zacchaeus stood, and said unto the Lord: Behold, Lord, the half of my goods I give to the poor; and if I have taken any thing from any man by false accusation, I restore him fourfold.
9Yesu avanai Nnokki: intaikku intha veettukku iratchippu vanthathu; ivanum aapirakaamukkuk kumaaranaayirukkiraanae.And Jesus said unto him, This day is salvation come to this house, forsomuch as he also is a son of Abraham.
10Ilanthuponathaith thaedavum iratchikkavumae manushakumaaran vanthirukkiraar entar.For the Son of man is come to seek and to save that which was lost.
11Avarkal ivaikalaik kaettuk konntirukkaiyil, avar erusalaemukkuch sameepiththirunthapatiyinaalum, thaevanutaiya raajyam seekkiramaay velippadumentu avarkal ninaiththapatiyinaalum, avar oru uvamaiyaich sonnaar:And as they heard these things, he added and spake a parable, because he was nigh to Jerusalem, and because they thought that the kingdom of God should immediately appear.
12Pirapuvaakiya oruvan oru raajyaththaip pettaுkkonndu thirumpi varumpati thaesaththukkup pokap purappattan.He said therefore, A certain nobleman went into a far country to receive for himself a kingdom, and to return.
13Purappadumpothu, avan than ooliyakkaararil paththuppaerai alaiththu, avarkalidaththil paththuraaththal thiraviyangaொduththu: naan thirumpivarumalavum ithaikkonndu viyaapaarampannnungal entu sonnaan.And he called his ten servants, and delivered them ten pounds, and said unto them, Occupy till I come.
14Avanutaiya ooraar avanaip pakaiththu, ivan engal mael raajaavaayirukkirathu engalukku manathillaiyentu sollumpati avan pinnae sthaanaapathikalai anuppinaarkal.But his citizens hated him, and sent a message after him, saying, We will not have this man to reign over us.
15Avan raajyaththaip pettaுkkonndu thirumpivanthapothu, thannidaththil thiraviyam vaangiyiruntha antha ooliyakkaararil avanavan viyaapaarampannnnich sampaathiththathu ivvalaventu ariyumpati, avarkalaith thannidaththil alaiththuvarach sonnaan.And it came to pass, that when he was returned, having received the kingdom, then he commanded these servants to be called unto him, to whom he had given the money, that he might know how much every man had gained by trading.
16Appoluthu munthinavan vanthu: aanndavanae, ummutaiya raaththalinaal paththuraaththal aathaayam kitaiththathu entan.Then came the first, saying, Lord, thy pound hath gained ten pounds.
17Ejamaan avanai Nnokki: nallathu uththama ooliyakkaaranae, nee konjaththil unnmaiyullavanaayirunthapatiyaal paththup pattanangalukku athikaariyaayiru entan.And he said unto him, Well, thou good servant: because thou hast been faithful in a very little, have thou authority over ten cities.
18Appatiyae iranndaam ooliyakkaaran vanthu: aanndavanae, ummutaiya raaththalinaal ainthuraaththal aathaayam kitaiththathu entan.And the second came, saying, Lord, thy pound hath gained five pounds.
19Avanaiyum avan Nnokki: neeyum ainthu pattanangalukku athikaariyaayiru entan.And he said likewise to him, Be thou also over five cities.
20Pinpu vaeroruvan vanthu: aanndavanae, itho, ummutaiya raaththal, ithai oru seelaiyilae vaiththirunthaen.And another came, saying, Lord, behold, here is thy pound, which I have kept laid up in a napkin:
21Neer vaikkaathathai edukkiravarum, vithaikkaathathai araுkkiravarumaana katinamulla manushanentu arinthu, umakkup payanthirunthaen entan.For I feared thee, because thou art an austere man: thou takest up that thou layedst not down, and reapest that thou didst not sow.
22Atharku avan: pollaatha ooliyakkaaranae, un vaaychchaொllaikkonntae unnai niyaayantheerkkiraேn. Naan vaikkaathathai edukkiravanum, vithaikkaathathai araுkkiravanumaana katinamulla manushanentu arinthaayae,And he saith unto him, Out of thine own mouth will I judge thee, thou wicked servant. Thou knewest that I was an austere man, taking up that I laid not down, and reaping that I did not sow:
23Pinnae aen nee en thiraviyaththaik kaasukkataiyilae vaikkavillai; vaiththirunthaal naan varumpothu, athai vattiyotae varappattikkolvaenae entu solli;Wherefore then gavest not thou my money into the bank, that at my coming I might have required mine own with usury?
24Sameepamaay nirkiravarkalai Nnokki: antha raaththalai avan kaiyiliruntheduththu, paththuraaththal ullavanukkuk kodungal entan.And he said unto them that stood by, Take from him the pound, and give it to him that hath ten pounds.
25Atharku avarkal: aanndavanae, avanukkup paththuraaththal irukkirathae entarkal.(And they said unto him, Lord, he hath ten pounds.)
26Atharku avan: ullavan evanukkung kodukkappadum, illaathavanidaththil ullathum eduththukkollappadum entu ungalukkuch sollukiraேn.For I say unto you, That unto every one which hath shall be given; and from him that hath not, even that he hath shall be taken away from him.
27Antiyum thangalmael naan raajaavaakiratharku manathillaathirunthavarkalaakiya ennutaiya saththurukkalai ingae konnduvanthu, enakku munpaaka vettippodungal entu sonnaan entarBut those mine enemies, which would not that I should reign over them, bring hither, and slay them before me.
