1இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.And after these things I heard a great voice of much people in heaven, saying, Alleluia; Salvation, and glory, and honour, and power, unto the Lord our God:
2தன் வேசித்தனத்தினால் பூமியைக்கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.For true and righteous are his judgments: for he hath judged the great whore, which did corrupt the earth with her fornication, and hath avenged the blood of his servants at her hand.
3மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.And again they said, Alleluia And her smoke rose up for ever and ever.
4இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.And the four and twenty elders and the four beasts fell down and worshipped God that sat on the throne, saying, Amen; Alleluia.
5மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.And a voice came out of the throne, saying, Praise our God, all ye his servants, and ye that fear him, both small and great.
6அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.And I heard as it were the voice of a great multitude, and as the voice of many waters, and as the voice of mighty thunderings, saying, Alleluia: for the Lord God omnipotent reigneth.
7நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.Let us be glad and rejoice, and give honour to him: for the marriage of the Lamb is come, and his wife hath made herself ready.
8சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லியவஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.And to her was granted that she should be arrayed in fine linen, clean and white: for the fine linen is the righteousness of saints.
9பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.And he saith unto me, Write, Blessed are they which are called unto the marriage supper of the Lamb. And he saith unto me, These are the true sayings of God.
10அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.And I fell at his feet to worship him. And he said unto me, See thou do it not: I am thy fellowservant, and of thy brethren that have the testimony of Jesus: worship God: for the testimony of Jesus is the spirit of prophecy.
11பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.And I saw heaven opened, and behold a white horse; and he that sat upon him was called Faithful and True, and in righteousness he doth judge and make war.
12அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.His eyes were as a flame of fire, and on his head were many crowns; and he had a name written, that no man knew, but he himself.
13இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.And he was clothed with a vesture dipped in blood: and his name is called The Word of God.
14பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள்.And the armies which were in heaven followed him upon white horses, clothed in fine linen, white and clean.
15புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.And out of his mouth goeth a sharp sword, that with it he should smite the nations: and he shall rule them with a rod of iron: and he treadeth the winepress of the fierceness and wrath of Almighty God.
16ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.And he hath on his vesture and on his thigh a name written, KING OF KINGS, AND LORD OF LORDS.
17பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:And I saw an angel standing in the sun; and he cried with a loud voice, saying to all the fowls that fly in the midst of heaven, Come and gather yourselves together unto the supper of the great God;
18நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகாதேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.That ye may eat the flesh of kings, and the flesh of captains, and the flesh of mighty men, and the flesh of horses, and of them that sit on them, and the flesh of all men, both free and bond, both small and great.
19பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.And I saw the beast, and the kings of the earth, and their armies, gathered together to make war against him that sat on the horse, and against his army.
20அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தையும் வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.And the beast was taken, and with him the false prophet that wrought miracles before him, with which he deceived them that had received the mark of the beast, and them that worshipped his image. These both were cast alive into a lake of fire burning with brimstone.
21மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.And the remnant were slain with the sword of him that sat upon the horse, which sword proceeded out of his mouth: and all the fowls were filled with their flesh.
1Ivaikalukkuppinpu, paralokaththil thiralaana janakkoottam idukira aaravaaraththaik kaettaேn. Avarkal: Alleluya, iratchanniyamum makimaiyum kanamum vallamaiyum nammutaiya thaevanaakiya karththarukkae uriyathu; avarutaiya niyaayaththeerppukal saththiyamum neethiyumaanavaikal.And after these things I heard a great voice of much people in heaven, saying, Alleluia; Salvation, and glory, and honour, and power, unto the Lord our God:
2Than vaesiththanaththinaal poomiyaikkeduththa makaa vaesikku avar niyaayaththeerppukkoduththu, thammutaiya ooliyakkaararin iraththaththirkaaka avalidaththil palivaanginaarae entarkal.For true and righteous are his judgments: for he hath judged the great whore, which did corrupt the earth with her fornication, and hath avenged the blood of his servants at her hand.
3Maraுpatiyum avarkal: Alleluya entu solli aarppariththaarkal. Avalutaiya pukai ententaikkum elumpukirathu entarkal.And again they said, Alleluia And her smoke rose up for ever and ever.
4Irupaththunaanku moopparkalum, naanku jeevankalum vanakkamaay vilunthu: Amen, Alleluya, entu solli, singaasanaththinmael veettirukkum thaevanaith tholuthukonndaarkal.And the four and twenty elders and the four beasts fell down and worshipped God that sat on the throne, saying, Amen; Alleluia.
5Maelum, namathu thaevanutaiya ooliyakkaararae, avarukkup payappadukira siriyorum periyorumaanavarkalae, neengal yaavarum avaraith thuthiyungal entu oru saththam singaasanaththilirunthu piranthathu.And a voice came out of the throne, saying, Praise our God, all ye his servants, and ye that fear him, both small and great.
6Appoluthu thiralaana janangal idum aaravaarampolavum, peruvella iraichchalpolavum, palaththa itimulakkampolavum, oru saththamunndaaki: Alleluya, sarvavallamaiyulla thaevanaakiya Karththar raajyapaarampannnukiraar.And I heard as it were the voice of a great multitude, and as the voice of many waters, and as the voice of mighty thunderings, saying, Alleluia: for the Lord God omnipotent reigneth.
7Naam santhoshappattuk kalikoornthu avarukkuth thuthiseluththakkadavom. Aattukkuttiyaanavarutaiya kaliyaanam vanthathu, avarutaiya manaivi thannai aayaththampannnninaal entu sollak kaettaேn.Let us be glad and rejoice, and give honour to him: for the marriage of the Lamb is come, and his wife hath made herself ready.
