1கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த ஜனங்களும், இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள்.And the LORD said unto Moses, Depart, and go up hence, thou and the people which thou hast brought up out of the land of Egypt, unto the land which I sware unto Abraham, to Isaac, and to Jacob, saying, Unto thy seed will I give it:
2நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன்.And I will send an angel before thee; and I will drive out the Canaanite, the Amorite, and the Hittite, and the Perizzite, the Hivite, and the Jebusite:
3ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் என்றார்.Unto a land flowing with milk and honey: for I will not go up in the midst of thee; for thou art a stiffnecked people: lest I consume thee in the way.
4துக்கமான இவ்வார்த்தைகளை ஜனங்கள் கேட்டபோது, ஒருவரும் தங்கள் ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.And when the people heard these evil tidings, they mourned: and no man did put on him his ornaments.
5ஏனென்றால், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள், நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை நிர்மூலம்பண்ணுவேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்.For the LORD had said unto Moses, Say unto the children of Israel, Ye are a stiffnecked people: I will come up into the midst of thee in a moment, and consume thee: therefore now put off thy ornaments from thee, that I may know what to do unto thee.
6ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் ஓரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.And the children of Israel stripped themselves of their ornaments by the mount Horeb.
7மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.And Moses took the tabernacle, and pitched it without the camp, afar off from the camp, and called it the Tabernacle of the congregation. And it came to pass, that every one which sought the LORD went out unto the tabernacle of the congregation, which was without the camp.
8மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.And it came to pass, when Moses went out unto the tabernacle, that all the people rose up, and stood every man at his tent door, and looked after Moses, until he was gone into the tabernacle.
9மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார்.And it came to pass, as Moses entered into the tabernacle, the cloudy pillar descended, and stood at the door of the tabernacle, and the Lord talked with Moses.
10ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்து கொண்டார்கள்.And all the people saw the cloudy pillar stand at the tabernacle door: and all the people rose up and worshipped, every man in his tent door.
11ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.And the LORD spake unto Moses face to face, as a man speaketh unto his friend. And he turned again into the camp: but his servant Joshua, the son of Nun, a young man, departed not out of the tabernacle.
12மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டு போ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடேகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும் உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே.And Moses said unto the LORD, See, thou sayest unto me, Bring up this people: and thou hast not let me know whom thou wilt send with me. Yet thou hast said, I know thee by name, and thou hast also found grace in my sight.
13உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான்.Now therefore, I pray thee, if I have found grace in thy sight, show me now thy way, that I may know thee, that I may find grace in thy sight: and consider that this nation is thy people.
14அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.And he said, My presence shall go with thee, and I will give thee rest.
15அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்.And he said unto him, If thy presence go not with me, carry us not up hence.
16எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.For wherein shall it be known here that I and thy people have found grace in thy sight? is it not in that thou goest with us? so shall we be separated, I and thy people, from all the people that are upon the face of the earth.
17அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.And the LORD said unto Moses, I will do this thing also that thou hast spoken: for thou hast found grace in my sight, and I know thee by name.
18அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.And he said, I beseech thee, show me thy glory.
19அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,And he said, I will make all my goodness pass before thee, and I will proclaim the name of the LORD before thee; and will be gracious to whom I will be gracious, and will show mercy on whom I will show mercy.
20நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்.And he said, Thou canst not see my face: for there shall no man see me, and live.
21பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.And the LORD said, Behold, there is a place by me, and thou shalt stand upon a rock:
22என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்.And it shall come to pass, while my glory passeth by, that I will put thee in a cleft of the rock, and will cover thee with my hand while I pass by:
23பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.And I will take away mine hand, and thou shalt see my back parts: but my face shall not be seen.
