1ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.Now Peter and John went up together into the temple at the hour of prayer, being the ninth hour.
2அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.And a certain man lame from his mother's womb was carried, whom they laid daily at the gate of the temple which is called Beautiful, to ask alms of them that entered into the temple;
3தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான்.Who seeing Peter and John about to go into the temple asked an alms.
4பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள்.And Peter, fastening his eyes upon him with John, said, Look on us.
5அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான்.And he gave heed unto them, expecting to receive something of them.
6அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;Then Peter said, Silver and gold have I none; but such as I have give I thee: In the name of Jesus Christ of Nazareth rise up and walk.
7வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலனடைந்தது.And he took him by the right hand, and lifted him up: and immediately his feet and ankle bones received strength.
8அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.And he leaping up stood, and walked, and entered with them into the temple, walking, and leaping, and praising God.
9அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:And all the people saw him walking and praising God:
10தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.And they knew that it was he which sat for alms at the Beautiful gate of the temple: and they were filled with wonder and amazement at that which had happened unto him.
11குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.And as the lame man which was healed held Peter and John, all the people ran together unto them in the porch that is called Solomon's, greatly wondering.
12பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன?And when Peter saw it, he answered unto the people, Ye men of Israel, why marvel ye at this? or why look ye so earnestly on us, as though by our own power or holiness we had made this man to walk?
13ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார், அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள்.The God of Abraham, and of Isaac, and of Jacob, the God of our fathers, hath glorified his Son Jesus; whom ye delivered up, and denied him in the presence of Pilate, when he was determined to let him go.
14பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலைபண்ணவேண்டுமென்று கேட்டு,But ye denied the Holy One and the Just, and desired a murderer to be granted unto you;
15ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.And killed the Prince of life, whom God hath raised from the dead; whereof we are witnesses.
16அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினால் அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசம் உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.And his name through faith in his name hath made this man strong, whom ye see and know: yea, the faith which is by him hath given him this perfect soundness in the presence of you all.
17சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமைனாலே இதைச்செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்.And now, brethren, I wot that through ignorance ye did it, as did also your rulers.
18கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கிலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார்.But those things, which God before had shewed by the mouth of all his prophets, that Christ should suffer, he hath so fulfilled.
19ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும்,Repent ye therefore, and be converted, that your sins may be blotted out, when the times of refreshing shall come from the presence of the Lord.
20உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.And he shall send Jesus Christ, which before was preached unto you:
21உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கிலும் உரைத்தவைகளெல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்.Whom the heaven must receive until the times of restitution of all things, which God hath spoken by the mouth of all his holy prophets since the world began.
22மோசே பிதாக்களை நோக்கி: நீங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.For Moses truly said unto the fathers, A prophet shall the Lord your God raise up unto you of your brethren, like unto me; him shall ye hear in all things whatsoever he shall say unto you.
23அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான்.And it shall come to pass, that every soul, which will not hear that prophet, shall be destroyed from among the people.
24சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.Yea, and all the prophets from Samuel and those that follow after, as many as have spoken, have likewise foretold of these days.
25நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்.Ye are the children of the prophets, and of the covenant which God made with our fathers, saying unto Abraham, And in thy seed shall all the kindreds of the earth be blessed.
26அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.Unto you first God, having raised up his Son Jesus, sent him to bless you, in turning away every one of you from his iniquities.
1Jepavaelaiyaakiya onpathaam manni naeraththilae paethuruvum yovaanum thaevaalayaththukkup ponaarkal.Now Peter and John went up together into the temple at the hour of prayer, being the ninth hour.
