1அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது; எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று; அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள்.And the men of Ephraim said unto him, Why hast thou served us thus, that thou calledst us not, when thou wentest to fight with the Midianites? And they did chide with him sharply.
2அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப்பார்க்கிலும், எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா?And he said unto them, What have I done now in comparison of you? Is not the gleaning of the grapes of Ephraim better than the vintage of Abiezer?
3தேவன் உங்கள் கையிலே மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன்மேலிருந்த அவர்களுடைய கோபம் ஆறிற்று.God hath delivered into your hands the princes of Midian, Oreb and Zeeb: and what was I able to do in comparison of you? Then their anger was abated toward him, when he had said that.
4கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தும் (சத்துருவை) பின் தொடர்ந்தார்கள்.And Gideon came to Jordan, and passed over, he, and the three hundred men that were with him, faint, yet pursuing them.
5அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் மீதியானியரின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.And he said unto the men of Succoth, Give, I pray you, loaves of bread unto the people that follow me; for they be faint, and I am pursuing after Zebah and Zalmunna, kings of Midian.
6அதற்குச் சுக்கோத்தின் பிரபுக்கள்: உன் சேனைக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்றார்கள்.And the princes of Succoth said, Are the hands of Zebah and Zalmunna now in thine hand, that we should give bread unto thine army?
7அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என் கையில் ஒப்புக்கொடுக்கும் போது, உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,And Gideon said, Therefore when the LORD hath delivered Zebah and Zalmunna into mine hand, then I will tear your flesh with the thorns of the wilderness and with briers.
8அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப்போய், அவ்வூராரிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனுஷர் பிரதியுத்தரமாகச் சொன்னபடியே பெனூவேலின் மனுஷரும் அவனுக்குச் சொன்னார்கள்.And he went up thence to Penuel, and spake unto them likewise: and the men of Penuel answered him as the men of Succoth had answered him.
9அப்பொழுது அவன், பெனூவேலின் மனுஷரைப் பார்த்து: நான் சமாதானத்தோடே திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்.And he spake also unto the men of Penuel, saying, When I come again in peace, I will break down this tower.
10சேபாவும் சல்முனாவும் அவர்களோடேகூட அவர்களுடைய சேனைகளும் ஏறக்குறைய பதினையாயிரம் பேர் கர்கோரில் இருந்தார்கள்; பட்டயம் உருவத்தக்க லட்சத்து இருபதினாயிரம் பேர் விழுந்தபடியால், கிழக்கத்தியாரின் சகல சேனையிலும் இவர்கள் மாத்திரம் மீந்திருந்தார்கள்.Now Zebah and Zalmunna were in Karkor, and their hosts with them, about fifteen thousand men, all that were left of all the hosts of the children of the east: for there fell an hundred and twenty thousand men that drew sword.
11கிதியோன் கூடாரங்களிலே குடியிருக்கிறவர்கள் வழியாய் நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கே போய், அந்தச் சேனை பயமில்லை என்றிருந்தபோது, அதை முறிய அடித்தான்.And Gideon went up by the way of them that dwelt in tents on the east of Nobah and Jogbehah, and smote the host; for the host was secure.
12சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியரின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, சேனை முழுவதையும் கலங்கடித்தான்.And when Zebah and Zalmunna fled, he pursued after them, and took the two kings of Midian, Zebah and Zalmunna, and discomfited all the host.
13யோவாசின் குமாரனாகிய கிதியோன் யுத்தம்பண்ணி, சூரியன் உதிக்கும் முன்னே திரும்பிவந்தபோது,And Gideon the son of Joash returned from battle before the sun was up,
14சுக்கோத்தின் மனுஷரில் ஒரு வாலிபனைப் பிடித்து, அவனிடத்தில் விசாரித்தான்; அவன் சுக்கோத்தின் பிரபுக்களும் அதின் மூப்பருமாகிய எழுபத்தேழு மனுஷரின் பேரை அவனுக்கு எழுதிக்கொடுத்தான்.And caught a young man of the men of Succoth, and inquired of him: and he described unto him the princes of Succoth, and the elders thereof, even threescore and seventeen men.