1Karththar Mosesyai Nnokki: neeyum, ekipthu thaesaththilirunthu nee alaiththukkonndu vantha janangalum, ivvidaththai vittup purappattu, un santhathikkuk koduppaen entu naan aapirakaamukkum eesaakkukkum yaakkopukkum aannaiyittukkoduththa paalum thaenum odukira thaesaththukkup pongal.And the LORD said unto Moses, Depart, and go up hence, thou and the people which thou hast brought up out of the land of Egypt, unto the land which I sware unto Abraham, to Isaac, and to Jacob, saying, Unto thy seed will I give it:
2Naan oru thoothanai ungalukku munpaaka anuppi, kaanaaniyanaiyum emoriyanaiyum aeththiyanaiyum perisiyanaiyum aeviyanaiyum epoosiyanaiyum thuraththividuvaen.And I will send an angel before thee; and I will drive out the Canaanite, the Amorite, and the Hittite, and the Perizzite, the Hivite, and the Jebusite:
3Aanaalum, valiyilae naan ungalai nirmoolampannnnaathapatikku, naan ungal naduvae sellamaattaேn, neengal vanangaak kaluththulla janangal entar.Unto a land flowing with milk and honey: for I will not go up in the midst of thee; for thou art a stiffnecked people: lest I consume thee in the way.
4Thukkamaana ivvaarththaikalai janangal kaettapothu, oruvarum thangal aaparanangalaip pottukkollaamal thukkiththukkonntirunthaarkal.And when the people heard these evil tidings, they mourned: and no man did put on him his ornaments.
5Aenental, neengal vanangaak kaluththulla janangal, naan oru nimishaththil ungal naduvil elumpi, ungalai nirmoolampannnuvaen; aakaiyaal, neengal pottirukkira ungal aaparanangalaik kalattippodungal; appoluthu naan ungalukkuch seyyavaenntiyathai arivaen entu Israel puththirarukkuch sol entu Karththar Mosesyotae solliyirunthaar.For the LORD had said unto Moses, Say unto the children of Israel, Ye are a stiffnecked people: I will come up into the midst of thee in a moment, and consume thee: therefore now put off thy ornaments from thee, that I may know what to do unto thee.
6Aakaiyaal, Israel puththirar oraep malaiyarukae thangal aaparanangalaik kalattippottarkal.And the children of Israel stripped themselves of their ornaments by the mount Horeb.
7Moses koodaaraththaip peyarththu, athaip paalayaththukkup purampae thooraththilae pottu, atharku aasarippuk koodaaram entu paerittan. Karththaraith thaedum yaavarum paalayaththukkup purampaana aasarippuk koodaaraththukkup povaarkal.And Moses took the tabernacle, and pitched it without the camp, afar off from the camp, and called it the Tabernacle of the congregation. And it came to pass, that every one which sought the LORD went out unto the tabernacle of the congregation, which was without the camp.
8Moses koodaaraththukkup pokumpothu, janangal ellaarum elunthirunthu, thangal thangal koodaaravaasalil nintukonndu, avan koodaaraththukkul piravaesikkumattum, avan pinnae paarththukkonntirunthaarkal.And it came to pass, when Moses went out unto the tabernacle, that all the people rose up, and stood every man at his tent door, and looked after Moses, until he was gone into the tabernacle.
9Moses koodaaraththukkul piravaesikkaiyil, maekasthampam irangi, koodaaravaasalil nintathu; Karththar Mosesyotae paesinaar.And it came to pass, as Moses entered into the tabernacle, the cloudy pillar descended, and stood at the door of the tabernacle, and the Lord talked with Moses.
10Janangal ellaarum maekasthampam koodaaravaasalil nirkakkanndaarkal; janangal ellaarum elunthirunthu, thangal thangal koodaaravaasalil panninthu konndaarkal.And all the people saw the cloudy pillar stand at the tabernacle door: and all the people rose up and worshipped, every man in his tent door.
11Oruvan than sinaekithanotae paesuvathupola, Karththar Mosesyotae mukamukamaayp paesinaar; pinpu, avan paalayaththukkuth thirumpinaan; noonin kumaaranaakiya yosuvaa ennum avanutaiya pannivitaikkaaranaakiya vaalipan aasarippuk koodaaraththai vittup piriyaathirunthaan.And the LORD spake unto Moses face to face, as a man speaketh unto his friend. And he turned again into the camp: but his servant Joshua, the son of Nun, a young man, departed not out of the tabernacle.