2Appoluthu than thaayin vayittilirunthu sappaanniyaayp pirantha oru manushanaich sumanthukonnduvanthaarkal; thaevaalayaththilae piravaesikkiravarkalidaththil pichchaைkaetkumpati, naatooraுm alangaara vaasal ennappatta thaevaalaya vaasalanntaiyilae vaippaarkal.And a certain man lame from his mother's womb was carried, whom they laid daily at the gate of the temple which is called Beautiful, to ask alms of them that entered into the temple;
3Thaevaalayaththilae piravaesikkappokira paethuruvaiyum yovaanaiyum avan kanndu pichchaைkaettan.Who seeing Peter and John about to go into the temple asked an alms.
4Paethuruvum yovaanum avanai uttaுppaarththu: engalai Nnokkippaar entarkal.And Peter, fastening his eyes upon him with John, said, Look on us.
5Avan avarkalidaththil aethaakilum kitaikkumentu ennnni, avarkalai Nnokkippaarththaan.And he gave heed unto them, expecting to receive something of them.
6Appoluthu paethuru: velliyum ponnum ennidaththilillai; ennidaththilullathai unakkuth tharukiraேn; nasaraeyanaakiya YesuKristhuvin naamaththinaalae nee elunthu nada entu solli;Then Peter said, Silver and gold have I none; but such as I have give I thee: In the name of Jesus Christ of Nazareth rise up and walk.
7Valathukaiyinaal avanaip pitiththuth thookkivittan, udanae avanutaiya kaalkalum karadukalum pelanatainthathu.And he took him by the right hand, and lifted him up: and immediately his feet and ankle bones received strength.
8Avan kuthiththelunthu nintu nadanthaan; nadanthu, kuthiththu, thaevanaith thuthiththukkonndu, avarkaludanaekooda thaevaalayaththirkul piravaesiththaan.And he leaping up stood, and walked, and entered with them into the temple, walking, and leaping, and praising God.
9Avan nadakkirathaiyum, thaevanaith thuthikkirathaiyum, janangalellaarum kanndu:And all the people saw him walking and praising God:
10Thaevaalayaththin alangaara vaasalanntaiyilae pichchaைkaetka utkaarnthirunthavan ivanthaan entu arinthu, avanukkuch sampaviththathaikkuriththu mikavum aachchariyappattup piramiththaarkal.And they knew that it was he which sat for alms at the Beautiful gate of the temple: and they were filled with wonder and amazement at that which had happened unto him.
11Kunamaakkappatta sappaanni paethuruvaiyum yovaanaiyum pattikkonntirukkaiyil, janangalellaarum piramiththu, saalomon manndapam ennappatta manndapaththilae avarkalidaththirku otivanthaarkal.And as the lame man which was healed held Peter and John, all the people ran together unto them in the porch that is called Solomon's, greatly wondering.
12Paethuru athaik kanndu janangalai Nnokki: isravaelarae, ithaikkuriththu neengal aachchariyappadukirathenna? Naangal engal suyasakthiyinaalaavathu, engal suyapakthiyinaalaavathu, ivanai nadakkappannnninomentu neengal engalai Nnokkip paarkkirathenna?And when Peter saw it, he answered unto the people, Ye men of Israel, why marvel ye at this? or why look ye so earnestly on us, as though by our own power or holiness we had made this man to walk?
13Abraham eesaakku yaakkopu enpavarkalutaiya thaevanaakiya nammutaiya pithaakkalin Dhevan thammutaiya pillaiyaakiya Yesuvai makimaippaduththinaar, avarai neengal oppukkoduththeerkal; pilaaththu avarai viduthalaiyaakkath theermaaniththapothu, avanukkumunpaaka avarai maraுthaliththeerkal.The God of Abraham, and of Isaac, and of Jacob, the God of our fathers, hath glorified his Son Jesus; whom ye delivered up, and denied him in the presence of Pilate, when he was determined to let him go.
14Parisuththamum neethiyumullavarai neengal maraுthaliththu, kolaipaathakanai ungalukkaaka viduthalaipannnavaenndumentu kaettu,But ye denied the Holy One and the Just, and desired a murderer to be granted unto you;
15Jeevaathipathiyaik kolaiseytheerkal; avarai Dhevan mariththoriliruntheluppinaar; atharku naangal saatchikalaayirukkirom.And killed the Prince of life, whom God hath raised from the dead; whereof we are witnesses.
