1முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.Now it came to pass in the thirtieth year, in the fourth month, in the fifth day of the month, as I was among the captives by the river of Chebar, that the heavens were opened, and I saw visions of God.
2அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருஷமாயிருந்தது.In the fifth day of the month, which was the fifth year of king Jehoiachin's captivity,
3அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.The word of the LORD came expressly unto Ezekiel the priest, the son of Buzi, in the land of the Chaldeans by the river Chebar; and the hand of the LORD was there upon him.
4இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது.And I looked, and, behold, a whirlwind came out of the north, a great cloud, and a fire infolding itself, and a brightness was about it, and out of the midst thereof as the colour of amber, out of the midst of the fire.
5அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷ சாயலாயிருந்தது.Also out of the midst thereof came the likeness of four living creatures. And this was their appearance; they had the likeness of a man.
6அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன.And every one had four faces, and every one had four wings.
7அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன.And their feet were straight feet; and the sole of their feet was like the sole of a calf's foot: and they sparkled like the colour of burnished brass.
8அவைகளுடைய செட்டைகளின் கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷ கைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன.And they had the hands of a man under their wings on their four sides; and they four had their faces and their wings.
9அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன.Their wings were joined one to another; they turned not when they went; they went every one straight forward.
10அவைகளுடைய முகங்களின் சாயலாவது; வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன.As for the likeness of their faces, they four had the face of a man, and the face of a lion, on the right side: and they four had the face of an ox on the left side; they four also had the face of an eagle.
11அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றொடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின.Thus were their faces: and their wings were stretched upward; two wings of every one were joined one to another, and two covered their bodies.
12அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.And they went every one straight forward: whither the spirit was to go, they went; and they turned not when they went.
13ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது.As for the likeness of the living creatures, their appearance was like burning coals of fire, and like the appearance of lamps: it went up and down among the living creatures; and the fire was bright, and out of the fire went forth lightning.
14அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன.And the living creatures ran and returned as the appearance of a flash of lightning.
15நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.Now as I beheld the living creatures, behold one wheel upon the earth by the living creatures, with his four faces.
16சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தது; அவைகள் நாலுக்கும் ஒரேவித சாயல் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாப்போல் இருந்தது.The appearance of the wheels and their work was like unto the colour of a beryl: and they four had one likeness: and their appearance and their work was as it were a wheel in the middle of a wheel.
17அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை.When they went, they went upon their four sides: and they turned not when they went.
18அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன; அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.As for their rings, they were so high that they were dreadful; and their rings were full of eyes round about them four.
19அந்த ஜீவன்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த ஜீவன்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின.And when the living creatures went, the wheels went by them: and when the living creatures were lifted up from the earth, the wheels were lifted up.
20ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; அவ்விடத்துக்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.Whithersoever the spirit was to go, they went, thither was their spirit to go; and the wheels were lifted up over against them: for the spirit of the living creature was in the wheels.
21அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும் போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.When those went, these went; and when those stood, these stood; and when those were lifted up from the earth, the wheels were lifted up over against them: for the spirit of the living creature was in the wheels.
22ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.And the likeness of the firmament upon the heads of the living creature was as the colour of the terrible crystal, stretched forth over their heads above.
23மண்டலத்தின்கீழ் அவைகளுடைய செட்டைகள் ஒன்றுக்கொன்று எதிர் நேராய் விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு செட்டைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன.And under the firmament were their wings straight, the one toward the other: every one had two, which covered on this side, and every one had two, which covered on that side, their bodies.
24அவைகள் செல்லும்போது அவைகளுடைய இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன.And when they went, I heard the noise of their wings, like the noise of great waters, as the voice of the Almighty, the voice of speech, as the noise of an host: when they stood, they let down their wings.
25அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.And there was a voice from the firmament that was over their heads, when they stood, and had let down their wings.
26அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.And above the firmament that was over their heads was the likeness of a throne, as the appearance of a sapphire stone: and upon the likeness of the throne was the likeness as the appearance of a man above upon it.
27அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.And I saw as the colour of amber, as the appearance of fire round about within it, from the appearance of his loins even upward, and from the appearance of his loins even downward, I saw as it were the appearance of fire, and it had brightness round about.
28மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.As the appearance of the bow that is in the cloud in the day of rain, so was the appearance of the brightness round about. This was the appearance of the likeness of the glory of the LORD. And when I saw it, I fell upon my face, and I heard a voice of one that spake.
1Muppathaam varusham naalaam maasam ainthaanthaethiyilae, naan kaepaar nathiyanntaiyilae siraippattavarkal naduvil irukkumpothu, sampaviththathu ennavental, vaanangal thirakkappada, naan thaevatharisanangalaik kanntaen.Now it came to pass in the thirtieth year, in the fourth month, in the fifth day of the month, as I was among the captives by the river of Chebar, that the heavens were opened, and I saw visions of God.
