1என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே.Would to God ye could bear with me a little in my folly: and indeed bear with me.
2நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.For I am jealous over you with godly jealousy: for I have espoused you to one husband, that I may present you as a chaste virgin to Christ.
3ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.But I fear, lest by any means, as the serpent beguiled Eve through his subtilty, so your minds should be corrupted from the simplicity that is in Christ.
4எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.For if he that cometh preacheth another Jesus, whom we have not preached, or if ye receive another spirit, which ye have not received, or another gospel, which ye have not accepted, ye might well bear with him.
5மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்.For I suppose I was not a whit behind the very chiefest apostles.
6நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல; எந்த விஷயத்திலும் எல்லாருக்கு முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே.But though I be rude in speech, yet not in knowledge; but we have been throughly made manifest among you in all things.
7நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ?Have I committed an offence in abasing myself that ye might be exalted, because I have preached to you the gospel of God freely?
8உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.I robbed other churches, taking wages of them, to do you service.
9நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள், எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன்.And when I was present with you, and wanted, I was chargeable to no man: for that which was lacking to me the brethren which came from Macedonia supplied: and in all things I have kept myself from being burdensome unto you, and so will I keep myself.
10அகாயாநாட்டின் திசைகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லையென்று என்னிலுள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன்.As the truth of Christ is in me, no man shall stop me of this boasting in the regions of Achaia.
11இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களைச் சிநேகியாதபடியினாலேயோ? தேவன் அறிவார்.Wherefore? because I love you not? God knoweth.
12மேலும், எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்.But what I do, that I will do, that I may cut off occasion from them which desire occasion; that wherein they glory, they may be found even as we.
13அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.For such are false apostles, deceitful workers, transforming themselves into the apostles of Christ.
14அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.And no marvel; for Satan himself is transformed into an angel of light.
15ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.Therefore it is no great thing if his ministers also be transformed as the ministers of righteousness; whose end shall be according to their works.
16பின்னும் நான் சொல்லுகிறேன்; ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.I say again, Let no man think me a fool; if otherwise, yet as a fool receive me, that I may boast myself a little.
17இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன்.That which I speak, I speak it not after the Lord, but as it were foolishly, in this confidence of boasting.
18அநேகர் மாம்சத்திற்கேற்றபடி மேன்மைபாராட்டிக்கொள்ளுகையில், நானும் மேன்மைபாராட்டுவேன்.Seeing that many glory after the flesh, I will glory also.
19நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாய்ச் சகித்திருக்கிறீர்களே.For ye suffer fools gladly, seeing ye yourselves are wise.
20ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே.For ye suffer, if a man bring you into bondage, if a man devour you, if a man take of you, if a man exalt himself, if a man smite you on the face.
21நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப் பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாயிருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாயிருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாய்ப் பேசுகிறேன்.I speak as concerning reproach, as though we had been weak. Howbeit whereinsoever any is bold, (I speak foolishly,) I am bold also.
22அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிரகாமின் சந்ததியான்.Are they Hebrews? so am I. Are they Israelites? so am I. Are they the seed of Abraham? so am I.
23அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.Are they ministers of Christ? (I speak as a fool) I am more; in labours more abundant, in stripes above measure, in prisons more frequent, in deaths oft.
24யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்;Of the Jews five times received I forty stripes save one.
25மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.Thrice was I beaten with rods, once was I stoned, thrice I suffered shipwreck, a night and a day I have been in the deep;
26அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;In journeyings often, in perils of waters, in perils of robbers, in perils by mine own countrymen, in perils by the heathen, in perils in the city, in perils in the wilderness, in perils in the sea, in perils among false brethren;
27பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.In weariness and painfulness, in watchings often, in hunger and thirst, in fastings often, in cold and nakedness.
28இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.Beside those things that are without, that which cometh upon me daily, the care of all the churches.
29ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?Who is weak, and I am not weak? who is offended, and I burn not?
30நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்.If I must needs glory, I will glory of the things which concern mine infirmities.
31என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.The God and Father of our Lord Jesus Christ, which is blessed for evermore, knoweth that I lie not.
32தமஸ்குபட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல்வைத்துக் காத்தான்;In Damascus the governor under Aretas the king kept the city of the Damascenes with a garrison, desirous to apprehend me:
33அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில்வழியாய் இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.And through a window in a basket was I let down by the wall, and escaped his hands.
1En puththiyeenaththai neengal satte sakiththaal nalamaayirukkum; ennaich sakiththumirukkireerkalae.Would to God ye could bear with me a little in my folly: and indeed bear with me.
2Naan ungalaik karpulla kanniyaakak Kristhu ennum orae purushanukku oppukkodukka niyamiththapatiyaal, ungalukkaaka thaevavairaakkiyamaana vairaakkiyangaொnntirukkiraேn.For I am jealous over you with godly jealousy: for I have espoused you to one husband, that I may present you as a chaste virgin to Christ.
