1பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரப்பண்ணினார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாயிருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது; அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலதுபுறமாய்ப் பலிபீடத்துக்குத் தெற்கே பாய்ந்தது.Afterward he brought me again unto the door of the house; and, behold, waters issued out from under the threshold of the house eastward: for the forefront of the house stood toward the east, and the waters came down from under from the right side of the house, at the south side of the altar.
2அவர் என்னை வடக்கு வாசல் வழியாய்ப் புறப்படப்பண்ணி, என்னை வெளியிலே கீழ்த்திசைக்கு எதிரான புறவாசல்மட்டும் சுற்றி நடத்தக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபுறத்திலிருந்து பாய்கிறதாயிருந்தது.Then brought he me out of the way of the gate northward, and led me about the way without unto the utter gate by the way that looketh eastward; and, behold, there ran out waters on the right side.
3அந்தப் புருஷன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படுகையில் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; தண்ணீர் கணுக்கால் அளவாயிருந்தது.And when the man that had the line in his hand went forth eastward, he measured a thousand cubits, and he brought me through the waters; the waters were to the ankles.
4பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாயிருந்தது; பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாயிருந்தது.Again he measured a thousand, and brought me through the waters; the waters were to the knees. Again he measured a thousand, and brought me through; the waters were to the loins.
5பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்தார்; அங்கே அது நான் கடக்கக் கூடாத நதியாயிருந்தது; தண்ணீர் நீச்சாழமும் கடக்கமுடியாத நதியுமாயிருந்தது.Afterward he measured a thousand; and it was a river that I could not pass over: for the waters were risen, waters to swim in, a river that could not be passed over.
6அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா என்று சொல்லி, என்னை நதியோரமாய்த் திரும்ப நடத்திக்கொண்டுபோனார்.And he said unto me, Son of man, hast thou seen this? Then he brought me, and caused me to return to the brink of the river.
7நான் நடந்துவருகையில், இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான விருட்சங்கள் இருந்தது.Now when I had returned, behold, at the bank of the river were very many trees on the one side and on the other.
8அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்கு தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், வனாந்தரவழியாய் ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.Then said he unto me, These waters issue out toward the east country, and go down into the desert, and go into the sea: which being brought forth into the sea, the waters shall be healed.
9சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும்; இந்த நதிபோகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும்.And it shall come to pass, that every thing that liveth, which moveth, whithersoever the rivers shall come, shall live: and there shall be a very great multitude of fish, because these waters shall come thither: for they shall be healed; and every thing shall live whither the river cometh.
10அப்பொழுது என்கேதிதுவக்கி எனெக்லாயிம்மட்டும் மீன்பிடிக்கிறவர்கள் அதின் கரையிலே நிற்பார்கள்; அதெல்லாம் வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருக்கும்; அதின் மச்சங்கள் பெரிய சமுத்திரத்தின் மச்சங்களைப்போலப் பல ஜாதியும் மகா ஏராளமுமாயிருக்கும்.And it shall come to pass, that the fishers shall stand upon it from Engedi even unto Eneglaim; they shall be a place to spread forth nets; their fish shall be according to their kinds, as the fish of the great sea, exceeding many.
11ஆனாலும் அதினுடைய உளையான பள்ளங்களும் அதினுடைய மடுக்களும் ஆரோக்கியமாகாமல், உப்பாகவே விட்டுவிடப்படும்.But the miry places thereof and the marishes thereof shall not be healed; they shall be given to salt.
12நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியில் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும், அவைகளின் கனிகள் புசிப்புக்கும் அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.And by the river upon the bank thereof, on this side and on that side, shall grow all trees for meat, whose leaf shall not fade, neither shall the fruit thereof be consumed: it shall bring forth new fruit according to his months, because their waters they issued out of the sanctuary: and the fruit thereof shall be for meat, and the leaf thereof for medicine.
13கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு குறிக்கவேண்டிய எல்லையாவது: யோசேப்புக்கு இரண்டு பங்கு உண்டு.Thus saith the Lord GOD; This shall be the border, whereby ye shall inherit the land according to the twelve tribes of Israel: Joseph shall have two portions.
