1பொழுது விடிந்தவுடனே, பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.And straightway in the morning the chief priests held a consultation with the elders and scribes and the whole council, and bound Jesus, and carried him away, and delivered him to Pilate.
2பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.And Pilate asked him, Art thou the King of the Jews? And he answering said unto them, Thou sayest it.
3பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங்குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.And the chief priests accused him of many things: but he answered nothing.
4அப்பொழுது, பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, அதற்கு நீ உத்தரவு ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.And Pilate asked him again, saying, Answerest thou nothing? behold how many things they witness against thee.
5இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.But Jesus yet answered nothing; so that Pilate marvelled.
6காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது.Now at that feast he released unto them one prisoner, whomsoever they desired.
7கலகம் பண்ணி அந்தக் கலகத்தில் கொலைசெய்து, அதற்காகக் காவல் பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.And there was one named Barabbas, which lay bound with them that had made insurrection with him, who had committed murder in the insurrection.
8ஜனங்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டுமென்று சத்தமிட்டுக் கேட்டுக்கொள்ளத்தொடங்கினார்கள்.And the multitude crying aloud began to desire him to do as he had ever done unto them.
9பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து,But Pilate answered them, saying, Will ye that I release unto you the King of the Jews?
10அவர்களை நோக்கி: நான் யூதருடைய ராஜாவை உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்களா என்று கேட்டான்.For he knew that the chief priests had delivered him for envy.
11பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள்.But the chief priests moved the people, that he should rather release Barabbas unto them.
12பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால் யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.And Pilate answered and said again unto them, What will ye then that I shall do unto him whom ye call the King of the Jews?
13அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.And they cried out again, Crucify him.
14அதற்குப் பிலாத்து: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று பின்னும் அதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.Then Pilate said unto them, Why, what evil hath he done? And they cried out the more exceedingly, Crucify him.
15அப்பொழுது பிலாத்து ஜனங்களை பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.And so Pilate, willing to content the people, released Barabbas unto them, and delivered Jesus, when he had scourged him, to be crucified.
16அப்பொழுது, போர்ச்சேவகர் அவரைத் தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத்தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து,And the soldiers led him away into the hall, called Praetorium; and they call together the whole band.
17சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி:And they clothed him with purple, and platted a crown of thorns, and put it about his head,
18யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,And began to salute him, Hail, King of the Jews!
19அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.And they smote him on the head with a reed, and did spit upon him, and bowing their knees worshipped him.
20அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.And when they had mocked him, they took off the purple from him, and put his own clothes on him, and led him out to crucify him.
21சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்.And they compel one Simon a Cyrenian, who passed by, coming out of the country, the father of Alexander and Rufus, to bear his cross.
22கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய்,And they bring him unto the place Golgotha, which is, being interpreted, The place of a skull.
23வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.And they gave him to drink wine mingled with myrrh: but he received it not.
24அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு, அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்.And when they had crucified him, they parted his garments, casting lots upon them, what every man should take.
25அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம் மணிவேளையாயிருந்தது.And it was the third hour, and they crucified him.
26அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின் மேல் கட்டினார்கள்.And the superscription of his accusation was written over, THE KING OF THE JEWS.
27அல்லாமலும், அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேக்கூடச் சிலுவைகளில் அறைந்தார்கள்.And with him they crucify two thieves; the one on his right hand, and the other on his left.
28அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று.And the scripture was fulfilled, which saith, And he was numbered with the transgressors.
29அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலையைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே,And they that passed by railed on him, wagging their heads, and saying, Ah, thou that destroyest the temple, and buildest it in three days,
30உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.Save thyself, and come down from the cross.
31அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம்பண்ணி: மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை.Likewise also the chief priests mocking said among themselves with the scribes, He saved others; himself he cannot save.
32நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.Let Christ the King of Israel descend now from the cross, that we may see and believe. And they that were crucified with him reviled him.
33ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.And when the sixth hour was come, there was darkness over the whole land until the ninth hour.
34ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.And at the ninth hour Jesus cried with a loud voice, saying, Eloi, Eloi, lama sabachthani? which is, being interpreted, My God, my God, why hast thou forsaken me?
35அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.And some of them that stood by, when they heard it, said, Behold, he calleth Elias.
36ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான்.And one ran and filled a spunge full of vinegar, and put it on a reed, and gave him to drink, saying, Let alone; let us see whether Elias will come to take him down.
37இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஜீவனை விட்டார்.And Jesus cried with a loud voice, and gave up the ghost.
38அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.And the veil of the temple was rent in twain from the top to the bottom.
39அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக்கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.And when the centurion, which stood over against him, saw that he so cried out, and gave up the ghost, he said, Truly this man was the Son of God.
40சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று, ஊழியஞ்செய்துவந்த மகதேலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,There were also women looking on afar off: among whom was Mary Magdalene, and Mary the mother of James the less and of Joses, and Salome;
41அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள்.(Who also, when he was in Galilee, followed him, and ministered unto him;) and many other women which came up with him unto Jerusalem.
42ஓய்வுநாளுக்கு முந்தின நாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது,And now when the even was come, because it was the preparation, that is, the day before the sabbath,
43கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.Joseph of Arimathaea, an honourable counsellor, which also waited for the kingdom of God, came, and went in boldly unto Pilate, and craved the body of Jesus.
44அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான்.And Pilate marvelled if he were already dead: and calling unto him the centurion, he asked him whether he had been any while dead.
45நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான்.And when he knew it of the centurion, he gave the body to Joseph.
46அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான்.And he bought fine linen, and took him down, and wrapped him in the linen, and laid him in a sepulchre which was hewn out of a rock, and rolled a stone unto the door of the sepulchre.
47அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.And Mary Magdalene and Mary the mother of Joses beheld where he was laid.
1Poluthu vitinthavudanae, pirathaana aasaariyarum moopparum vaethapaarakarum aalosanaich sangaththaaranaivarum kooti aalosanaipannnni, Yesuvaik kattik konndupoy, pilaaththuvinidaththil oppukkoduththaarkal.And straightway in the morning the chief priests held a consultation with the elders and scribes and the whole council, and bound Jesus, and carried him away, and delivered him to Pilate.
2Pilaaththu avarai Nnokki: nee yootharutaiya raajaavaa entu kaettan. Atharku avar: neer sollukirapatithaan entar.And Pilate asked him, Art thou the King of the Jews? And he answering said unto them, Thou sayest it.
3Pirathaana aasaariyarkal avarmael anaekanguttangalaich saattinaarkal. Avaro maaraுththaram ontum sollavillai.And the chief priests accused him of many things: but he answered nothing.
4Appoluthu, pilaaththu maraுpatiyum avarai Nnokki: itho, ivarkal unmael eththanaiyo kuttangalaich saattukiraarkalae, atharku nee uththaravu ontum sollukirathillaiyaa entu kaettan.And Pilate asked him again, saying, Answerest thou nothing? behold how many things they witness against thee.
5Yesuvo appoluthum uththaravu ontum sollavillai; athinaal pilaaththu aachchariyappattan.But Jesus yet answered nothing; so that Pilate marvelled.
6Kaavalpannnappattavarkalil evanai viduthalaiyaakkavaenndumentu janangal kaettukkolvaarkalo, avanai avarkalukkaaka viduthalaiyaakkuvathu panntikaithoraுm pilaaththuvukku valakkamaayirunthathu.Now at that feast he released unto them one prisoner, whomsoever they desired.
7Kalakam pannnni anthak kalakaththil kolaiseythu, atharkaakak kaaval pannnappattavarkalil parapaas ennappatta oruvan irunthaan.And there was one named Barabbas, which lay bound with them that had made insurrection with him, who had committed murder in the insurrection.
8Janangal, valakkaththinpatiyae thangalukku oruvanai viduthalaiyaakkavaenndumentu saththamittuk kaettukkollaththodanginaarkal.And the multitude crying aloud began to desire him to do as he had ever done unto them.
9Poraamaiyinaalae pirathaana aasaariyarkal avarai oppukkoduththaarkal entu pilaaththu arinthu,But Pilate answered them, saying, Will ye that I release unto you the King of the Jews?
10Avarkalai Nnokki: naan yootharutaiya raajaavai ungalukku viduthalaiyaakkavaenndumentirukkireerkalaa entu kaettan.For he knew that the chief priests had delivered him for envy.
11Parapaasaith thangalukku viduthalaiyaakkavaenndumentu janangal kaettukkollumpati, pirathaana aasaariyarkal avarkalai aevivittarkal.But the chief priests moved the people, that he should rather release Barabbas unto them.
12Pilaaththu maraுpatiyum avarkalai Nnokki: appatiyaanaal yootharutaiya raajaaventu neengal sollukiravanai naan enna seyyavaenndum entu kaettan.And Pilate answered and said again unto them, What will ye then that I shall do unto him whom ye call the King of the Jews?
13Avanaich siluvaiyil araiyum entu maraுpatiyum saththamittuch sonnaarkal.And they cried out again, Crucify him.
