1அந்நாளிலே தெபொராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது:Then sang Deborah and Barak the son of Abinoam on that day, saying,
2கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியைச் சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்திரியுங்கள்.Praise ye the LORD for the avenging of Israel, when the people willingly offered themselves.
3ராஜாக்களே, கேளுங்கள்; அதிபதிகளே, செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப்பாடி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.Hear, O ye kings; give ear, O ye princes; I, even I, will sing unto the LORD; I will sing praise to the LORD God of Israel.
4கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது.LORD, when thou wentest out of Seir, when thou marchedst out of the field of Edom, the earth trembled, and the heavens dropped, the clouds also dropped water.
5கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்கள் கரைந்தது; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக சீனாயும் கரைந்தது.The mountains melted from before the LORD, even that Sinai from before the LORD God of Israel.
6ஆனாத்தின் குமாரனாகிய சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்க் கிடந்தது; வழி நடக்கிறவர்கள் பக்கவழியாய் நடந்தார்கள்.In the days of Shamgar the son of Anath, in the days of Jael, the highways were unoccupied, and the travellers walked through byways.
7தெபொராளாகிய நான் எழும்புமளவும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்புமளவும், கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போயின.The inhabitants of the villages ceased, they ceased in Israel, until that I Deborah arose, that I arose a mother in Israel.
8நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே நாற்பதினாயிரம் பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?They chose new gods; then was war in the gates: was there a shield or spear seen among forty thousand in Israel?
9ஜனங்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை என் இருதயம் நாடுகிறது; கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.My heart is toward the governors of Israel, that offered themselves willingly among the people. Bless ye the LORD.
10வெள்ளைக் கழுதைகளின்மேல் ஏறுகிறவர்களே, நியாயஸ்தலத்தில் வீற்றிருக்கிறவர்களே, வழியில் நடக்கிறவர்களே, இதைப் பிரஸ்தாபியுங்கள்.Speak, ye that ride on white asses, ye that sit in judgment, and walk by the way.
11தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரரின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே கர்த்தரின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையுமே பிரஸ்தாபப்படுத்துவார்கள்; அதுமுதல் கர்த்தரின் ஜனங்கள் ஒலிமுக வாசல்களிலே போய் இறங்குவார்கள்.They that are delivered from the noise of archers in the places of drawing water, there shall they rehearse the righteous acts of the LORD, even the righteous acts toward the inhabitants of his villages in Israel: then shall the people of the LORD go down to the gates.
12விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோ.Awake, awake, Deborah: awake, awake, utter a song: arise, Barak, and lead thy captivity captive, thou son of Abinoam.
13மீதியாயிருந்தவர்கள் ஜனத்தின் பிரபுக்களை ஆளும்படிசெய்தார்; கர்த்தர் எனக்குப் பராக்கிரமசாலிகளின் மேல் ஆளுகை தந்தார்.Then he made him that remaineth have dominion over the nobles among the people: the LORD made me have dominion over the mighty.
14அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது; உன் ஜனங்களுக்குள்ளே பென்யமீன் மனுஷர் உனக்குப் பின்சென்றார்கள்; மாகீரிலிருந்து அதிபதிகளும், செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள்.Out of Ephraim was there a root of them against Amalek; after thee, Benjamin, among thy people; out of Machir came down governors, and out of Zebulun they that handle the pen of the writer.
15இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடே இருந்தார்கள்; பாராக்கைப்போல இசக்கார் மனுஷரும் பள்ளத்தாக்கில் கால்நடையாய் அனுப்பப்பட்டுப் போனார்கள்; ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி.And the princes of Issachar were with Deborah; even Issachar, and also Barak: he was sent on foot into the valley. For the divisions of Reuben there were great thoughts of heart.
16மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டதென்ன? ரூபனின் பிரிவினைகளால் மனோவிசாரங்கள் மிகுதி.Why abodest thou among the sheepfolds, to hear the bleatings of the flocks? For the divisions of Reuben there were great searchings of heart.
17கீலேயாத் மனுஷர் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்; தாண் மனுஷர் கப்பல்களில் தங்கியிருந்ததென்ன? ஆசேர் மனுஷர் கடற்கரையிலே தங்கி, தங்கள் குடாக்களில் தாபரித்தார்கள்.Gilead abode beyond Jordan: and why did Dan remain in ships? Asher continued on the sea shore, and abode in his breaches.
18செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள்.Zebulun and Naphtali were a people that jeoparded their lives unto the death in the high places of the field.