14சகோதரனோடே சகோதரனுக்குச சரிபங்கு உண்டாக அதைச் சுதந்தரித்துக்கொள்ளக்கடவீர்கள்; அதை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்டுக் கொடுத்தேன்; ஆகையால் உங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கிடைக்கும்.And ye shall inherit it, one as well as another: concerning the which I lifted up mine hand to give it unto your fathers: and this land shall fall unto you for inheritance.
15தேசத்தின் எல்லையாவது: வடபுறம் பெரிய சமுத்திரந்துவக்கி, சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாயிருக்கிற,And this shall be the border of the land toward the north side, from the great sea, the way of Hethlon, as men go to Zedad;
16ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையோடே சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது.Hamath, Berothah, Sibraim, which is between the border of Damascus and the border of Hamath; Hazarhatticon, which is by the coast of Hauran.
17அப்படியே சமுத்திரத்திலிருந்து போகிற எல்லை ஆத்சார்ஏனானும், தமஸ்குவின் எல்லையும், வடமூலையான வடக்கும் ஆமாத்தின் எல்லையுமானது; இது வடபுறம்.And the border from the sea shall be Hazarenan, the border of Damascus, and the north northward, and the border of Hamath. And this is the north side.
18கீழ்ப்புறத்தை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் நடுவாகவும், கீலேயாத்துக்கும் யோர்தானின் ஓரமான இஸ்ரவேல் தேசத்துக்கும் நடுவாகவும் கீழ்க்கடல்மட்டும் இருக்கும் எல்லையாய் அளப்பீர்களாக; இது கீழ்ப்புறம்.And the east side ye shall measure from Hauran, and from Damascus, and from Gilead, and from the land of Israel by Jordan, from the border unto the east sea. And this is the east side.
19தென்மூலையான தென்புறம் தாமார் துவக்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்மட்டாகவும், ஆறுமட்டாகவும், பெரிய சமுத்திரமட்டாகவும் இருப்பது, இது தென்மூலையான தென்புறம்.And the south side southward, from Tamar even to the waters of strife in Kadesh, the river to the great sea. And this is the south side southward.
20மேற்புறம் அந்த எல்லைதுவக்கி ஆமாத்துக்கு எதிராக வந்து சேருமட்டும் இருக்கிற பெரிய சமுத்திரமே; இது மேற்புறம்.The west side also shall be the great sea from the border, till a man come over against Hamath. This is the west side.
21இந்த தேசத்தை நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின்படியே உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்வீர்களாக.So shall ye divide this land unto you according to the tribes of Israel.
22உங்களுக்கும், உங்களுக்குள்ளே தங்கி உங்களுக்குள்ள பிள்ளைகளைப் பெறுகிற அந்நியர்களுக்கும், நீங்கள் அதைச் சீட்டுப்போட்டுச் சுதந்தரமாக்கிக்கொள்வீர்களாக; இவர்கள் உங்களுக்கு இஸ்ரவேல் புத்திரரில் பிறந்தவர்களைப்போல இருந்து, உங்களோடேகூட இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவே சுதந்தரத்துக்கு உடன்படுவார்களாக.And it shall come to pass, that ye shall divide it by lot for an inheritance unto you, and to the strangers that sojourn among you, which shall beget children among you: and they shall be unto you as born in the country among the children of Israel; they shall have inheritance with you among the tribes of Israel.
23அந்நியன் எந்தக் கோத்திரத்தோடே தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சுதந்தரத்தை அவனுக்குக் கொடுக்கக்கடவீர்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.And it shall come to pass, that in what tribe the stranger sojourneth, there shall ye give him his inheritance, saith the Lord GOD.
1Pinpu avar ennai aalayaththin vaasalukkuth thirumpivarappannnninaar; itho, vaasarpatiyin geelirunthu thannnneer purappattuk kilakkae odukirathaayirunthathu; aalayaththin mukappu kilakku Nnokkiyirunthathu; anthath thannnneer aalayaththin valathupuramaayp palipeedaththukkuth therkae paaynthathu.Afterward he brought me again unto the door of the house; and, behold, waters issued out from under the threshold of the house eastward: for the forefront of the house stood toward the east, and the waters came down from under from the right side of the house, at the south side of the altar.
