1அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக்கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.And as he went out of the temple, one of his disciples saith unto him, Master, see what manner of stones and what buildings are here!
2இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப்பெரிய கட்டடங்களைக் காண்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார்.And Jesus answering said unto him, Seest thou these great buildings? there shall not be left one stone upon another, that shall not be thrown down.
3பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்து வந்து:And as he sat upon the mount of Olives over against the temple, Peter and James and John and Andrew asked him privately,
4இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.Tell us, when shall these things be? and what shall be the sign when all these things shall be fulfilled?
5இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.And Jesus answering them began to say, Take heed lest any man deceive you:
6ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.For many shall come in my name, saying, I am Christ; and shall deceive many.
7யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போத`கலங்காதேயுங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.And when ye shall hear of wars and rumours of wars, be ye not troubled: for such things must needs be; but the end shall not be yet.
8ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.For nation shall rise against nation, and kingdom against kingdom: and there shall be earthquakes in divers places, and there shall be famines and troubles: these are the beginnings of sorrows.
9நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள்.But take heed to yourselves: for they shall deliver you up to councils; and in the synagogues ye shall be beaten: and ye shall be brought before rulers and kings for my sake, for a testimony against them.
10சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.And the gospel must first be published among all nations.
11அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்னபேசுவோம் என்று முன்னதாகக் கவலைப்படாமலும் சிந்தியாமலுமிருங்கள்; அந்நாளிகையிலே எது உங்களுக்கு அருள் செய்யப்படுமோ அதையே பேசுங்கள்; ஏனெனில் பேசுகிறவர் நீங்களல்ல பரிசுத்த ஆவியே பேசுகிறவர்.But when they shall lead you, and deliver you up, take no thought beforehand what ye shall speak, neither do ye premeditate: but whatsoever shall be given you in that hour, that speak ye: for it is not ye that speak, but the Holy Ghost.
12அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளைகளையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள்.Now the brother shall betray the brother to death, and the father the son; and children shall rise up against their parents, and shall cause them to be put to death.
13என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.And ye shall be hated of all men for my name's sake: but he that shall endure unto the end, the same shall be saved.
14மேலும் பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்; அது நிற்கத் தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.But when ye shall see the abomination of desolation, spoken of by Daniel the prophet, standing where it ought not, (let him that readeth understand,) then let them that be in Judaea flee to the mountains:
15வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிற்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாகிலும் எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கக்கடவன்.And let him that is on the housetop not go down into the house, neither enter therein, to take any thing out of his house:
16வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்கக்கடவன்.And let him that is in the field not turn back again for to take up his garment.
17அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ!But woe to them that are with child, and to them that give suck in those days!
18நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலே, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.And pray ye that your flight be not in the winter.
19ஏனெனில், தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும்.For in those days shall be affliction, such as was not from the beginning of the creation which God created unto this time, neither shall be.
20கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ, அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.And except that the Lord had shortened those days, no flesh should be saved: but for the elect's sake, whom he hath chosen, he hath shortened the days.
21அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள்.And then if any man shall say to you, Lo, here is Christ; or, lo, he is there; believe him not:
22ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.For false Christs and false prophets shall rise, and shall shew signs and wonders, to seduce, if it were possible, even the elect.
23நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.But take ye heed: behold, I have foretold you all things.
24அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும்;But in those days, after that tribulation, the sun shall be darkened, and the moon shall not give her light,
25வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்.And the stars of heaven shall fall, and the powers that are in heaven shall be shaken.
26அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.And then shall they see the Son of man coming in the clouds with great power and glory.
27அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலுதிசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்.And then shall he send his angels, and shall gather together his elect from the four winds, from the uttermost part of the earth to the uttermost part of heaven.
28அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.Now learn a parable of the fig tree; When her branch is yet tender, and putteth forth leaves, ye know that summer is near:
29அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.So ye in like manner, when ye shall see these things come to pass, know that it is nigh, even at the doors.
30இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.Verily I say unto you, that this generation shall not pass, till all these things be done.
31வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.Heaven and earth shall pass away: but my words shall not pass away.
32அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.But of that day and that hour knoweth no man, no, not the angels which are in heaven, neither the Son, but the Father.
33அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.Take ye heed, watch and pray: for ye know not when the time is.
34ஒருமனுஷன் தன் வீட்டைவிட்டு, புறதேசத்துக்குப்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காரனுக்குக் கற்பிப்பான்.For the Son of Man is as a man taking a far journey, who left his house, and gave authority to his servants, and to every man his work, and commanded the porter to watch.
35அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான், சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.Watch ye therefore: for ye know not when the master of the house cometh, at even, or at midnight, or at the cockcrowing, or in the morning:
36நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்.Lest coming suddenly he find you sleeping.
37நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.And what I say unto you I say unto all, Watch.
1Avar thaevaalayaththai vittup purappadumpothu, avarutaiya seesharkalil oruvan avarai Nnokki: pothakarae, itho, inthakkallukal eppatippattathu! Inthak kattadangal eppatippattathu! Paarum entan.And as he went out of the temple, one of his disciples saith unto him, Master, see what manner of stones and what buildings are here!