3Aakilum, sarppamaanathu thannutaiya thanthiraththinaalae aevaalai vanjiththathupola, ungal manathum Kristhuvaippattiya unnmaiyinintu vilakumpati kedukkappadumoventu payanthirukkiraேn.But I fear, lest by any means, as the serpent beguiled Eve through his subtilty, so your minds should be corrupted from the simplicity that is in Christ.
4Eppatiyenil, ungalidaththil varukiravan naangal pirasangiyaatha vaeroru Yesuvaip pirasangiththaanaanaal, allathu neengal pettiraatha vaeroru aaviyaiyum, neengal aettaுkkollaatha vaeroru suviseshaththaiyum pettaீrkalaanaal, nantaych sakiththiruppeerkalae.For if he that cometh preacheth another Jesus, whom we have not preached, or if ye receive another spirit, which ye have not received, or another gospel, which ye have not accepted, ye might well bear with him.
5Makaa pirathaana apposthalarilum, naan ontilum kuraivullavanallaventu ennnukiraேn.For I suppose I was not a whit behind the very chiefest apostles.
6Naan paechchilae kallaathavanaayirunthaalum, arivilae kallaathavanalla; entha vishayaththilum ellaarukku munpaakavum ungalukkullae naangal velippattirukkiromae.But though I be rude in speech, yet not in knowledge; but we have been throughly made manifest among you in all things.
7Neengal uyarththappadumpati naan ennaiththaanae thaalththi, thaevanutaiya suviseshaththai ilavasamaay ungalukkup pirasangiththathinaalae kuttanjaெythaeno?Have I committed an offence in abasing myself that ye might be exalted, because I have preached to you the gospel of God freely?
8Ungalukku ooliyanjaெyyumpatikku, mattach Sabaikalidaththil sampalaththaippettaு, avarkalaik kollaiyittaேn.I robbed other churches, taking wages of them, to do you service.
9Naan ungalotirunthu kuraivupattapothum, oruvaraiyum naan varuththappaduththavillai; makkethoniyaavilirunthu vantha sakotharar en kuraivai niraivaakkinaarkal, evvithaththilaeyum ungalukkup paaramaayiraathapatikku jaakkirathaiyaayirunthaen, inimaelum jaakkirathaiyaayiruppaen.And when I was present with you, and wanted, I was chargeable to no man: for that which was lacking to me the brethren which came from Macedonia supplied: and in all things I have kept myself from being burdensome unto you, and so will I keep myself.
10Akaayaanaattin thisaikalilae inthap pukalchchi ennaivittu neenguvathillaiyentu ennilulla Kristhuvinutaiya saththiyaththaikkonndu sollukiraேn.As the truth of Christ is in me, no man shall stop me of this boasting in the regions of Achaia.
11Ippatich sollavaenntiyathenna? Naan ungalaich sinaekiyaathapatiyinaalaeyo? Dhevan arivaar.Wherefore? because I love you not? God knoweth.
12Maelum, engalai virothikkach samayanthaedukiravarkalukkuch samayam kitaiyaathapatikku, thangalaikkuriththu maenmaipaaraattukira kaariyaththil avarkal engalaippolak kaanappadumpati, naan seyvathaiyae innum seyvaen.But what I do, that I will do, that I may cut off occasion from them which desire occasion; that wherein they glory, they may be found even as we.
13Appatippattavarkal kalla apposthalarkal, kapadamulla vaelaiyaatkal, Kristhuvinutaiya apposthalarin vaeshaththaith thariththukkonndavarkalaayirukkiraarkal.For such are false apostles, deceitful workers, transforming themselves into the apostles of Christ.
14Athu aachchariyamalla, saaththaanum oliyin thoothanutaiya vaeshaththaith thariththukkolvaanae.And no marvel; for Satan himself is transformed into an angel of light.
15Aakaiyaal avanutaiya ooliyakkaararum neethiyin ooliyakkaararutaiya vaeshaththaith thariththukkonndaal athu aachchariyamallavae; avarkal mutivu avarkal kiriyaikalukkuththakkathaayirukkum.Therefore it is no great thing if his ministers also be transformed as the ministers of righteousness; whose end shall be according to their works.
16Pinnum naan sollukiraேn; oruvanum ennaip puththiyeenanentu ennnavaenndaam; appati ennnninaal, naanum satte maenmaipaaraattumpati, ennaip puththiyeenanaippolaakilum aettaுkkollungal.I say again, Let no man think me a fool; if otherwise, yet as a fool receive me, that I may boast myself a little.
17Ippati naan sollukirathu karththarukkaettapati sollaamal, maenmaipaaraattum thairiyaththinaalae puththiyeenanaippolach sollukiraேn.That which I speak, I speak it not after the Lord, but as it were foolishly, in this confidence of boasting.