16Avarutaiya naamaththaippattaுm visuvaasaththinaal avarutaiya naamamae neengal paarththu arinthirukkira ivanaip pelappaduththinathu; avaraal unndaakiya visuvaasam ungalellaarukkum munpaaka, inthach sarvaanga sukaththai ivanukkuk koduththathu.And his name through faith in his name hath made this man strong, whom ye see and know: yea, the faith which is by him hath given him this perfect soundness in the presence of you all.
17Sakothararae, neengalum ungal athikaarikalum ariyaamainaalae ithaichcheytheerkalentu arinthirukkiraேn.And now, brethren, I wot that through ignorance ye did it, as did also your rulers.
18Kristhu paadupadavaenndumentu Dhevan thammutaiya theerkkatharisikalellaarutaiya vaakkilum munnariviththavaikalai ivvithamaay niraivaettinaar.But those things, which God before had shewed by the mouth of all his prophets, that Christ should suffer, he hath so fulfilled.
19Aanapatiyinaalae karththarutaiya sannithaanaththilirunthu ilaippaaraுthalin kaalangal varumpatikkum, munnae kurikkappatta YesuKristhuvai avar ungalidaththil anuppumpatikkum,Repent ye therefore, and be converted, that your sins may be blotted out, when the times of refreshing shall come from the presence of the Lord.
20Ungal paavangal nivirththiseyyappadumporuttu neengal mananthirumpik kunappadungal.And he shall send Jesus Christ, which before was preached unto you:
21Ulakaththottamuthal Dhevan thammutaiya Parisuththa theerkkatharisikalellaarutaiya vaakkilum uraiththavaikalellaam niraivaerith theerungaalangal varumalavum Paralokam avarai aettaுkkollavaenndum.Whom the heaven must receive until the times of restitution of all things, which God hath spoken by the mouth of all his holy prophets since the world began.
22Moses pithaakkalai Nnokki: neengal thaevanaakiya Karththar ennaippola oru theerkkatharisiyai ungalukkaaka ungal sakothararilirunthu elumpappannnuvaar; avar ungalukkuchchaொllum ellaavattilum avarukkuch sevikoduppeerkalaaka.For Moses truly said unto the fathers, A prophet shall the Lord your God raise up unto you of your brethren, like unto me; him shall ye hear in all things whatsoever he shall say unto you.
23Anthath theerkkatharisiyin sorkaelaathavano, avan janaththiliraathapatikku nirmoolamaakkappaduvaan.And it shall come to pass, that every soul, which will not hear that prophet, shall be destroyed from among the people.
24Saamuvael mutharkonndu, eththanaipaer theerkkatharisanam uraiththaarkalo, aththanaipaerum intha naatkalai munnariviththaarkal.Yea, and all the prophets from Samuel and those that follow after, as many as have spoken, have likewise foretold of these days.
25Neengal anthath theerkkatharisikalukkup puththiraraayirukkireerkal; un santhathiyinaalae poomiyilulla vamsangalellaam aaseervathikkappadum entu Dhevan aapirakaamukkuch solli, nammutaiya munnorkalotae pannnnina udanpatikkaikkup puththiraraayirukkireerkal.Ye are the children of the prophets, and of the covenant which God made with our fathers, saying unto Abraham, And in thy seed shall all the kindreds of the earth be blessed.
26Avar ungalellaaraiyum ungal pollaangukalilirunthu vilakki, ungalai aaseervathikkumpati Dhevan thammutaiya pillaiyaakiya Yesuvai eluppi, muthalaavathu ungalidaththirkae avarai anuppinaar entan.Unto you first God, having raised up his Son Jesus, sent him to bless you, in turning away every one of you from his iniquities.