28Ivaikalai avar sonnapinpu erusalaemukkup purappattu, munthinadanthuponaar.And when he had thus spoken, he went before, ascending up to Jerusalem.
29Avar olivamalaiyennappatta malaiyin arukaana pethpakae peththaaniyaa ennum oorkalukkuch sameepiththapothu, thammutaiya seesharil iranndupaerai Nnokki:And it came to pass, when he was come nigh to Bethphage and Bethany, at the mount called the mount of Olives, he sent two of his disciples,
30Ungalukku ethirae irukkira kiraamaththukkup pongal, athilae piravaesikkumpothu manushariloruvanum orukkaalum aeriyiraatha kaluthaikkuttiyaik kattiyirukkak kaannpeerkal, athai avilththukkonndu vaarungal.Saying, Go ye into the village over against you; in the which at your entering ye shall find a colt tied, whereon yet never man sat: loose him, and bring him hither.
31Athai aen avilkkireerkalentu yaaraavathu ungalidaththil kaettal, athu aanndavarukku vaenndumentu sollungal entar.And if any man ask you, Why do ye loose him? thus shall ye say unto him, Because the Lord hath need of him.
32Anuppappattavarkal poy, thangalukku avar sonnapatiyae kanndaarkal.And they that were sent went their way, and found even as he had said unto them.
33Kaluthaikkuttiyai avarkal avilkkumpothu, atharku utaiyavarkal: kuttiyai aen avilkkireerkal entu kaettarkal.And as they were loosing the colt, the owners thereof said unto them, Why loose ye the colt?
34Atharku avarkal: athu aanndavarukku vaenndumentu solli,And they said, The Lord hath need of him.
35Athai Yesuvinidaththil konnduvanthu, thangal vasthirangalai athinmaelpottu, Yesuvai athinmael aettinaarkal.And they brought him to Jesus: and they cast their garments upon the colt, and they set Jesus thereon.
36Avar pokaiyil, avarkal thangal vasthirangalai valiyilae viriththaarkal.And as he went, they spread their clothes in the way.
37Avar olivamalaiyin ativaaraththukkuch sameepamaay varukaiyil thiralaanakoottamaakiya seesharellaarum thaangal kannda sakala arputhangalaiyunguritha͠Τுch santhoshappattu,And when he was come nigh, even now at the descent of the mount of Olives, the whole multitude of the disciples began to rejoice and praise God with a loud voice for all the mighty works that they had seen;
38Karththarutaiya naamaththinaalae varukira raajaa sthoththirikkappattavar, paralokaththilae samaathaanamum unnathaththilae makimaiyum unndaavathaaka entu mikuntha saththaththotae thaevanaip pukalnthaarkal.Saying, Blessed be the King that cometh in the name of the Lord: peace in heaven, and glory in the highest.
39Appoluthu koottaththiliruntha pariseyaril silar avarai Nnokki: pothakarae, ummutaiya seesharai athattum entarkal.And some of the Pharisees from among the multitude said unto him, Master, rebuke thy disciples.
40Avarkalukku avar pirathiyuththaramaaka: ivarkal paesaamalirunthaal kallukalae kooppidum entu ungalukkuch sollukiraேn entar.And he answered and said unto them, I tell you that, if these should hold their peace, the stones would immediately cry out.
41Avar sameepamaay vanthapothu nakaraththaippaarththu, atharkaakak kannnneervittaluthu,And when he was come near, he beheld the city, and wept over it,
42Unakkuk kitaiththa intha naalilaakilum un samaathaanaththukku aettavaikalai nee arinthirunthaayaanaal nalamaayirukkum, ippolutho avaikal un kannkalukku maraivaayirukkirathu.Saying, If thou hadst known, even thou, at least in this thy day, the things which belong unto thy peace! but now they are hid from thine eyes.
43Unnaich santhikkungaalaththai nee ariyaamarponapatiyaal, un saththurukkal unnaich soola mathilpottu, unnai valainthukonndu, eppakkaththilum unnai nerukki,For the days shall come upon thee, that thine enemies shall cast a trench about thee, and compass thee round, and keep thee in on every side,
44Unnaiyum unnilulla un pillaikalaiyum tharaiyaakkippottu, unnidaththil oru kallinmael oru kalliraathapatikkuch seyyum naatkal varum entar.And shall lay thee even with the ground, and thy children within thee; and they shall not leave in thee one stone upon another; because thou knewest not the time of thy visitation.
45Pinpu avar thaevaalayaththil piravaesiththu, athilae virkiravarkalaiyum kollukiravarkalaiyum purampae thuraththaththodangi:And he went into the temple, and began to cast out them that sold therein, and them that bought;
46Ennutaiya veedu jepaveedaayirukkirathentu eluthiyirukkirathu, neengalo athaik kallarkukaiyaakkineerkal entar.Saying unto them, It is written, My house is the house of prayer: but ye have made it a den of thieves.
47Avar naatooraுm thaevaalayaththil upathaesam pannnnikkonntirunthaar. Pirathaana aasaariyarum vaethapaarakarum janaththin moopparum avaraik kolaiseyya vakaithaetiyum,And he taught daily in the temple. But the chief priests and the scribes and the chief of the people sought to destroy him,
48Janangalellaarum avarukkuch sevikoduththu avarai anntik konntirunthapatiyaal, athai innapati seyyalaamentu vakaikaannaathirunthaarkal.And could not find what they might do: for all the people were very attentive to hear him.