1கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப்போகப் புறப்பட்டான்.And after the uproar was ceased, Paul called unto him the disciples, and embraced them, and departed for to go into Macedonia.
2அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்திசொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான்.And when he had gone over those parts, and had given them much exhortation, he came into Greece,
3அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்தபின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியாதேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி ரகசியமான யோசனைகொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம் பண்ணினான்And there abode three months. And when the Jews laid wait for him, as he was about to sail into Syria, he purposed to return through Macedonia.
4பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தொபையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டாராகிய தீகிக்கும் துரோப்பீமும், ஆசியாநாடுவரைக்கும் அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள்.And there accompanied him into Asia Sopater of Berea; and of the Thessalonians, Aristarchus and Secundus; and Gaius of Derbe, and Timotheus; and of Asia, Tychicus and Trophimus.
5இவர்கள் முன்னாகப் போய், துரோவா பட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.These going before tarried for us at Troas.
6புளிப்பில்லா அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பிபட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம்.And we sailed away from Philippi after the days of unleavened bread, and came unto them to Troas in five days; where we abode seven days.
7வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரி மட்டும் பிரசங்கித்தான்.And upon the first day of the week, when the disciples came together to break bread, Paul preached unto them, ready to depart on the morrow; and continued his speech until midnight.
8அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது.And there were many lights in the upper chamber, where they were gathered together.
9அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்.And there sat in a window a certain young man named Eutychus, being fallen into a deep sleep: and as Paul was long preaching, he sunk down with sleep, and fell down from the third loft, and was taken up dead.
10உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான்.And Paul went down, and fell on him, and embracing him said, Trouble not yourselves; for his life is in him.
11பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டு புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டு, பின்பு புறப்பட்டான்.When he therefore was come up again, and had broken bread, and eaten, and talked a long while, even till break of day, so he departed.
12அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.And they brought the young man alive, and were not a little comforted.
13பவுல் ஆசோபட்டணம் வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால், அவன் திட்டம்பண்ணியிருந்தபடியே, நாங்கள் கப்பல் ஏறி, அந்தப்பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம்.And we went before to ship, and sailed unto Assos, there intending to take in Paul: for so had he appointed, minding himself to go afoot.
14அவன் ஆசோபட்டணத்திலே எங்களைக் கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம்.And when he met with us at Assos, we took him in, and came to Mitylene.
15அவ்விடம்விட்டு, மறுநாளிலே கீயுதீவுக்கு எதிராக வந்து,And we sailed thence, and came the next day over against Chios; and the next day we arrived at Samos, and tarried at Trogyllium; and the next day we came to Miletus.
16பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்கவேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்துபட்டணத்துக்கு வந்தோம்.For Paul had determined to sail by Ephesus, because he would not spend the time in Asia: for he hasted, if it were possible for him, to be at Jerusalem the day of Pentecost.
17மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான்.And from Miletus he sent to Ephesus, and called the elders of the church.
18அவர்கள் தன்னிடத்தில் வந்து சேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.And when they were come to him, he said unto them, Ye know, from the first day that I came into Asia, after what manner I have been with you at all seasons,
19வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்.Serving the LORD with all humility of mind, and with many tears, and temptations, which befell me by the lying in wait of the Jews:
20பிரயோஜனமானவைகைளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்கு பிரசங்கித்து உபதேசம்பண்ணி,And how I kept back nothing that was profitable unto you, but have shewed you, and have taught you publickly, and from house to house,
21தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன்.Testifying both to the Jews, and also to the Greeks, repentance toward God, and faith toward our Lord Jesus Christ.
22இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன்.And now, behold, I go bound in the spirit unto Jerusalem, not knowing the things that shall befall me there:
23கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.Save that the Holy Ghost witnesseth in every city, saying that bonds and afflictions abide me.
24ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.But none of these things move me, neither count I my life dear unto myself, so that I might finish my course with joy, and the ministry, which I have received of the Lord Jesus, to testify the gospel of the grace of God.
25இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன்.And now, behold, I know that ye all, among whom I have gone preaching the kingdom of God, shall see my face no more.
26தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே,Wherefore I take you to record this day, that I am pure from the blood of all men.
27எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.For I have not shunned to declare unto you all the counsel of God.
28ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.Take heed therefore unto yourselves, and to all the flock, over the which the Holy Ghost hath made you overseers, to feed the church of God, which he hath purchased with his own blood.
29நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.For I know this, that after my departing shall grievous wolves enter in among you, not sparing the flock.
30உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.Also of your own selves shall men arise, speaking perverse things, to draw away disciples after them.
31ஆனபடியால், நான் மூன்றுவருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.Therefore watch, and remember, that by the space of three years I ceased not to warn every one night and day with tears.
32இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாகப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.And now, brethren, I commend you to God, and to the word of his grace, which is able to build you up, and to give you an inheritance among all them which are sanctified.
33ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை.I have coveted no man's silver, or gold, or apparel.
34நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.Yea, ye yourselves know, that these hands have ministered unto my necessities, and to them that were with me.
35இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.I have shewed you all things, how that so labouring ye ought to support the weak, and to remember the words of the Lord Jesus, how he said, It is more blessed to give than to receive.
36இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம்பண்ணினான்.And when he had thus spoken, he kneeled down, and prayed with them all.
37அவர்கள் மிகவும் அழுது என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு,And they all wept sore, and fell on Paul's neck, and kissed him,
38பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல்வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள்Sorrowing most of all for the words which he spake, that they should see his face no more. And they accompanied him unto the ship.
1Kalakam amarnthapinpu, pavul seesharaith thannidaththirku varavalaiththu, vinavikkonndu, makkethoniyaavukkuppokap purappattan.And after the uproar was ceased, Paul called unto him the disciples, and embraced them, and departed for to go into Macedonia.
2Avan anthath thisaikalilae sutti nadanthu, seesharkalukku vekuvaayp puththisolli, kiraekku thaesaththilae sernthaan.And when he had gone over those parts, and had given them much exhortation, he came into Greece,
3Angae moontumaatham sanjariththapinpu, avan kappal aeri, seeriyaathaesaththukkuppoka manathaayirunthapothu, yootharkal avanukkuth theemaiseyyumpati rakasiyamaana yosanaikonntirunthapatiyaal, makkethoniyaa thaesaththin valiyaayth thirumpippokath theermaanam pannnninaanAnd there abode three months. And when the Jews laid wait for him, as he was about to sail into Syria, he purposed to return through Macedonia.
4Peroyaa ooraanaakiya sopaththarum, thesalonikkaeyaril aristharkkum, sekkunthum, thopaiyaanaakiya kaayuvum, theemoththaeyum, aasiyaa naattaraakiya theekikkum thuroppeemum, aasiyaanaaduvaraikkum avanukku valiththunnaiyaay vanthaarkal.And there accompanied him into Asia Sopater of Berea; and of the Thessalonians, Aristarchus and Secundus; and Gaius of Derbe, and Timotheus; and of Asia, Tychicus and Trophimus.
5Ivarkal munnaakap poy, thurovaa pattanaththilae engalukkaakak kaaththirunthaarkal.These going before tarried for us at Troas.
6Pulippillaa appappanntikai naatkalukkuppinpu naangal kappal aerip pilippipattanaththai vittu ainthu naalaikkullae thurovaapattanaththukku avarkalidaththil vanthu, angae aelunaal thangiyirunthom.And we sailed away from Philippi after the days of unleavened bread, and came unto them to Troas in five days; where we abode seven days.
7Vaaraththin muthalnaalilae, appam pitkumpati seesharkal kootivanthirukkaiyil, pavul maraுnaalilae purappadavaenndumentirunthu, avarkaludanae sampaashiththu, naduraaththiri mattum pirasangiththaan.And upon the first day of the week, when the disciples came together to break bread, Paul preached unto them, ready to depart on the morrow; and continued his speech until midnight.
8Avarkal kootiyiruntha maelveettilae anaeka vilakkukal vaiththirunthathu.And there were many lights in the upper chamber, where they were gathered together.
9Appoluthu aiththiku ennum paerkonnda oru vaalipan jannalil utkaarnthirunthu, pavul nedunaeram pirasangam pannnnikkonntirukkaiyil, mikuntha thookkamatainthu, niththiraimayakkaththinaal saaynthu, moontam meththaiyilirunthu geelae vilunthu, mariththavanaay edukkappattan.And there sat in a window a certain young man named Eutychus, being fallen into a deep sleep: and as Paul was long preaching, he sunk down with sleep, and fell down from the third loft, and was taken up dead.