2Athu yoyaakgeen raajaavutaiya siraiyiruppin ainthaam varushamaayirunthathu.In the fifth day of the month, which was the fifth year of king Jehoiachin's captivity,
3Antha ainthaanthaethiyilae, kalthaeyar thaesaththilulla kaepaar nathiyanntaiyilae poosiyennum aasaariyanutaiya kumaaranaakiya esekkiyaelukkuk karththarutaiya vaarththai unndaaki, angae karththarutaiya karam avanmael amarnthathu.The word of the LORD came expressly unto Ezekiel the priest, the son of Buzi, in the land of the Chaldeans by the river Chebar; and the hand of the LORD was there upon him.
4Itho, vadakkaeyirunthu pusalkaattaுm periya maekamum, aththotae kalantha akkiniyum varakkanntaen; athaich suttilum pirakaasamum, athin naduvil akkinikkullirunthu vilangiya sokusaavin niramum unndaayirunthathu.And I looked, and, behold, a whirlwind came out of the north, a great cloud, and a fire infolding itself, and a brightness was about it, and out of the midst thereof as the colour of amber, out of the midst of the fire.
5Athin naduvilirunthu naalu jeevankal thontina; avaikalin saayal manusha saayalaayirunthathu.Also out of the midst thereof came the likeness of four living creatures. And this was their appearance; they had the likeness of a man.
6Avaikalil ovvontukkum nannaanku mukangalum, ovvontukkum nannaanku settaைkalum irunthana.And every one had four faces, and every one had four wings.
7Avaikalutaiya kaalkal nimirntha kaalkalaayirunthana; avaikalutaiya ullangaalkal kantukkuttiyin ullangaalkalukku oppaayirunthana; avaikal thulakkappatta vennkalaththin varunamaay minnikkonntirunthana.And their feet were straight feet; and the sole of their feet was like the sole of a calf's foot: and they sparkled like the colour of burnished brass.
8Avaikalutaiya settaைkalin geel avaikalin naalu pakkangalilum manusha kaikal irunthana; antha naalukkum athinathin mukangalum athinathin settaைkalum unndaayirunthana.And they had the hands of a man under their wings on their four sides; and they four had their faces and their wings.
9Avaikal ovvontin settaைkalum mattathin settaைkalotae sernthirunthana; avaikal sellukaiyil thirumpaamal ovvontum thanthan thisaikku naermukamaaych sentana.Their wings were joined one to another; they turned not when they went; they went every one straight forward.
10Avaikalutaiya mukangalin saayalaavathu; valathupakkaththil naalum manushamukamum singamukamum, idathupakkaththil naalum eruthu mukamum kaluku mukamumaayirunthana.As for the likeness of their faces, they four had the face of a man, and the face of a lion, on the right side: and they four had the face of an ox on the left side; they four also had the face of an eagle.
11Avaikalutaiya mukangal ippatiyirukka, avaikalutaiya settaைkal maelae pirinthirunthana, ovvontukkumulla iranntiranndu settaைkal ontaொtontu sernthirunthana; matta iranntiranndu settaைkal avaikalutaiya udalkalai mootina.Thus were their faces: and their wings were stretched upward; two wings of every one were joined one to another, and two covered their bodies.
12Avaikal ovvontum thanthan thisaikku naermukamaaych sentathu; aavi pokavaenndumentiruntha evvidaththukkum avaikal poyina; pokaiyil avaikal thirumpippaarkkavillai.And they went every one straight forward: whither the spirit was to go, they went; and they turned not when they went.
13Jeevankalutaiya saayal eppatiyirunthathental, avaikal erikira akkiniththalalin thottamum theevarththikalin thottamumaayirunthathu; antha akkini jeevankalukkullae ulaavip pirakaasamaayirunthathu; akkiniyilirunthu minnal purappattathu.As for the likeness of the living creatures, their appearance was like burning coals of fire, and like the appearance of lamps: it went up and down among the living creatures; and the fire was bright, and out of the fire went forth lightning.
14Antha jeevankal minnalin thottampola otiththirinthana.And the living creatures ran and returned as the appearance of a flash of lightning.
15Naan antha jeevankalaip paarththuk konntirukkaiyil, itho, poomiyil jeevankalanntaiyilae naalu mukangalaiyutaiya oru sakkaraththaik kanntaen.Now as I beheld the living creatures, behold one wheel upon the earth by the living creatures, with his four faces.