2Yesu avanukkup pirathiyuththaramaaka: inthapperiya kattadangalaik kaannkiraayae, oru kallinmael oru kalliraathapatikku ellaam itikkappattuppokum entar.And Jesus answering said unto him, Seest thou these great buildings? there shall not be left one stone upon another, that shall not be thrown down.
3Pinpu, avar thaevaalayaththukku ethiraaka olivamalaiyin mael utkaarnthirukkaiyil, paethuruvum yaakkopum yovaanum anthiraeyaavum avaridaththil thaniththu vanthu:And as he sat upon the mount of Olives over against the temple, Peter and James and John and Andrew asked him privately,
4Ivaikal eppoluthu sampavikkum? Ivaikalellaam niraivaeraுngaalaththukku ataiyaalam enna? Engalukkuch sollavaenndum entarkal.Tell us, when shall these things be? and what shall be the sign when all these things shall be fulfilled?
5Yesu avarkalukkup pirathiyuththaramaaka: oruvanum ungalai vanjiyaathapatikku echcharikkaiyaayirungal.And Jesus answering them began to say, Take heed lest any man deceive you:
6Aenenil anaekar vanthu, en naamaththaikkonndu: naanae Kristhu entu solli, anaekarai vanjippaarkal.For many shall come in my name, saying, I am Christ; and shall deceive many.
7Yuththangalaiyum yuththangalin seythikalaiyum kaelvippadumpotha`kalangaathaeyungal; ivaikalellaam sampavikkavaenntiyathae; aanaalum mutivu udanae varaathu.And when ye shall hear of wars and rumours of wars, be ye not troubled: for such things must needs be; but the end shall not be yet.
8Janaththukku virothamaay janamum, raajyaththukku virothamaay raajyamum elumpum; poomiyathirchchikalum pala idangalil unndaakum, panjangalum kalakangalum unndaakum; ivaikal vaethanaikalukku aarampam.For nation shall rise against nation, and kingdom against kingdom: and there shall be earthquakes in divers places, and there shall be famines and troubles: these are the beginnings of sorrows.
9Neengalo echcharikkaiyaayirungal, aenenil ungalai aalosanaich sangangalukku oppukkoduppaarkal, neengal jepaaalayangalil atikkappaduveerkal; ennimiththam thaesaathipathikalukkum athikaarikalukkum saatchiyaaka avarkalukku munpaaka niraுththappaduveerkal.But take heed to yourselves: for they shall deliver you up to councils; and in the synagogues ye shall be beaten: and ye shall be brought before rulers and kings for my sake, for a testimony against them.
10Sakala jaathikalukkum Suvisesham munthip pirasangikkappadavaenndum.And the gospel must first be published among all nations.
11Avarkal ungalaik konndupoy oppukkodukkumpothu, neengal ennapaesuvom entu munnathaakak kavalaippadaamalum sinthiyaamalumirungal; annaalikaiyilae ethu ungalukku arul seyyappadumo athaiyae paesungal; aenenil paesukiravar neengalalla Parisuththa aaviyae paesukiravar.But when they shall lead you, and deliver you up, take no thought beforehand what ye shall speak, neither do ye premeditate: but whatsoever shall be given you in that hour, that speak ye: for it is not ye that speak, but the Holy Ghost.
12Antiyum sakotharan sakotharanaiyum, thakappan pillaikalaiyum maranaththukku oppukkoduppaarkal; pettaாrukku virothamaakap pillaikal elumpi, avarkalaik kolaiseyvaarkal.Now the brother shall betray the brother to death, and the father the son; and children shall rise up against their parents, and shall cause them to be put to death.
13En naamaththinimiththam ellaaraalum pakaikkappaduveerkal. Mutivupariyantham nilainirpavanae iratchikkappaduvaan.And ye shall be hated of all men for my name's sake: but he that shall endure unto the end, the same shall be saved.
14Maelum paalaakkukira aruvaruppaik kuriththuth thaaniyael theerkkatharisi solliyirukkiraanae; vaasikkiravan sinthikkakkadavan; athu nirkath thakaatha idaththilae neengal athai nirkak kaanumpothu, yoothaeyaavil irukkiravarkal malaikalukku otippokakkadavarkal.But when ye shall see the abomination of desolation, spoken of by Daniel the prophet, standing where it ought not, (let him that readeth understand,) then let them that be in Judaea flee to the mountains:
15Veettinmael irukkiravan than veettirkul irangaamalum, than veettil ethaiyaakilum eduththukkolla ullae pokaamalum irukkakkadavan.And let him that is on the housetop not go down into the house, neither enter therein, to take any thing out of his house:
16Vayalil irukkiravan than vasthiraththai eduppatharkup pinnittuth thirumpaathirukkakkadavan.And let him that is in the field not turn back again for to take up his garment.
17Annaatkalilae karppavathikalukkum paalkodukkiravarkalukkum aiyo!But woe to them that are with child, and to them that give suck in those days!