14Atharkup pilaaththu: aen, enna pollaappuch seythaan entan. Avarkalo: avanaich siluvaiyil araiyum entu pinnum athikamaayk kookkuralittuch sonnaarkal.Then Pilate said unto them, Why, what evil hath he done? And they cried out the more exceedingly, Crucify him.
15Appoluthu pilaaththu janangalai piriyappaduththa manathullavanaay, parapaasai avarkalukku viduthalaiyaakki, Yesuvaiyo vaarinaal atippiththu, siluvaiyil araiyumpatikku oppukkoduththaan.And so Pilate, willing to content the people, released Barabbas unto them, and delivered Jesus, when he had scourged him, to be crucified.
16Appoluthu, porchchaேvakar avaraith thaesaathipathiyin aramanaiyaakiya maalikaiyil konndupoy, avvidaththil porchchaேvakarutaiya koottamuluvathaiyum kootivarachcheythu,And the soldiers led him away into the hall, called Praetorium; and they call together the whole band.
17Sivappaana maelangiyai avarukku uduththi, mulmutiyaip pinni avarukkuch sootti:And they clothed him with purple, and platted a crown of thorns, and put it about his head,
18Yootharutaiya raajaavae, vaalka entu avarai vaalththi,And began to salute him, Hail, King of the Jews!
19Avaraich sirasil kolaal atiththu, avarmael thuppi, mulangaalpatiyittu avarai vananginaarkal.And they smote him on the head with a reed, and did spit upon him, and bowing their knees worshipped him.
20Avaraip pariyaasampannnninapinpu, sivappaana angiyaik kalatti, avarutaiya vasthirangalai avarukku uduththi, avaraich siluvaiyil araiyumpati veliyae konnduponaarkal.And when they had mocked him, they took off the purple from him, and put his own clothes on him, and led him out to crucify him.
21Siraenae ooraanum, aleksantharukkum rooppukkum thakappanumaakiya seemon ennappatta oruvan naattilirunthu avvaliyae varukaiyil, avarutaiya siluvaiyaich sumakkumpati avanaip palavanthampannnninaarkal.And they compel one Simon a Cyrenian, who passed by, coming out of the country, the father of Alexander and Rufus, to bear his cross.
22Kapaalasthalam entu arththangaொllum kolkothaa ennum idaththukku avaraik konndupoy,And they bring him unto the place Golgotha, which is, being interpreted, The place of a skull.
23Vellaippolam kalantha thiraatcharasaththai avarukkuk kutikkak koduththaarkal; avar athai aettaுkkollavillai.And they gave him to drink wine mingled with myrrh: but he received it not.
24Appoluthu avaraich siluvaiyil arainthaarkal. Athanpinpu, avarutaiya vasthirangalaip pangittu, ovvoruvan ovvoru pangai eduththukkollumpati avaikalaikkuriththuch seettuppottarkal.And when they had crucified him, they parted his garments, casting lots upon them, what every man should take.
25Avaraich siluvaiyil arainthapothu moontam mannivaelaiyaayirunthathu.And it was the third hour, and they crucified him.
26Avar ataintha aakkinaiyin mukaantharaththaik kaannpikkum poruttu, yootharutaiya raajaa entu eluthi, siluvaiyin mael kattinaarkal.And the superscription of his accusation was written over, THE KING OF THE JEWS.
27Allaamalum, avarutaiya valathu pakkaththil oruvanum avarutaiya idathu pakkaththil oruvanumaaka, iranndu kallarai avarotaekkoodach siluvaikalil arainthaarkal.And with him they crucify two thieves; the one on his right hand, and the other on his left.
28Akkiramakkaararil oruvanaaka ennnappattar enkira vaethavaakkiyam athanaalae niraivaerittaு.And the scripture was fulfilled, which saith, And he was numbered with the transgressors.
29Antha valiyaay nadanthupokiravarkal thangal thalaiyaith thulukki: aa! Aa! Thaevaalayaththai itiththu, moontu naalaikkullae kattukiravanae,And they that passed by railed on him, wagging their heads, and saying, Ah, thou that destroyest the temple, and buildest it in three days,
30Unnai neeyae iratchiththukkol; siluvaiyilirunthirangivaa entu avaraith thooshiththaarkal.Save thyself, and come down from the cross.
31Appatiyae pirathaana aasaariyarum vaethapaarakarum thangalukkullae pariyaasampannnni: mattavarkalai iratchiththaan, thannaiththaan iratchiththukkollath thiraanniyillai.Likewise also the chief priests mocking said among themselves with the scribes, He saved others; himself he cannot save.