16Sakkarangalin roopamum avaikalin vaelaiyum patikappachchaை varunamaayirunthathu; avaikal naalukkum oraevitha saayal irunthathu; avaikalin roopamum avaikalin vaelaiyum sakkaraththukkul sakkaram irukkumaappol irunthathu.The appearance of the wheels and their work was like unto the colour of a beryl: and they four had one likeness: and their appearance and their work was as it were a wheel in the middle of a wheel.
17Avaikal odukaiyil thangal naalu pakkangalilum odum, odukaiyil avaikal thirumpukirathillai.When they went, they went upon their four sides: and they turned not when they went.
18Avaikalin vattangal payangarappadaththakka uyaramaayirunthana; antha naalu vattangalum suttilum kannkalaal nirainthirunthana.As for their rings, they were so high that they were dreadful; and their rings were full of eyes round about them four.
19Antha jeevankal sellumpothu, anthach sakkarangal avaikal arukae otina; antha jeevankal poomiyilirunthu elumpumpothu sakkarangalum elumpina.And when the living creatures went, the wheels went by them: and when the living creatures were lifted up from the earth, the wheels were lifted up.
20Aavi pokavaenndumentiruntha evvidaththukkum avaikal poyina; avvidaththukku avaikalin aaviyum pokavaenndumentirunthathu; sakkarangalum avaikalin arukae elumpina; jeevanutaiya aavi sakkarangalil irunthathu.Whithersoever the spirit was to go, they went, thither was their spirit to go; and the wheels were lifted up over against them: for the spirit of the living creature was in the wheels.
21Avaikal sellumpothu ivaikalum sentana; avaikal nirkum pothu ivaikalum nintana; avaikal poomiyilirunthu elumpumpothu, sakkarangalum avaikal arukae elumpina; jeevanutaiya aavi sakkarangalil irunthathu.When those went, these went; and when those stood, these stood; and when those were lifted up from the earth, the wheels were lifted up over against them: for the spirit of the living creature was in the wheels.
22Jeevanutaiya thalaikalinmael piramikkaththakka vachchirappirakaasamaana oru manndalam irunthathu; athu avaikalutaiya thalaikalinmael uyara virinthirunthathu.And the likeness of the firmament upon the heads of the living creature was as the colour of the terrible crystal, stretched forth over their heads above.
23Manndalaththingeel avaikalutaiya settaைkal ontukkontu ethir naeraay virinthirunthana; thangalthangal udalkalai mootikkollukira iranntiranndu settaைkal irupakkaththilum irukkira ovvontukkum irunthana.And under the firmament were their wings straight, the one toward the other: every one had two, which covered on this side, and every one had two, which covered on that side, their bodies.
24Avaikal sellumpothu avaikalutaiya iraichchalaik kaettaேn; athu peruvellaththin iraichchalpolavum, oru iraanuvaththin iraichchalukku oththa aaravaaraththin saththampolavumirunthathu; avaikal nirkumpothu thangal settaைkalaith thalaravittirunthana.And when they went, I heard the noise of their wings, like the noise of great waters, as the voice of the Almighty, the voice of speech, as the noise of an host: when they stood, they let down their wings.
25Avaikal nintu thangal settaைkalaith thalaravittirukkaiyil, avaikalutaiya thalaikalukku maelaana manndalaththinmaelirunthu oru saththam piranthathu.And there was a voice from the firmament that was over their heads, when they stood, and had let down their wings.
26Avaikalin thalaikalukkumaelulla manndalaththinmeethil neelaraththinampola vilangum oru singaasanaththin saayalinmael manushasaayalukku oththa oru saayalum irunthathu.And above the firmament that was over their heads was the likeness of a throne, as the appearance of a sapphire stone: and upon the likeness of the throne was the likeness as the appearance of a man above upon it.
27Avarutaiya iduppaakak kaanappattathumuthal maelellaam utpuram suttilum akkinimayamaana sokusaavin niramaayirukkakkanntaen; avarutaiya iduppaakak kaanappattathumuthal geelellaam akkinimayamaakavum, athaich suttilum pirakaasamaakavum irukkakkanntaen.And I saw as the colour of amber, as the appearance of fire round about within it, from the appearance of his loins even upward, and from the appearance of his loins even downward, I saw as it were the appearance of fire, and it had brightness round about.
28Malaipeyyum naalil maekaththil vaanavil eppatik kaanappadukiratho, appatiyae suttilumulla anthap pirakaasam kaanappattathu; ithuvae karththarutaiya makimaiyin saayalukkuriya tharisanamaayirunthathu; athai naan kanndapothu mukanguppura vilunthaen; appoluthu paesukira oruvarutaiya saththaththaik kaettaேn.As the appearance of the bow that is in the cloud in the day of rain, so was the appearance of the brightness round about. This was the appearance of the likeness of the glory of the LORD. And when I saw it, I fell upon my face, and I heard a voice of one that spake.