8Suththamum pirakaasamumaana melliya vasthiram thariththukkollumpati avalukku alikkappattathu; antha melliyavasthiram Parisuththavaankalutaiya neethikalae.And to her was granted that she should be arrayed in fine linen, clean and white: for the fine linen is the righteousness of saints.
9Pinnum, avan ennai Nnokki: aattukkuttiyaanavarin kaliyaana virunthukku alaikkappattavarkal paakkiyavaankal enteluthu entan. Maelum, ivaikal thaevanutaiya saththiyamaana vasanangal entu ennudanae sonnaan.And he saith unto me, Write, Blessed are they which are called unto the marriage supper of the Lamb. And he saith unto me, These are the true sayings of God.
10Appoluthu avanai vanangumpati avanutaiya paathaththil vilunthaen. Avan ennai Nnokki: ippatich seyyaathapatikkup paar; unnodum Yesuvaikkuriththuch saatchiyitta sakothararodungaூda naanum oru ooliyakkaaran; thaevanaith tholuthukol. Yesuvaippattina saatchi theerkkatharisanaththin aaviyaayirukkirathu entan.And I fell at his feet to worship him. And he said unto me, See thou do it not: I am thy fellowservant, and of thy brethren that have the testimony of Jesus: worship God: for the testimony of Jesus is the spirit of prophecy.
11Pinpu, Paralokam thiranthirukkakkanntaen; itho, oru vellaikkuthirai kaanappattathu, athinmael aeriyirunthavar unnmaiyum saththiyamumullavarennappattavar; avar neethiyaay niyaayantheerththu yuththampannnukiraar.And I saw heaven opened, and behold a white horse; and he that sat upon him was called Faithful and True, and in righteousness he doth judge and make war.
12Avarutaiya kannkal akkinijuvaalaiyaippolirunthana, avarutaiya sirasinmael anaeka kireedangal irunthana; avarukkaeyanti vaeroruvarukkun theriyaatha oru naamamum eluthiyirunthathu.His eyes were as a flame of fire, and on his head were many crowns; and he had a name written, that no man knew, but he himself.
13Iraththaththil thoykkappatta vasthiraththaith thariththirunthaar; avarutaiya naamam thaevanutaiya vaarththai enpathae.And he was clothed with a vesture dipped in blood: and his name is called The Word of God.
14Paralokaththilulla senaikal vennmaiyum suththamumaana melliya vasthiranthariththavarkalaay, vellaikkuthiraikalinmael aeri, avarukkup pinsentarkal.And the armies which were in heaven followed him upon white horses, clothed in fine linen, white and clean.
15Purajaathikalai vettumpatikku avarutaiya vaayilirunthu koormaiyaana pattayam purappadukirathu; iruppukkolaal avarkalai arasaaluvaar; avar sarvavallamaiyulla thaevanutaiya ukkirakopamaakiya mathuvulla aalaiyai mithikkiraar.And out of his mouth goeth a sharp sword, that with it he should smite the nations: and he shall rule them with a rod of iron: and he treadeth the winepress of the fierceness and wrath of Almighty God.
16Raajaathi raajaa, karththaathi karththaa ennum naamam avarutaiya vasthiraththinmaelum avarutaiya thotaiyinmaelum eluthappattirunthathu.And he hath on his vesture and on his thigh a name written, KING OF KINGS, AND LORD OF LORDS.
17Pinpu oru thoothan sooriyanil nirkakkanntaen; avan vaanaththin maththiyil parakkira sakala paravaikalaiyum paarththu:And I saw an angel standing in the sun; and he cried with a loud voice, saying to all the fowls that fly in the midst of heaven, Come and gather yourselves together unto the supper of the great God;
18Neengal raajaakkalin maamsaththaiyum, senaiththalaivarkalin maamsaththaiyum, palavaankalin maamsaththaiyum, kuthiraikalin maamsaththaiyum, avaikalinmael aeriyirukkiravarkalin maamsaththaiyum, suyaatheenar atimaikal, siriyor periyor, ivarkalellaarutaiya maamsaththaiyum patchikkumpatikku, makaaDhevan kodukkum virunthukkuk kootivaarungal entu mikuntha saththaththotae kooppittan.That ye may eat the flesh of kings, and the flesh of captains, and the flesh of mighty men, and the flesh of horses, and of them that sit on them, and the flesh of all men, both free and bond, both small and great.
19Pinpu, mirukamum poomiyin raajaakkalum avarkalutaiya senaikalum, kuthiraiyinmael aeriyirukkiravarodum avarutaiya senaiyodum yuththampannnumpatikkuk kootivarakkanntaen.And I saw the beast, and the kings of the earth, and their armies, gathered together to make war against him that sat on the horse, and against his army.
20Appoluthu mirukam pitikkappattathu; mirukaththin munpaakach seytha arputhangalaal athin muththiraiyaith thariththavarkalaiyum athin soroopaththaiyum vananginavarkalaiyum mosampokkina kallaththeerkkatharisiyungaூdap pitikkappattan; iruvarum kanthakam erikira akkinikkadalilae uyirotae thallappattarkal.And the beast was taken, and with him the false prophet that wrought miracles before him, with which he deceived them that had received the mark of the beast, and them that worshipped his image. These both were cast alive into a lake of fire burning with brimstone.
21Mattavarkal kuthiraiyinmael aerinavarutaiya vaayilirunthu purappadukira pattayaththaal kollappattarkal; avarkalutaiya maamsaththinaal paravaikal yaavum thirupthiyatainthana.And the remnant were slain with the sword of him that sat upon the horse, which sword proceeded out of his mouth: and all the fowls were filled with their flesh.