2Avar ennai vadakku vaasal valiyaayp purappadappannnni, ennai veliyilae geelththisaikku ethiraana puravaasalmattum sutti nadaththakkonnduponaar; angae thannnneer valathupuraththilirunthu paaykirathaayirunthathu.Then brought he me out of the way of the gate northward, and led me about the way without unto the utter gate by the way that looketh eastward; and, behold, there ran out waters on the right side.
3Anthap purushan thamathu kaiyil noolaip pitiththukkonndu, kilakkae purappadukaiyil aayiramulam alanthu, ennaith thannnneeraik kadakkappannnninaar; thannnneer kanukkaal alavaayirunthathu.And when the man that had the line in his hand went forth eastward, he measured a thousand cubits, and he brought me through the waters; the waters were to the ankles.
4Pinnum avar aayiramulam alanthu, ennaith thannnneeraik kadakkappannnninaar; angae thannnneer mulangaal alavaayirunthathu; pinnum avar aayiramulam alanthu ennaik kadakkappannnninaar; angae thannnneer iduppalavaayirunthathu.Again he measured a thousand, and brought me through the waters; the waters were to the knees. Again he measured a thousand, and brought me through; the waters were to the loins.
5Pinnum avar aayiramulam alanthaar; angae athu naan kadakkak koodaatha nathiyaayirunthathu; thannnneer neechchaாlamum kadakkamutiyaatha nathiyumaayirunthathu.Afterward he measured a thousand; and it was a river that I could not pass over: for the waters were risen, waters to swim in, a river that could not be passed over.
6Avar ennai Nnokki: manupuththiranae, ithaik kanndaayaa entu solli, ennai nathiyoramaayth thirumpa nadaththikkonnduponaar.And he said unto me, Son of man, hast thou seen this? Then he brought me, and caused me to return to the brink of the river.
7Naan nadanthuvarukaiyil, itho, nathiyoraththil ikkaraiyilum akkaraiyilum veku thiralaana virutchangal irunthathu.Now when I had returned, behold, at the bank of the river were very many trees on the one side and on the other.
8Avar ennai Nnokki: inthath thannnneer kilakku thaesaththukkup purappattuppoy, vanaantharavaliyaay oti kadalil vilum; ithu kadalil paaynthu, vilunthapinpu, athin thannnneer aarokkiyamaakum.Then said he unto me, These waters issue out toward the east country, and go down into the desert, and go into the sea: which being brought forth into the sea, the waters shall be healed.
9Sampavippathu ennavental, intha nathi pokumidamengum sanjarikkum jeevapiraannikal yaavum pilaikkum; inthath thannnneer angae vanthapatiyinaal veku aeraalamaana machchangalum unndaayirukkum; intha nathipokumidamengumulla yaavum aarokkiyappattup pilaikkum.And it shall come to pass, that every thing that liveth, which moveth, whithersoever the rivers shall come, shall live: and there shall be a very great multitude of fish, because these waters shall come thither: for they shall be healed; and every thing shall live whither the river cometh.
10Appoluthu enkaethithuvakki eneklaayimmattum meenpitikkiravarkal athin karaiyilae nirpaarkal; athellaam valaikalai virikkira sthalamaayirukkum; athin machchangal periya samuththiraththin machchangalaippolap pala jaathiyum makaa aeraalamumaayirukkum.And it shall come to pass, that the fishers shall stand upon it from Engedi even unto Eneglaim; they shall be a place to spread forth nets; their fish shall be according to their kinds, as the fish of the great sea, exceeding many.
11Aanaalum athinutaiya ulaiyaana pallangalum athinutaiya madukkalum aarokkiyamaakaamal, uppaakavae vittuvidappadum.But the miry places thereof and the marishes thereof shall not be healed; they shall be given to salt.
12Nathiyoramaay athin ikkaraiyilum akkaraiyilum pusippukkaana sakalavitha virutchangalum valarum; avaikalin ilaikal uthirvathumillai, avaikalin kanikal keduvathumillai; avaikalukkup paayum thannnneer Parisuththa sthalaththilirunthu paaykirapatiyil maathanthoraுm puthukkanikalaik koduththukkonntaeyirukkum, avaikalin kanikal pusippukkum avaikalin ilaikal avilthaththukkumaanavaikal.And by the river upon the bank thereof, on this side and on that side, shall grow all trees for meat, whose leaf shall not fade, neither shall the fruit thereof be consumed: it shall bring forth new fruit according to his months, because their waters they issued out of the sanctuary: and the fruit thereof shall be for meat, and the leaf thereof for medicine.