19ராஜாக்கள் வந்து யுத்தம்பண்ணினார்கள்; அப்பொழுது கானானியரின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்பண்ணினார்கள்; அவர்களுக்குத் திரவியக்கொள்ளை கிடைக்கவில்லை.The kings came and fought, then fought the kings of Canaan in Taanach by the waters of Megiddo; they took no gain of money.
20வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணின.They fought from heaven; the stars in their courses fought against Sisera.
21கீசோன் நதி, பூர்வநதியாகிய கீசோன் நதியே, அவர்களை அடித்துக்கொண்டுபோயிற்று; என் ஆத்துமாவே, நீ பலவான்களை மிதித்தாய்.The river of Kishon swept them away, that ancient river, the river Kishon. O my soul, thou hast trodden down strength.
22அப்பொழுது குதிரைகளின் குளம்புகள்; பாய்ச்சலினாலே, பலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின.Then were the horsehoofs broken by the means of the pransings, the pransings of their mighty ones.
23மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லை; பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணை நிற்க வரவில்லையே.Curse ye Meroz, said the angel of the LORD, curse ye bitterly the inhabitants thereof; because they came not to the help of the LORD, to the help of the LORD against the mighty.
24ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள், கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே.Blessed above women shall Jael the wife of Heber the Kenite be, blessed shall she be above women in the tent.
25தண்ணீரைக் கேட்டான், பாலைக்கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணியிலே வெண்ணெயைக் கொண்டு வந்து கொடுத்தாள்.He asked water, and she gave him milk; she brought forth butter in a lordly dish.
26தன் கையால் ஆணியையும், தன் வலதுகையால் தொழிலாளரின் கத்தியையும் பிடித்து, சிசெராவை அடித்தாள்; அவன் நெறியில் உருவக்கடாவி, அவன் தலையை உடைத்துப்போட்டாள்.She put her hand to the nail, and her right hand to the workmen's hammer; and with the hammer she smote Sisera, she smote off his head, when she had pierced and stricken through his temples.
27அவள் கால் அருகே அவன் மடங்கி விழுந்துகிடந்தான், அவள் கால் அருகே மடங்கி விழுந்தான்; அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே மடிந்து கிடந்தான்.At her feet he bowed, he fell, he lay down: at her feet he bowed, he fell: where he bowed, there he fell down dead.
28சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று பலகணிவழியாய்ப் பார்த்துக்கொண்டிருந்து: அவனுடைய ரதம் வராமல் பிந்திப்போனதென்ன? அவனுடைய ரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறதென்ன என்று புலம்பினாள்.The mother of Sisera looked out at a window, and cried through the lattice, Why is his chariot so long in coming? why tarry the wheels of his chariots?
29அவளுடைய நாயகிகளில் புத்திசாலிகள் அவளுக்கு உத்தரவு சொன்னதுமன்றி, அவள் தானும் தனக்கு மறுமொழியாக:Her wise ladies answered her, yea, she returned answer to herself,
30அவர்கள் கொள்ளையைக் கண்டு பிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு இரண்டொரு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவருணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவருணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத்தையலுள்ள பலவருணமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.Have they not sped? have they not divided the prey; to every man a damsel or two; to Sisera a prey of divers colors, a prey of divers colors of needlework, of divers colors of needlework on both sides, meet for the necks of them that take the spoil?
31கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.So let all thine enemies perish, O LORD: but let them that love him be as the sun when he goeth forth in his might. And the land had rest forty years.
1Annaalilae theporaalum apinokaamin kumaaran paaraakkum paatinathaavathu:Then sang Deborah and Barak the son of Abinoam on that day, saying,
2Karththar isravaelukkaaka neethiyaich sarikkattinathinimiththamum, janangal manappoorvamaayth thangalai oppukkoduththathinimiththamum avarai sthoththiriyungal.Praise ye the LORD for the avenging of Israel, when the people willingly offered themselves.
3Raajaakkalae, kaelungal; athipathikalae, sevikodungal; naan karththaraippaati isravaelin thaevanaakiya karththaraik geerththanampannnuvaen.Hear, O ye kings; give ear, O ye princes; I, even I, will sing unto the LORD; I will sing praise to the LORD God of Israel.
4Karththaavae, neer seyeerilirunthu purappattu, aethomin veliyilirunthu nadanthuvarukaiyil, poomi athirnthathu, vaanam sorinthathu, maekangalum thannnneeraayp polinthathu.LORD, when thou wentest out of Seir, when thou marchedst out of the field of Edom, the earth trembled, and the heavens dropped, the clouds also dropped water.