15அவன் சுக்கோத்து ஊராரிடத்தில் வந்து: இதோ, விடாய்த்திருக்கிற உன் மனுஷருக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்று நீங்கள் என்னை நிந்தித்துச் சொன்ன சேபாவும் சல்முனாவும் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி,And he came unto the men of Succoth, and said, Behold Zebah and Zalmunna, with whom ye did upbraid me, saying, Are the hands of Zebah and Zalmunna now in thine hand, that we should give bread unto thy men that are weary?
16பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் முள்ளுகளையும் நெரிஞ்சில்களையும் கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனுஷருக்குப் புத்திவரப்பண்ணி,And he took the elders of the city, and thorns of the wilderness and briers, and with them he taught the men of Succoth.
17பெனூவேலின் கோபுரத்தை இடித்து, அவ்வூர் மனுஷரையும் கொன்று போட்டான்.And he beat down the tower of Penuel, and slew the men of the city.
18பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்று போட்ட அந்த மனுஷர் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போலிருந்தான் என்றார்கள்.Then said he unto Zebah and Zalmunna, What manner of men were they whom ye slew at Tabor? And they answered, As thou art, so were they; each one resembled the children of a king.
19அப்பொழுது அவன்: அவர்கள் என் சகோதரரும் என் தாயின் பிள்ளைகளுமாயிருந்தார்கள்; அவர்களை உயிரோடே வைத்திருந்தீர்களானால், உங்களைக் கொல்லாதிருப்பேன் என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,And he said, They were my brethren, even the sons of my mother: as the LORD liveth, if ye had saved them alive, I would not slay you.
20தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்.And he said unto Jether his firstborn, Up, and slay them. But the youth drew not his sword: for he feared, because he was yet a youth.
21அப்பொழுது சேபாவும் சல்முனாவும்; நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக் காறைகளை எடுத்துக்கொண்டான்.Then Zebah and Zalmunna said, Rise thou, and fall upon us: for as the man is, so is his strength. And Gideon arose, and slew Zebah and Zalmunna, and took away the ornaments that were on their camels' necks.
22அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.Then the men of Israel said unto Gideon, Rule thou over us, both thou, and thy son, and thy son's son also: for thou hast delivered us from the hand of Midian.
23அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்.And Gideon said unto them, I will not rule over you, neither shall my son rule over you: the LORD shall rule over you.
24பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.And Gideon said unto them, I would desire a request of you, that ye would give me every man the earrings of his prey. (For they had golden earrings, because they were Ishmaelites.)
25இஸ்ரவேலர்: சந்தோஷமாய்க் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு வஸ்திரத்தை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.And they answered, We will willingly give them. And they spread a garment, and did cast therein every man the earrings of his prey.
26பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது.And the weight of the golden earrings that he requested was a thousand and seven hundred shekels of gold; beside ornaments, and collars, and purple raiment that was on the kings of Midian, and beside the chains that were about their camels' necks.
27அதினால் கிதியோன் ஒரு எபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று.And Gideon made an ephod thereof, and put it in his city, even in Ophrah: and all Israel went thither a whoring after it: which thing became a snare unto Gideon, and to his house.
28இந்தப்பிரகாரம் மீதியானியர் திரும்ப தலையெடுக்கக் கூடாதபடிக்கு, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் நாற்பதுவருஷம் அமைதலாயிருந்தது.Thus was Midian subdued before the children of Israel, so that they lifted up their heads no more. And the country was in quietness forty years in the days of Gideon.
29யோவாசின் குமாரனாகிய யெருபாகால் போய், தன் வீட்டிலே வாசமாயிருந்தான்.And Jerubbaal the son of Joash went and dwelt in his own house.
30கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர்.And Gideon had threescore and ten sons of his body begotten: for he had many wives.
31சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு அபிமெலேக்கு என்று பேரிட்டான்.And his concubine that was in Shechem, she also bare him a son, whose name he called Abimelech.
32பின்பு யோவாசின் குமாரனாகிய கிதியோன் நல்ல விருத்தாப்பியத்திலே மரித்து, ஒப்ராவிலே தன் தகப்பனாகிய யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்.And Gideon the son of Joash died in a good old age, and was buried in the sepulchre of Joash his father, in Ophrah of the Abiezrites.
33கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய், பாகல்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்.And it came to pass, as soon as Gideon was dead, that the children of Israel turned again, and went a whoring after Baalim, and made Baalberith their god.
34இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினையாமலும்,And the children of Israel remembered not the LORD their God, who had delivered them out of the hands of all their enemies on every side:
35கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலுக்குச் செய்த சகல நன்மைக்குந்தக்க தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.Neither showed they kindness to the house of Jerubbaal, namely, Gideon, according to all the goodness which he had showed unto Israel.
1Appoluthu eppiraayeem manushar avanai Nnokki: nee meethiyaaniyarmael yuththam pannnappokirapothu; engalai alaippikkavillaiyae, ippati nee engalukkuch seythathu enna entu; avanotae palaththa vaakkuvaatham pannnninaarkal.And the men of Ephraim said unto him, Why hast thou served us thus, that thou calledst us not, when thou wentest to fight with the Midianites? And they did chide with him sharply.
2Atharku avan: neengal seythatharku naan seythathu emmaaththiram? Apiyaesriyarin thiraatchappalaththin mulu araுppaippaarkkilum, eppiraayeemarin meethiyaana araுppu athikam allavaa?And he said unto them, What have I done now in comparison of you? Is not the gleaning of the grapes of Ephraim better than the vintage of Abiezer?
3Dhevan ungal kaiyilae meethiyaaniyarin athipathikalaakiya oraepaiyum sepaiyum oppukkoduththaarae; neengal seythathilum naan seyyakkootiyathu emmaaththiram entan; intha vaarththaiyai avan sonnapothu, avanmaeliruntha avarkalutaiya kopam aarittaு.God hath delivered into your hands the princes of Midian, Oreb and Zeeb: and what was I able to do in comparison of you? Then their anger was abated toward him, when he had said that.
4Kithiyon yorthaanukku vanthapothu, avanum avanotiruntha munnooraுpaerum athaik kadanthupoy, vidaayththirunthum (saththuruvai) pin thodarnthaarkal.And Gideon came to Jordan, and passed over, he, and the three hundred men that were with him, faint, yet pursuing them.
5Avan sukkoththin manusharai Nnokki: ennotirukkira janaththirkuch sila appangalaik kodungal; avarkal vidaayththirukkiraarkal, naan meethiyaaniyarin raajaakkalaakiya sepaavaiyum salmunaavaiyum pinthodarukiraேn entan.And he said unto the men of Succoth, Give, I pray you, loaves of bread unto the people that follow me; for they be faint, and I am pursuing after Zebah and Zalmunna, kings of Midian.
6Atharkuch sukkoththin pirapukkal: un senaikku naangal appam kodukkiratharkuch sepaa salmunaa enpavarkalin kai un kaivasamaayittaோ entarkal.And the princes of Succoth said, Are the hands of Zebah and Zalmunna now in thine hand, that we should give bread unto thine army?
7Appoluthu kithiyon avarkalai Nnokki: Karththar sepaavaiyum salmunaavaiyum en kaiyil oppukkodukkum pothu, ungal maamsaththai vanaantharaththin mullukalaalum nerinjilkalaalum kiliththuviduvaen entu solli,And Gideon said, Therefore when the LORD hath delivered Zebah and Zalmunna into mine hand, then I will tear your flesh with the thorns of the wilderness and with briers.
8Avvidam vittu, penoovaelukkuppoy, avvooraaridaththil anthappatiyae kaettan; sukkoththin manushar pirathiyuththaramaakach sonnapatiyae penoovaelin manusharum avanukkuch sonnaarkal.And he went up thence to Penuel, and spake unto them likewise: and the men of Penuel answered him as the men of Succoth had answered him.
9Appoluthu avan, penoovaelin manusharaip paarththu: naan samaathaanaththotae thirumpivarumpothu, inthak kopuraththai itiththuppoduvaen entan.And he spake also unto the men of Penuel, saying, When I come again in peace, I will break down this tower.
10Sepaavum salmunaavum avarkalotaekooda avarkalutaiya senaikalum aerakkuraiya pathinaiyaayiram paer karkoril irunthaarkal; pattayam uruvaththakka latchaththu irupathinaayiram paer vilunthapatiyaal, kilakkaththiyaarin sakala senaiyilum ivarkal maaththiram meenthirunthaarkal.Now Zebah and Zalmunna were in Karkor, and their hosts with them, about fifteen thousand men, all that were left of all the hosts of the children of the east: for there fell an hundred and twenty thousand men that drew sword.