13Karththaraakiya aanndavar sollukirathu ennavental: neengal isravaelin panniranndu koththirangalutaiya ilakkaththinpatiyae thaesaththaich suthanthariththukkonndu kurikkavaenntiya ellaiyaavathu: yoseppukku iranndu pangu unndu.Thus saith the Lord GOD; This shall be the border, whereby ye shall inherit the land according to the twelve tribes of Israel: Joseph shall have two portions.
14Sakotharanotae sakotharanukkusa saripangu unndaaka athaich suthanthariththukkollakkadaveerkal; athai ungal pithaakkalukkuk koduppaen entu naan aannaiyittuk koduththaen; aakaiyaal ungalukku intha thaesam suthantharamaakak kitaikkum.And ye shall inherit it, one as well as another: concerning the which I lifted up mine hand to give it unto your fathers: and this land shall fall unto you for inheritance.
15Thaesaththin ellaiyaavathu: vadapuram periya samuththiranthuvakki, sethaathukkup pokira ethlon valiyaayirukkira,And this shall be the border of the land toward the north side, from the great sea, the way of Hethlon, as men go to Zedad;
16Aamaaththum, paeroththaavum, thamaskuvin ellaikkum aamaaththin ellaikkum naduvaana sipraayimum, aapraanin ellaiyotae serntha aathsaar aththeekonumaanathu.Hamath, Berothah, Sibraim, which is between the border of Damascus and the border of Hamath; Hazarhatticon, which is by the coast of Hauran.
17Appatiyae samuththiraththilirunthu pokira ellai aathsaaraenaanum, thamaskuvin ellaiyum, vadamoolaiyaana vadakkum aamaaththin ellaiyumaanathu; ithu vadapuram.And the border from the sea shall be Hazarenan, the border of Damascus, and the north northward, and the border of Hamath. And this is the north side.
18Geelppuraththai aapraanukkum thamaskuvukkum naduvaakavum, geelaeyaaththukkum yorthaanin oramaana Israel thaesaththukkum naduvaakavum geelkkadalmattum irukkum ellaiyaay alappeerkalaaka; ithu geelppuram.And the east side ye shall measure from Hauran, and from Damascus, and from Gilead, and from the land of Israel by Jordan, from the border unto the east sea. And this is the east side.
19Thenmoolaiyaana thenpuram thaamaar thuvakki, kaathaesilulla sanntaimoottuthalin thannnneerkalmattakavum, aaraுmattakavum, periya samuththiramattakavum iruppathu, ithu thenmoolaiyaana thenpuram.And the south side southward, from Tamar even to the waters of strife in Kadesh, the river to the great sea. And this is the south side southward.
20Maerpuram antha ellaithuvakki aamaaththukku ethiraaka vanthu serumattum irukkira periya samuththiramae; ithu maerpuram.The west side also shall be the great sea from the border, till a man come over against Hamath. This is the west side.
21Intha thaesaththai neengal Israel koththirangalinpatiyae ungalukkullae pangittukkolveerkalaaka.So shall ye divide this land unto you according to the tribes of Israel.
22Ungalukkum, ungalukkullae thangi ungalukkulla pillaikalaip peraுkira anniyarkalukkum, neengal athaich seettuppottuch suthantharamaakkikkolveerkalaaka; ivarkal ungalukku Israel puththiraril piranthavarkalaippola irunthu, ungalotaekooda Israel koththirangalin naduvae suthantharaththukku udanpaduvaarkalaaka.And it shall come to pass, that ye shall divide it by lot for an inheritance unto you, and to the strangers that sojourn among you, which shall beget children among you: and they shall be unto you as born in the country among the children of Israel; they shall have inheritance with you among the tribes of Israel.
23Anniyan enthak koththiraththotae thangiyirukkiraano, athilae avanutaiya suthantharaththai avanukkuk kodukkakkadaveerkal entu karththaraakiya aanndavar sollukiraar.And it shall come to pass, that in what tribe the stranger sojourneth, there shall ye give him his inheritance, saith the Lord GOD.