32Naam kanndu visuvaasikkaththakkathaaka isravaelukku raajaavaakiya Kristhu ippoluthu siluvaiyilirunthirangattum entu sollikkonndaarkal. Avarotaekoodach siluvaikalil araiyappattavarkalum avarai ninthiththaarkal.Let Christ the King of Israel descend now from the cross, that we may see and believe. And they that were crucified with him reviled him.
33Aaraammanni naeramuthal onpathaammanni naeramvaraikkum poomiyengum anthakaaram unndaayittaு.And when the sixth hour was come, there was darkness over the whole land until the ninth hour.
34Onpathaammanni naeraththilae, Yesu: eloyee! Eloyee! Laamaa sapakthaani, entu mikuntha saththamittuk kooppittar; atharku: en thaevanae! En thaevanae! Aen ennaik kaivittir entu arththamaam.And at the ninth hour Jesus cried with a loud voice, saying, Eloi, Eloi, lama sabachthani? which is, being interpreted, My God, my God, why hast thou forsaken me?
35Angae nintavarkalil silar athaik kaettapoluthu: itho eliyaavaik kooppidukiraan entarkal.And some of them that stood by, when they heard it, said, Behold, he calleth Elias.
36Oruvan oti, kadarkaalaanaik kaatiyilae thoyththu, athai oru kolil maatti, avarukkuk kutikkak koduththu: poraுngal, eliyaa ivanai irakka varuvaano paarppom entan.And one ran and filled a spunge full of vinegar, and put it on a reed, and gave him to drink, saying, Let alone; let us see whether Elias will come to take him down.
37Yesu makaa saththamaayk kooppittu, jeevanai vittar.And Jesus cried with a loud voice, and gave up the ghost.
38Appoluthu, thaevaalayaththin thiraichchaீlai maelthodangik geelvaraikkum iranndaakak kilinthathu.And the veil of the temple was rent in twain from the top to the bottom.
39Avarukku ethirae ninta noottaுkku athipathi avar ippatik kooppittu jeevanai vittathaikkanndapothu: meyyaakavae intha manushan thaevanutaiya kumaaran entan.And when the centurion, which stood over against him, saw that he so cried out, and gave up the ghost, he said, Truly this man was the Son of God.
40Sila sthireekalum thooraththilirunthu paarththukkonntirunthaarkal. Avar kalilaeyaavilirunthapothu avarukkup pinsentu, ooliyanjaெythuvantha makathaelaenaa mariyaalum, sinna yaakkopukkum yosekkum thaayaakiya mariyaalum, salomae enpavalum,There were also women looking on afar off: among whom was Mary Magdalene, and Mary the mother of James the less and of Joses, and Salome;
41Avarudanaekooda erusalaemukku vanthiruntha vaeraே anaeka sthireekalum avarkalotae irunthaarkal.(Who also, when he was in Galilee, followed him, and ministered unto him;) and many other women which came up with him unto Jerusalem.
42Oyvunaalukku munthina naal aayaththanaalaayirunthapatiyaal, saayangaalamaanapothu,And now when the even was come, because it was the preparation, that is, the day before the sabbath,
43Kanamporunthiya aalosanaikkaaranum arimaththiyaa ooraanaanum thaevanutaiya raajyam varak kaaththirunthavanumaakiya yoseppu enpavan vanthu, pilaaththuvinidaththil thunninthupoy, Yesuvin sareeraththaik kaettan.Joseph of Arimathaea, an honourable counsellor, which also waited for the kingdom of God, came, and went in boldly unto Pilate, and craved the body of Jesus.
44Avar iththanai seekkiraththil mariththupponaaraa entu pilaaththu aachchariyappattu, noottaுkku athipathiyai alaippiththu: avar itharkullae mariththathu nichchayamaa entu kaettan.And Pilate marvelled if he were already dead: and calling unto him the centurion, he asked him whether he had been any while dead.
45Noottaுkku athipathiyinaalae athai arinthukonndapinpu, sareeraththai yoseppinidaththil koduththaan.And when he knew it of the centurion, he gave the body to Joseph.
46Avan poy, melliya thuppattiyai vaangikkonnduvanthu, avarai irakki, anthath thuppattiyilae sutti, kanmalaiyil vettiyiruntha kallaraiyilae avarai vaiththu, kallaraiyin vaasalil oru kallaip purattivaiththaan.And he bought fine linen, and took him down, and wrapped him in the linen, and laid him in a sepulchre which was hewn out of a rock, and rolled a stone unto the door of the sepulchre.
47Avarai vaiththa idaththai makathalaenaa mariyaalum, yoseyin thaayaakiya mariyaalum paarththaarkal.And Mary Magdalene and Mary the mother of Joses beheld where he was laid.