18Anaekar maamsaththirkaettapati maenmaipaaraattikkollukaiyil, naanum maenmaipaaraattuvaen.Seeing that many glory after the flesh, I will glory also.
19Neengal puththiyullavarkalaayirunthu puththiyillaathavarkalaich santhoshamaaych sakiththirukkireerkalae.For ye suffer fools gladly, seeing ye yourselves are wise.
20Oruvan ungalaich siraiyaakkinaalum, oruvan ungalaip patchiththaalum, oruvan ungalaik kaivasappaduththinaalum, oruvan thannai uyarththinaalum, oruvan ungalai mukaththil arainthaalum sakiththirukkireerkalae.For ye suffer, if a man bring you into bondage, if a man devour you, if a man take of you, if a man exalt himself, if a man smite you on the face.
21Naangal palaveenaraanathupola, engalukku vantha kanaveenaththaikkuriththup paesukiraேn; oruvan ethilae thunnivullavanaayirukkiraano athilae naanum thunnivullavanaayirukkiraேn; ippatip puththiyeenamaayp paesukiraேn.I speak as concerning reproach, as though we had been weak. Howbeit whereinsoever any is bold, (I speak foolishly,) I am bold also.
22Avarkal epireyaraa? Naanum epireyan; avarkal isravaelaraa? Naanum isravaelan; avarkal aapirakaamin santhathiyaaraa? Naanum aapirakaamin santhathiyaan.Are they Hebrews? so am I. Are they Israelites? so am I. Are they the seed of Abraham? so am I.
23Avarkal Kristhuvin ooliyakkaararaa? Naan athikam; puththiyeenamaayp paesukiraேn; naan athikamaayp pirayaasappattavan, athikamaay atipattavan, athikamaayk kaavalkalil vaikkappattavan, anaekantharam marana avathiyil akappattavan.Are they ministers of Christ? (I speak as a fool) I am more; in labours more abundant, in stripes above measure, in prisons more frequent, in deaths oft.
24Yootharkalaal ontukuraiya naarpathatiyaaka ainthutharam atipattaேn;Of the Jews five times received I forty stripes save one.
25Moontutharam milaaraுkalaal atipattaேn, orutharam kalleriyunntaen, moontutharam kapparsethaththil irunthaen, kadalilae oru iraappakal muluvathum pokkinaen.Thrice was I beaten with rods, once was I stoned, thrice I suffered shipwreck, a night and a day I have been in the deep;
26Anaekantharam pirayaanampannnninaen; aaraுkalaal vantha mosangalilum, kallaraal vantha mosangalilum, en suyajanangalaal vantha mosangalilum, anniya janangalaal vantha mosangalilum, pattanangalil unndaana mosangalilum, vanaantharaththil unndaana mosangalilum, samuththiraththil unndaana mosangalilum, kallachchakothararidaththil unndaana mosangalilum;In journeyings often, in perils of waters, in perils of robbers, in perils by mine own countrymen, in perils by the heathen, in perils in the city, in perils in the wilderness, in perils in the sea, in perils among false brethren;
27Pirayaasaththilum, varuththaththilum, anaekamurai kannvilippukalilum, pasiyilum thaakaththilum, anaekamurai upavaasangalilum, kulirilum, nirvaanaththilum irunthaen.In weariness and painfulness, in watchings often, in hunger and thirst, in fastings often, in cold and nakedness.
28Ivai muthalaanavaikalaiyallaamal, ellaach Sabaikalaikkuriththum unndaayirukkira kavalai ennai naalthoraுm nerukkukirathu.Beside those things that are without, that which cometh upon me daily, the care of all the churches.
29Oruvan palaveenanaanaal naanum palaveenanaakirathillaiyo? Oruvan idarinaal en manam eriyaathirukkumo?Who is weak, and I am not weak? who is offended, and I burn not?
30Naan maenmaipaaraattavaenndumaanaal, en palaveenaththirkaduththavaikalaik kuriththu maenmaipaaraattuvaen.If I must needs glory, I will glory of the things which concern mine infirmities.
31Ententaikkum sthoththirikkappatta thaevanum, nammutaiya karththaraakiya YesuKristhuvin pithaavumaanavar naan poy sollukirathillaiyentu arivaar.The God and Father of our Lord Jesus Christ, which is blessed for evermore, knoweth that I lie not.
32Thamaskupattanaththu araeththaa raajaavinutaiya senaiththalaivan ennaip pitikkavaenndumentu thamaskarutaiya pattanaththaik kaavalvaiththuk kaaththaan;In Damascus the governor under Aretas the king kept the city of the Damascenes with a garrison, desirous to apprehend me:
33Appoluthu naan kootaiyilae vaikkappattu, jannalilirunthu mathilvaliyaay irakkividappattu, avanutaiya kaikkuth thappinaen.And through a window in a basket was I let down by the wall, and escaped his hands.