10Udanae pavul irangippoy, avanmael vilunthu, avanai annaiththukkonndu: kalangaathirungal, ivan uyir ivanukkul irukkirathu entan.And Paul went down, and fell on him, and embracing him said, Trouble not yourselves; for his life is in him.
11Pinpu aerippoy, appam pittu pusiththu, vitiyarkaalamalavum vekunaeram paesikkonndu, pinpu purappattan.When he therefore was come up again, and had broken bread, and eaten, and talked a long while, even till break of day, so he departed.
12Antha vaalipanai avarkal uyirullavanaakak koottikkonnduvanthu, mikuntha aaraுthalatainthaarkal.And they brought the young man alive, and were not a little comforted.
13Pavul aasopattanam varaikkum karaivaliyaayp poka manathaayirunthapatiyaal, avan thittampannnniyirunthapatiyae, naangal kappal aeri, anthappattanaththil avanai aettikkollumpati munnaaka angae poyirunthom.And we went before to ship, and sailed unto Assos, there intending to take in Paul: for so had he appointed, minding himself to go afoot.
14Avan aasopattanaththilae engalaik kanndapothu, naangal avanai aettikkonndu, miththilaenae pattanaththukku vanthom.And when he met with us at Assos, we took him in, and came to Mitylene.
15Avvidamvittu, maraுnaalilae geeyutheevukku ethiraaka vanthu,And we sailed thence, and came the next day over against Chios; and the next day we arrived at Samos, and tarried at Trogyllium; and the next day we came to Miletus.
16Pavul koodumaanaal penthekosthae panntikainaalilae erusalaemilirukkavaenndumentu theevirappattathinimiththam, thaan aasiyaavilae kaalampokkaathapatikku, epaesu pattanaththaik kadanthu pokavaenndumentu theermaaniththathinaal, maraுnaalilae saamutheevu pitiththu, thurokilliyon oorththuraiyilae thangi, maraுnaal milaeththupattanaththukku vanthom.For Paul had determined to sail by Ephesus, because he would not spend the time in Asia: for he hasted, if it were possible for him, to be at Jerusalem the day of Pentecost.
17Milaeththuvilirunthu avan epaesuvukku aal anuppi, Sabaiyin moopparai varavalaiththaan.And from Miletus he sent to Ephesus, and called the elders of the church.
18Avarkal thannidaththil vanthu sernthapoluthu, avan avarkalai Nnokki: naan aasiyaanaattil vantha muthalnaal thodangi ellaak kaalangalilum ungaludanae innavithamaay irunthaen enpathai neengal arinthirukkireerkal.And when they were come to him, he said unto them, Ye know, from the first day that I came into Asia, after what manner I have been with you at all seasons,
19Veku manaththaalmaiyodum, mikuntha kannnneerodum, yootharutaiya theemaiyaana yosanaikalaal enakku naeritta sothanaikalodum, naan karththaraich seviththaen.Serving the LORD with all humility of mind, and with many tears, and temptations, which befell me by the lying in wait of the Jews:
20Pirayojanamaanavaikailil ontaiyum naan ungalukku maraiththuvaikkaamal, veliyarangamaaka veedukalthoraுm ungalukku pirasangiththu upathaesampannnni,And how I kept back nothing that was profitable unto you, but have shewed you, and have taught you publickly, and from house to house,
21Thaevanidaththirku mananthirumpuvathaikkuriththum, nammutaiya karththaraakiya YesuKristhuvai visuvaasippathaikkuriththum, naan yootharukkum kiraekkarukkum saatchiyaaka ariviththaen.Testifying both to the Jews, and also to the Greeks, repentance toward God, and faith toward our Lord Jesus Christ.
22Ippoluthum naan aaviyilae kattunndavanaay erusalaemukkup pokiraேn; angae enakku naeridungaariyangalai naan ariyaen.And now, behold, I go bound in the spirit unto Jerusalem, not knowing the things that shall befall me there:
23Kattukalum upaththiravangalum enakku vaiththirukkirathentu Parisuththa Aaviyaanavar pattananthoraுm therivikkirathaimaaththiram arinthirukkiraேn.Save that the Holy Ghost witnesseth in every city, saying that bonds and afflictions abide me.