12Moses karththarai Nnokki: thaevareer intha janangalai alaiththukkonndu po entu sonneer; aakilum, ennotaekooda innaarai anuppuvaen enpathai enakku neer arivikkavillai; entalum unnaip paersolli alaiththu arinthirukkiraேn entum, en kannkalil unakkuk kirupai kitaiththathu entum, thaevareer sonnathunntae.And Moses said unto the LORD, See, thou sayest unto me, Bring up this people: and thou hast not let me know whom thou wilt send with me. Yet thou hast said, I know thee by name, and thou hast also found grace in my sight.
13Ummutaiya kannkalil ippoluthu enakkuk kirupai kitaiththathaanaal naan ummai arivatharkum, ummutaiya kannkalil enakkuk kirupai kitaippatharkum, ummutaiya valiyai enakku ariviyum; intha jaathi ummutaiya janamentu ninaiththarulum entan.Now therefore, I pray thee, if I have found grace in thy sight, show me now thy way, that I may know thee, that I may find grace in thy sight: and consider that this nation is thy people.
14Atharku avar: en samukam unakku munpaakach sellum, naan unakku ilaippaaraுthal tharuvaen entar.And he said, My presence shall go with thee, and I will give thee rest.
15Appoluthu avan avarai Nnokki: ummutaiya samukam ennotaekoodach sellaamarponaal, engalai ivvidaththilirunthu konndupokaathirum.And he said unto him, If thy presence go not with me, carry us not up hence.
16Enakkum umathu janangalukkum ummutaiya kannkalilae kirupai kitaiththathenpathu ethinaal ariyappadum; neer engalotae varuvathinaal allavaa? Ippatiyae poomiyinmaelulla janangal ellaarilum, naanum ummutaiya janangalum viseshiththavarkal entu vilangum entan.For wherein shall it be known here that I and thy people have found grace in thy sight? is it not in that thou goest with us? so shall we be separated, I and thy people, from all the people that are upon the face of the earth.
17Appoluthu Karththar Mosesyai Nnokki: nee sonna intha vaarththaiyinpatiyae seyvaen; en kannkalil unakkuk kirupai kitaiththathu; unnaip paersolli alaiththu arinthirukkiraேn entar.And the LORD said unto Moses, I will do this thing also that thou hast spoken: for thou hast found grace in my sight, and I know thee by name.
18Appoluthu avan: ummutaiya makimaiyai enakkuk kaannpiththarulum entan.And he said, I beseech thee, show me thy glory.
19Atharku avar: ennutaiya thayaiyai ellaam naan unakku munpaakak kadanthupokappannnni, karththarutaiya naamaththai unakku munpaakak kooraுvaen; evanmael kirupaiyaayirukkach siththamaayiruppaeno, avanmael kirupaiyaayiruppaen; evanmael irakkamaayirukkach siththamaayiruppaeno avanmael irakkamaayiruppaen entu solli,And he said, I will make all my goodness pass before thee, and I will proclaim the name of the LORD before thee; and will be gracious to whom I will be gracious, and will show mercy on whom I will show mercy.
20Nee en mukaththaik kaanamaattay, oru manushanum ennaik kanndu uyirotirukkak koodaathu entar.And he said, Thou canst not see my face: for there shall no man see me, and live.
21Pinnum Karththar: itho, ennanntaiyil oru idam unndu; nee angae kanmalaiyil nillu.And the LORD said, Behold, there is a place by me, and thou shalt stand upon a rock:
22En makimai kadanthupokumpothu, naan unnai anthak kanmalaiyin vetippilae vaiththu, naan kadanthupokumattum en karaththinaal unnai mooduvaen.And it shall come to pass, while my glory passeth by, that I will put thee in a cleft of the rock, and will cover thee with my hand while I pass by:
23Pinpu, en karaththai eduppaen; appoluthu en pinpakkaththaik kaannpaay; en mukamo kaanappadaathu entar.And I will take away mine hand, and thou shalt see my back parts: but my face shall not be seen.