5Karththarukku munpaakap parvathangal karainthathu; isravaelin thaevanaakiya karththarukku munpaaka seenaayum karainthathu.The mountains melted from before the LORD, even that Sinai from before the LORD God of Israel.
6Aanaaththin kumaaranaakiya samkaarin naatkalilum, yaakaelin naatkalilum, perumpaathaikal paalaayk kidanthathu; vali nadakkiravarkal pakkavaliyaay nadanthaarkal.In the days of Shamgar the son of Anath, in the days of Jael, the highways were unoccupied, and the travellers walked through byways.
7Theporaalaakiya naan elumpumalavum, isravaelilae naan thaayaaka elumpumalavum, kiraamangal paalaayppoyina, isravaelin kiraamangal paalaayppoyina.The inhabitants of the villages ceased, they ceased in Israel, until that I Deborah arose, that I arose a mother in Israel.
8Noothana thaevarkalaith therinthukonndaarkal; appoluthu yuththam vaasalvaraiyum vanthathu; isravaelilae naarpathinaayiram paerukkullae kaedakamum eettiyum kaanappattathunntoo?They chose new gods; then was war in the gates: was there a shield or spear seen among forty thousand in Israel?
9Janangalukkullae thangalai manappoorvamaay oppukkoduththa isravaelin athipathikalai en iruthayam naadukirathu; karththarai sthoththiriyungal.My heart is toward the governors of Israel, that offered themselves willingly among the people. Bless ye the LORD.
10Vellaik kaluthaikalinmael aeraுkiravarkalae, niyaayasthalaththil veettirukkiravarkalae, valiyil nadakkiravarkalae, ithaip pirasthaapiyungal.Speak, ye that ride on white asses, ye that sit in judgment, and walk by the way.
11Thannnneer monndukollum idangalil vilveerarin iraichchalukku neenginavarkal angae karththarin neethiniyaayangalaiyum, avar isravaelilulla thamathu kiraamangalukkuch seytha neethiniyaayangalaiyumae pirasthaapappaduththuvaarkal; athumuthal karththarin janangal olimuka vaasalkalilae poy iranguvaarkal.They that are delivered from the noise of archers in the places of drawing water, there shall they rehearse the righteous acts of the LORD, even the righteous acts toward the inhabitants of his villages in Israel: then shall the people of the LORD go down to the gates.
12Vili, vili, theporaalae, vili, vili, paattuppaadu; paaraakkae, elumpu; apinokaamin kumaaranae, unnaich siraiyaakkinavarkalaich siraiyaakkik konndupo.Awake, awake, Deborah: awake, awake, utter a song: arise, Barak, and lead thy captivity captive, thou son of Abinoam.
13Meethiyaayirunthavarkal janaththin pirapukkalai aalumpatiseythaar; Karththar enakkup paraakkiramasaalikalin mael aalukai thanthaar.Then he made him that remaineth have dominion over the nobles among the people: the LORD made me have dominion over the mighty.
14Amalaekkukku virothamaaka ivarkalutaiya vaer eppiraayeemilirunthu thulirththathu; un janangalukkullae penyameen manushar unakkup pinsentarkal; maageerilirunthu athipathikalum, sepulonilirunthu eluthukolaip pitikkiravarkalum irangivanthaarkal.Out of Ephraim was there a root of them against Amalek; after thee, Benjamin, among thy people; out of Machir came down governors, and out of Zebulun they that handle the pen of the writer.
15Isakkaarin pirapukkalum theporaalotae irunthaarkal; paaraakkaippola isakkaar manusharum pallaththaakkil kaalnataiyaay anuppappattup ponaarkal; roopanin pirivinaikalaal unndaana iruthayaththin ninaivukal mikuthi.And the princes of Issachar were with Deborah; even Issachar, and also Barak: he was sent on foot into the valley. For the divisions of Reuben there were great thoughts of heart.
16Manthaikalin saththaththaik kaetka, nee tholuvangalin naduvae irunthuvittathenna? Roopanin pirivinaikalaal manovisaarangal mikuthi.Why abodest thou among the sheepfolds, to hear the bleatings of the flocks? For the divisions of Reuben there were great searchings of heart.
17Geelaeyaath manushar yorthaanukku akkaraiyilae irunthuvittarkal; thaann manushar kappalkalil thangiyirunthathenna? Aaser manushar kadarkaraiyilae thangi, thangal kudaakkalil thaapariththaarkal.Gilead abode beyond Jordan: and why did Dan remain in ships? Asher continued on the sea shore, and abode in his breaches.
18Sepulonum napthaliyum porkkalaththu munaiyilae thangal uyirai ennnnaamal maranaththukkuth thunninthu nintarkal.Zebulun and Naphtali were a people that jeoparded their lives unto the death in the high places of the field.