11Kithiyon koodaarangalilae kutiyirukkiravarkal valiyaay Nnopaakukkum, yokipeyaavukkum kilakkae poy, anthach senai payamillai entirunthapothu, athai muriya atiththaan.And Gideon went up by the way of them that dwelt in tents on the east of Nobah and Jogbehah, and smote the host; for the host was secure.
12Sepaavum salmunaavum otipponaarkal; avano avarkalaith thodarnthu, sepaa salmunaa ennum meethiyaaniyarin iranndu raajaakkalaiyum pitiththu, senai muluvathaiyum kalangatiththaan.And when Zebah and Zalmunna fled, he pursued after them, and took the two kings of Midian, Zebah and Zalmunna, and discomfited all the host.
13Yovaasin kumaaranaakiya kithiyon yuththampannnni, sooriyan uthikkum munnae thirumpivanthapothu,And Gideon the son of Joash returned from battle before the sun was up,
14Sukkoththin manusharil oru vaalipanaip pitiththu, avanidaththil visaariththaan; avan sukkoththin pirapukkalum athin moopparumaakiya elupaththaelu manusharin paerai avanukku eluthikkoduththaan.And caught a young man of the men of Succoth, and inquired of him: and he described unto him the princes of Succoth, and the elders thereof, even threescore and seventeen men.
15Avan sukkoththu ooraaridaththil vanthu: itho, vidaayththirukkira un manusharukku naangal appam kodukkiratharkuch sepaa salmunaa enpavarkalin kai un kaivasamaayittaோ entu neengal ennai ninthiththuch sonna sepaavum salmunaavum ingae irukkiraarkal entu solli,And he came unto the men of Succoth, and said, Behold Zebah and Zalmunna, with whom ye did upbraid me, saying, Are the hands of Zebah and Zalmunna now in thine hand, that we should give bread unto thy men that are weary?
16Pattanaththin moopparaip pitiththu, vanaantharaththin mullukalaiyum nerinjilkalaiyum konnduvanthu, avaikalaal sukkoththin manusharukkup puththivarappannnni,And he took the elders of the city, and thorns of the wilderness and briers, and with them he taught the men of Succoth.
17Penoovaelin kopuraththai itiththu, avvoor manusharaiyum kontu pottan.And he beat down the tower of Penuel, and slew the men of the city.
18Pinpu avan sepaavaiyum salmunaavaiyum Nnokki: neengal thaaporilae kontu potta antha manushar eppatippattavarkal entu kaettan; atharku avarkal: neer eppatippattavaro avarkalum appatippattavarkalae; ovvoruvanum paarvaikku raajakumaaranaippolirunthaan entarkal.Then said he unto Zebah and Zalmunna, What manner of men were they whom ye slew at Tabor? And they answered, As thou art, so were they; each one resembled the children of a king.
19Appoluthu avan: avarkal en sakothararum en thaayin pillaikalumaayirunthaarkal; avarkalai uyirotae vaiththiruntheerkalaanaal, ungalaik kollaathiruppaen entu karththarin jeevanaikkonndu sollukiraேn entu solli,And he said, They were my brethren, even the sons of my mother: as the LORD liveth, if ye had saved them alive, I would not slay you.
20Than mooththakumaaranaakiya yeththaerai Nnokki: nee elunthu, ivarkalai vettippodu entan; antha vaalipan ilainjanaanapatiyaal payanthu than pattayaththai uruvaathirunthaan.And he said unto Jether his firstborn, Up, and slay them. But the youth drew not his sword: for he feared, because he was yet a youth.
21Appoluthu sepaavum salmunaavum; neerae elunthu engalmael vilum; manushan eppatiyo appatiyae avan pelanum irukkum entarkal; kithiyon elunthu, sepaavaiyum salmunaavaiyum kontupottu, avarkal ottakangalin kaluththukalil iruntha saanthuk kaaraikalai eduththukkonndaan.Then Zebah and Zalmunna said, Rise thou, and fall upon us: for as the man is, so is his strength. And Gideon arose, and slew Zebah and Zalmunna, and took away the ornaments that were on their camels' necks.
22Appoluthu Israel manushar kithiyonai Nnokki: neer engalai meethiyaaniyar kaikku neengalaakkivittapatiyinaal neerum ummutaiya kumaaranum, ummutaiya kumaaranin kumaaranum, engalai aalakkadaveerkal entarkal.Then the men of Israel said unto Gideon, Rule thou over us, both thou, and thy son, and thy son's son also: for thou hast delivered us from the hand of Midian.
