Psalm 119:73-80 in Tamil in Tamil

சங்கீதம் 119

73 உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும். Thy hands have made me and fashioned me: give me understanding, that I may learn thy commandments.

74 நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். They that fear thee will be glad when they see me; because I have hoped in thy word.

75 கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன். I know, O LORD, that thy judgments are right, and that thou in faithfulness hast afflicted me.

76 நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக. Let, I pray thee, thy merciful kindness be for my comfort, according to thy word unto thy servant.

77 நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. Let thy tender mercies come unto me, that I may live: for thy law is my delight.

78 அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன். Let the proud be ashamed; for they dealt perversely with me without a cause: but I will meditate in thy precepts.

79 உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக. Let those that fear thee turn unto me, and those that have known thy testimonies.

80 நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது. Let my heart be sound in thy statutes; that I be not ashamed.

Read Full Chapter : சங்கீதம் 119