24Aakilum avaikalil ontaiyunguriththuk kavalaippataen; en piraananaiyum naan arumaiyaaka ennnneen; en ottaththaich santhoshaththotae mutikkavum, thaevanutaiya kirupaiyin suviseshaththaip pirasangampannnumpatikku naan karththaraakiya Yesuvinidaththil petta ooliyaththai niraivaettavumae virumpukiraேn.But none of these things move me, neither count I my life dear unto myself, so that I might finish my course with joy, and the ministry, which I have received of the Lord Jesus, to testify the gospel of the grace of God.
25Itho, naan ungalukkullae sanjariththu, thaevanutaiya raajyaththaik kuriththup pirasangampannnninathaik kaettavarkalaakiya neengalellaarum ini en mukaththaip paarkkamaattirkalentu arinthirukkiraேn.And now, behold, I know that ye all, among whom I have gone preaching the kingdom of God, shall see my face no more.
26Thaevanutaiya aalosanaiyil ontaiyum naan maraiththu vaikkaamal, ellaavattaைyum ungalukku ariviththapatiyinaalae,Wherefore I take you to record this day, that I am pure from the blood of all men.
27Ellaarutaiya iraththappalikkum neengi naan suththamaayirukkiraேnenpatharku ungalai intaiyaththinam saatchikalaaka vaikkiraேn.For I have not shunned to declare unto you all the counsel of God.
28Aakaiyaal, ungalaikkuriththum, Dhevan thammutaiya suyaraththaththinaalae sampaathiththukkonnda thamathu Sabaiyai maeyppatharkup Parisuththa aavi ungalaik kannkaannikalaaka vaiththa manthai muluvathaiyunguriththum, echcharikkaiyaayirungal.Take heed therefore unto yourselves, and to all the flock, over the which the Holy Ghost hath made you overseers, to feed the church of God, which he hath purchased with his own blood.
29Naan ponapinpu manthaiyaith thappavidaatha kotithaana onaaykal ungalukkullae varum.For I know this, that after my departing shall grievous wolves enter in among you, not sparing the flock.
30Ungalilum silar elumpi, seesharkalaith thangalidaththil iluththukkollumpati maaraுpaadaanavaikalaip pothippaarkalentu arinthirukkiraேn.Also of your own selves shall men arise, speaking perverse things, to draw away disciples after them.
31Aanapatiyaal, naan moontuvarushakaalamaay iravum pakalum kannnneerotae itaividaamal avanavanukkup puththisollikkonnduvanthathai ninaiththu viliththirungal.Therefore watch, and remember, that by the space of three years I ceased not to warn every one night and day with tears.
32Ippoluthum sakothararae, neengal pakthiviruththiyataiyavum, Parisuththamaakappatta anaivarukkullum ungalukkuch suthantharaththaik kodukkavum vallavaraayirukkira thaevanukkum avarutaiya kirupaiyulla vasanaththukkum ungalai oppukkodukkiraேn.And now, brethren, I commend you to God, and to the word of his grace, which is able to build you up, and to give you an inheritance among all them which are sanctified.
33Oruvanutaiya velliyaiyaakilum ponnaiyaakilum vasthiraththaiyaakilum naan ichchikkavillai.I have coveted no man's silver, or gold, or apparel.
34Neengal arinthirukkirapati, enakkum ennudanaekooda irunthavarkalukkum vaenntiyavaikalukkaaka inthak kaikalae vaelaiseythathu.Yea, ye yourselves know, that these hands have ministered unto my necessities, and to them that were with me.
35Ippatip pirayaasappattu, palaveenaraith thaangavum, vaangukirathaippaarkkilum kodukkirathae paakkiyam entu karththaraakiya Yesu sonna vaarththaikalai ninaikkavum vaenndumentu ellaavithaththilaeyum ungalukkuk kaannpiththaen entan.I have shewed you all things, how that so labouring ye ought to support the weak, and to remember the words of the Lord Jesus, how he said, It is more blessed to give than to receive.
36Ivaikalaich sonnapinpu, avan mulangaarpatiyittu, avarkalellaarodungaூda Jebampannnninaan.And when he had thus spoken, he kneeled down, and prayed with them all.
37Avarkal mikavum aluthu en mukaththai neengal inip paarkkamaattirkalentu avan sonna vaarththaiyaikkuriththu athikamaayth thukkappattu,And they all wept sore, and fell on Paul's neck, and kissed him,
38Pavulin kaluththaik kattikkonndu, avanai muththanjaெythu, kappalvaraikkum avanudanae koodapponaarkalSorrowing most of all for the words which he spake, that they should see his face no more. And they accompanied him unto the ship.