23Atharkuk kithiyon: naan ungalai aalamaattaேn; en kumaaranum ungalai aalamaattan; karththarae ungalai aaluvaaraaka entan.And Gideon said unto them, I will not rule over you, neither shall my son rule over you: the LORD shall rule over you.
24Pinpu kithiyon avarkalai Nnokki: ungalidaththil oru kaariyaththaik kaetkiraேn; neengal avaravar kollaiyitta kadukkankalai ennidaththil konnduvaarungal entan. Avarkal ismavaelaraayirunthapatiyinaal avarkalidaththil ponkadukkankal irunthathu.And Gideon said unto them, I would desire a request of you, that ye would give me every man the earrings of his prey. (For they had golden earrings, because they were Ishmaelites.)
25Isravaelar: santhoshamaayk koduppom entu solli, oru vasthiraththai viriththu, avaravar kollaiyitta kadukkankalai athilae pottarkal.And they answered, We will willingly give them. And they spread a garment, and did cast therein every man the earrings of his prey.
26Piraich sinthaakkukalum, aarangalum, meethiyaaniyarin raajaakkal porththukkonntiruntha iraththaamparangalum, avarkalutaiya ottakangalin kaluththukaliliruntha sarappannikalum allaamal, avan kaettu vaangina ponkadukkankalin nirai aayiraththu elunooraு pon sekkalin niraiyaayirunthathu.And the weight of the golden earrings that he requested was a thousand and seven hundred shekels of gold; beside ornaments, and collars, and purple raiment that was on the kings of Midian, and beside the chains that were about their camels' necks.
27Athinaal kithiyon oru epoththai unndaakki, athaith than ooraana opraavilae vaiththaan; isravaelarellaarum athaip pinpattich soramponaarkal; athu kithiyonukkum avan veettarukkum kannnniyaayittaு.And Gideon made an ephod thereof, and put it in his city, even in Ophrah: and all Israel went thither a whoring after it: which thing became a snare unto Gideon, and to his house.
28Inthappirakaaram meethiyaaniyar thirumpa thalaiyedukkak koodaathapatikku, Israel puththirarukku munpaakath thaalththappattarkal; thaesamaanathu kithiyonin naatkalil naarpathuvarusham amaithalaayirunthathu.Thus was Midian subdued before the children of Israel, so that they lifted up their heads no more. And the country was in quietness forty years in the days of Gideon.
29Yovaasin kumaaranaakiya yerupaakaal poy, than veettilae vaasamaayirunthaan.And Jerubbaal the son of Joash went and dwelt in his own house.
30Kithiyonukku anaekam sthireekal irunthaarkal; avanutaiya karppappirappaana kumaarar elupathupaer.And Gideon had threescore and ten sons of his body begotten: for he had many wives.
31Seekaemiliruntha avanutaiya maraுmanaiyaattiyum avanukku oru kumaaranaip pettaாl; avanukku apimelaekku entu paerittan.And his concubine that was in Shechem, she also bare him a son, whose name he called Abimelech.
32Pinpu yovaasin kumaaranaakiya kithiyon nalla viruththaappiyaththilae mariththu, opraavilae than thakappanaakiya yovaas ennum apiyaesriyanutaiya kallaraiyil adakkampannnappattan.And Gideon the son of Joash died in a good old age, and was buried in the sepulchre of Joash his father, in Ophrah of the Abiezrites.
33Kithiyon mariththapin Israel puththirar thirumpavum paakaalkalaip pinpattich sorampoy, paakalpaereeththaith thangalukku thaevanaaka vaiththukkonndaarkal.And it came to pass, as soon as Gideon was dead, that the children of Israel turned again, and went a whoring after Baalim, and made Baalberith their god.
34Israel puththirar thangalaich suttilumiruntha thangal ellaach saththurukkalin kaiyinintum thangalai iratchiththa thangal thaevanaakiya karththarai ninaiyaamalum,And the children of Israel remembered not the LORD their God, who had delivered them out of the hands of all their enemies on every side:
35Kithiyon ennum yerupaakaal isravaelukkuch seytha sakala nanmaikkunthakka thayavai avan veettarukkup paaraattamalum ponaarkal.Neither showed they kindness to the house of Jerubbaal, namely, Gideon, according to all the goodness which he had showed unto Israel.