19Raajaakkal vanthu yuththampannnninaarkal; appoluthu kaanaaniyarin raajaakkal mekithovin thannnneer arukaana thaanaakkilae yuththampannnninaarkal; avarkalukkuth thiraviyakkollai kitaikkavillai.The kings came and fought, then fought the kings of Canaan in Taanach by the waters of Megiddo; they took no gain of money.
20Vaanaththilirunthu yuththam unndaayittaு; natchaththirangal thangal ayanangalilirunthu siseraavotae yuththam pannnnina.They fought from heaven; the stars in their courses fought against Sisera.
21Geeson nathi, poorvanathiyaakiya geeson nathiyae, avarkalai atiththukkonndupoyittaு; en aaththumaavae, nee palavaankalai mithiththaay.The river of Kishon swept them away, that ancient river, the river Kishon. O my soul, thou hast trodden down strength.
22Appoluthu kuthiraikalin kulampukal; paaychchalinaalae, palavaankalin paaychchalinaalaeyae, pilanthupoyina.Then were the horsehoofs broken by the means of the pransings, the pransings of their mighty ones.
23Maerosaich sapiyungal; athin kutikalaich sapikkavae sapiyungal entu karththarutaiya thoothanaanavar sollukiraar; avarkal Karththar patchaththil thunnainirka varavillai; paraakkiramasaalikalukku virothamaay avarkal Karththar patchaththil thunnai nirka varavillaiyae.Curse ye Meroz, said the angel of the LORD, curse ye bitterly the inhabitants thereof; because they came not to the help of the LORD, to the help of the LORD against the mighty.
24Sthireekalukkullae kaeniyanaana aepaerin manaiviyaakiya yaakael aaseervathikkappattaval, koodaaraththil vaasamaayirukkira sthireekalukkullae aval aaseervathikkappattavalae.Blessed above women shall Jael the wife of Heber the Kenite be, blessed shall she be above women in the tent.
25Thannnneeraik kaettan, paalaikkoduththaal; raajaakkalin kinnnniyilae vennnneyaik konndu vanthu koduththaal.He asked water, and she gave him milk; she brought forth butter in a lordly dish.
26Than kaiyaal aanniyaiyum, than valathukaiyaal tholilaalarin kaththiyaiyum pitiththu, siseraavai atiththaal; avan neriyil uruvakkadaavi, avan thalaiyai utaiththuppottal.She put her hand to the nail, and her right hand to the workmen's hammer; and with the hammer she smote Sisera, she smote off his head, when she had pierced and stricken through his temples.
27Aval kaal arukae avan madangi vilunthukidanthaan, aval kaal arukae madangi vilunthaan; avan engae madangi vilunthaano angae matinthu kidanthaan.At her feet he bowed, he fell, he lay down: at her feet he bowed, he fell: where he bowed, there he fell down dead.
28Siseraavin thaay jannalil nintu palakannivaliyaayp paarththukkonntirunthu: avanutaiya ratham varaamal pinthipponathenna? Avanutaiya rathangalin ottam thaamathikkirathenna entu pulampinaal.The mother of Sisera looked out at a window, and cried through the lattice, Why is his chariot so long in coming? why tarry the wheels of his chariots?
29Avalutaiya naayakikalil puththisaalikal avalukku uththaravu sonnathumanti, aval thaanum thanakku maraுmoliyaaka:Her wise ladies answered her, yea, she returned answer to herself,
30Avarkal kollaiyaik kanndu pitikkavillaiyo, athaip pangidavaenndaamo, aalukku iranntoru pennkalaiyum, siseraavukkuk kollaiyitta palavarunamaana aataikalaiyum, kollaiyitta palavarunamaana siththirath thaiyalaataikalaiyum, kollaiyittavarkalin kaluththukku irupuramum porunthum siththiraththaiyalulla palavarunamaana aataiyaiyum kodukkavaenndaamo ental.Have they not sped? have they not divided the prey; to every man a damsel or two; to Sisera a prey of divers colors, a prey of divers colors of needlework, of divers colors of needlework on both sides, meet for the necks of them that take the spoil?
31Karththaavae, ummaip pakaikkira yaavarum ippatiyae aliyakkadavarkal; yaavarum ippatiyae aliyakkadavarkal; avaril anpukoorukiravarkalo, vallamaiyotae uthikkira sooriyanaippola irukkakkadavarkal entu paatinaarkal. Pinpu thaesam naarpathu varusham amaithalaayirunthathu.So let all thine enemies perish, O LORD: but let them that love him be as the sun when he goeth forth in his might. And the land had rest forty years.