18Neengal otippovathu maarikaalaththilae, sampaviyaathapatikku vaenntikkollungal.And pray ye that your flight be not in the winter.
19Aenenil, Dhevan ulakaththaich sirushtiththathumuthal ithuvaraikkum sampaviththiraathathum, inimaelum sampaviyaathathumaana mikuntha upaththiravam annaatkalil unndaayirukkum.For in those days shall be affliction, such as was not from the beginning of the creation which God created unto this time, neither shall be.
20Karththar annaatkalaik kuraiththiraavittal, oruvanaakilum thappippovathillai; thaam therinthukonndavarkalinimiththamo, avar antha naatkalaik kuraiththirukkiraar.And except that the Lord had shortened those days, no flesh should be saved: but for the elect's sake, whom he hath chosen, he hath shortened the days.
21Appoluthu: itho, Kristhu ingae irukkiraar, atho, angae irukkiraar entu evanaakilum sonnaal, nampaathaeyungal.And then if any man shall say to you, Lo, here is Christ; or, lo, he is there; believe him not:
22Aenenil, kallakKristhukkalum kallaththeerkkatharisikalum elumpi, koodumaanaal therinthukollappattavarkalaiyum vanjikkaththakkathaaka ataiyaalangalaiyum arputhangalaiyum seyvaarkal.For false Christs and false prophets shall rise, and shall shew signs and wonders, to seduce, if it were possible, even the elect.
23Neengalo echcharikkaiyaayirungal; itho, ellaavattaைyum munnathaaka ungalukku ariviththirukkiraேn.But take ye heed: behold, I have foretold you all things.
24Annaatkalilae, antha upaththiravaththirkuppinpu, sooriyan anthakaarappadum, santhiran oliyaikkodaathirukkum;But in those days, after that tribulation, the sun shall be darkened, and the moon shall not give her light,
25Vaanaththin natchaththirangal vilum, vaanangalilulla saththuvangalum asaikkappadum.And the stars of heaven shall fall, and the powers that are in heaven shall be shaken.
26Appoluthu manushakumaaran mikuntha vallamaiyodum makimaiyodum maekangalinmael varukirathaik kaannpaarkal.And then shall they see the Son of man coming in the clouds with great power and glory.
27Appoluthu avar thammutaiya thootharai anuppi, thaam therinthukonndavarkalai poomiyin kataimunai mutharkonndu vaanaththin kataimunaimattumulla naaluthisaikalilumirunthu koottichchaேrppaar.And then shall he send his angels, and shall gather together his elect from the four winds, from the uttermost part of the earth to the uttermost part of heaven.
28Aththimaraththinaal oru uvamaiyaik kattaுkkollungal; athilae ilangilai thonti, thulirvidumpothu, vasanthakaalam sameepamaayittaு entu ariveerkal.Now learn a parable of the fig tree; When her branch is yet tender, and putteth forth leaves, ye know that summer is near:
29Appatiyae ivaikal sampavikkirathai neengal kaanumpothu, avar sameepamaay vaasalarukae vanthirukkiraar entu ariyungal.So ye in like manner, when ye shall see these things come to pass, know that it is nigh, even at the doors.
30Ivaikalellaam sampavikkum munnae inthach santhathi olinthupokaathentu, meyyaakavae ungalukkuch sollukiraேn.Verily I say unto you, that this generation shall not pass, till all these things be done.
31Vaanamum poomiyum olinthupom, en vaarththaikalo olinthupovathillai.Heaven and earth shall pass away: but my words shall not pass away.
32Antha naalaiyum antha naalikaiyaiyum pithaa oruvar thavira mattaொruvanum ariyaan, paralokaththilulla thootharkalum ariyaarkal, kumaaranum ariyaar.But of that day and that hour knoweth no man, no, not the angels which are in heaven, neither the Son, but the Father.
33Akkaalaththai neengal ariyaathapatiyaal echcharikkaiyaayirungal, viliththirunthu Jebampannnungal.Take ye heed, watch and pray: for ye know not when the time is.
34Orumanushan than veettaைvittu, purathaesaththukkuppoka eththanikkumpothu, than ooliyakkaararukku athikaarangaொduththu, avanavanukkuth than than vaelaiyaiyum niyamiththu, viliththirukkumpatikkuk kaavalkaaranukkuk karpippaan.For the Son of Man is as a man taking a far journey, who left his house, and gave authority to his servants, and to every man his work, and commanded the porter to watch.
35Appatiyae neengalum viliththirungal; aenenil, veettejamaan, saayangaalaththilo, naduraaththiriyilo, seval koovum naeraththilo, kaalaiyilo, eppoluthu varuvaan entu neengal ariyeerkal.Watch ye therefore: for ye know not when the master of the house cometh, at even, or at midnight, or at the cockcrowing, or in the morning:
36Neengal ninaiyaatha vaelaiyil avan vanthu, ungalaith thoongukiravarkalaakak kanndupitiyaathapatikku viliththirungal.Lest coming suddenly he find you sleeping.
37Naan ungalukkuch sollukirathai ellaarukkum sollukiraேn, viliththirungal entar.And what I say unto you I say unto all, Watch.