1கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.And the LORD said unto Moses, See, I have made thee a god to Pharaoh: and Aaron thy brother shall be thy prophet.
2நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்: பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன் சகோதரனாகிய ஆரோன் அவனிடத்தில் பேசவேண்டும்.Thou shalt speak all that I command thee: and Aaron thy brother shall speak unto Pharaoh, that he send the children of Israel out of his land.
3நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.And I will harden Pharaoh's heart, and multiply my signs and my wonders in the land of Egypt.
4பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணுவேன்.But Pharaoh shall not hearken unto you, that I may lay my hand upon Egypt, and bring forth mine armies, and my people the children of Israel, out of the land of Egypt by great judgments.
5நான் எகிப்தின் மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப் பண்ணும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார்.And the Egyptians shall know that I am the LORD, when I stretch forth mine hand upon Egypt, and bring out the children of Israel from among them.
6மோசேயும் ஆரோனும் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.And Moses and Aaron did as the LORD commanded them, so did they.
7அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது.And Moses was fourscore years old, and Aaron fourscore and three years old, when they spake unto Pharaoh.
8கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:And the LORD spake unto Moses and unto Aaron, saying,
9உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால் ; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார்.When Pharaoh shall speak unto you, saying, Show a miracle for you: then thou shalt say unto Aaron, Take thy rod, and cast it before Pharaoh, and it shall become a serpent.
10மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.And Moses and Aaron went in unto Pharaoh, and they did so as the LORD had commanded: and Aaron cast down his rod before Pharaoh, and before his servants, and it became a serpent.
11அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.Then Pharaoh also called the wise men and the sorcerers: now the magicians of Egypt, they also did in like manner with their enchantments.
12அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோலை விழுங்கிற்று.For they cast down every man his rod, and they became serpents: but Aaron's rod swallowed up their rods.
13கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.And he hardened Pharaoh's heart, that he hearkened not unto them; as the LORD had said.
14அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான்.And the LORD said unto Moses, Pharaoh's heart is hardened, he refuseth to let the people go.
15காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,Get thee unto Pharaoh in the morning; lo, he goeth out unto the water; and thou shalt stand by the river's brink against he come; and the rod which was turned to a serpent shalt thou take in thine hand.
16அவனை நோக்கி: வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிட வேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்திற்கு அனுப்பியும், இதுவரைக்கும் நீர் கேளாமற்போனீர்.And thou shalt say unto him, The LORD God of the Hebrews hath sent me unto thee, saying, Let my people go, that they may serve me in the wilderness: and, behold, hitherto thou wouldest not hear.
17இதோ, என் கையிலிருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர் மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி,Thus saith the LORD, In this thou shalt know that I am the LORD: behold, I will smite with the rod that is in mine hand upon the waters which are in the river, and they shall be turned to blood.
18நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக் கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.And the fish that is in the river shall die, and the river shall stink; and the Egyptians shall loathe to drink of the water of the river.
19மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்து எகிப்தின் நீர் நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள் மேலும், அவைகள் இரத்தமாகும் படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப் பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.And the LORD spake unto Moses, Say unto Aaron, Take thy rod, and stretch out thine hand upon the waters of Egypt, upon their streams, upon their rivers, and upon their ponds, and upon all their pools of water, that they may become blood; and that there may be blood throughout all the land of Egypt, both in vessels of wood, and in vessels of stone.
20கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி; நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.And Moses and Aaron did so, as the LORD commanded; and he lifted up the rod, and smote the waters that were in the river, in the sight of Pharaoh, and in the sight of his servants; and all the waters that were in the river were turned to blood.
21நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று, எகிப்து தேசமெங்கும் இரத்தமாயிருந்தது.And the fish that was in the river died; and the river stank, and the Egyptians could not drink of the water of the river; and there was blood throughout all the land of Egypt.
22எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது. அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.And the magicians of Egypt did so with their enchantments: and Pharaoh's heart was hardened, neither did he hearken unto them; as the LORD had said.
23பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.And Pharaoh turned and went into his house, neither did he set his heart to this also.
24நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.And all the Egyptians digged round about the river for water to drink; for they could not drink of the water of the river.
25கர்த்தர் நதியை அடித்து ஏழு நாளாயிற்று.And seven days were fulfilled, after that the LORD had smitten the river.
1Karththar Mosesyai Nnokki: paar, unnai naan paarvonukku thaevanaakkinaen; un sakotharanaakiya aaron un theerkkatharisiyaayiruppaan.And the LORD said unto Moses, See, I have made thee a god to Pharaoh: and Aaron thy brother shall be thy prophet.
2Naan unakkuk kattalaiyidum yaavaiyum nee sollavaenndum: paarvon Israel puththiraraith than thaesaththilirunthu anuppividumpati un sakotharanaakiya aaron avanidaththil paesavaenndum.Thou shalt speak all that I command thee: and Aaron thy brother shall speak unto Pharaoh, that he send the children of Israel out of his land.
3Naan paarvonin iruthayaththaik katinappaduththi, ekipthuthaesaththil en ataiyaalangalaiyum arputhangalaiyum mikuthiyaay nadappippaen.And I will harden Pharaoh's heart, and multiply my signs and my wonders in the land of Egypt.
4Paarvon ungalukkuch sevikodukka maattan; aakaiyaal ekipthukku virothamaaka naan en kaiyai neetti, makaa thanndanaiyinaal en senaikalum en janangalumaakiya Israel puththirarai ekipthu thaesaththilirunthu purappadap pannnuvaen.But Pharaoh shall not hearken unto you, that I may lay my hand upon Egypt, and bring forth mine armies, and my people the children of Israel, out of the land of Egypt by great judgments.
5Naan ekipthin mael en kaiyai neetti, Israel puththirarai avarkal naduvilirunthu purappadap pannnumpothu, naanae Karththar entu ekipthiyar arivaarkal entar.And the Egyptians shall know that I am the LORD, when I stretch forth mine hand upon Egypt, and bring out the children of Israel from among them.
6Mosesyum aaronum Karththar thangalukkuk kattalaiyittapatiyae seythaarkal.And Moses and Aaron did as the LORD commanded them, so did they.
7Avarkal paarvonotae paesumpothu, Moseskku ennpathu vayathum, aaronukku ennpaththumoontu vayathumaayirunthathu.And Moses was fourscore years old, and Aaron fourscore and three years old, when they spake unto Pharaoh.
8Karththar Mosesyaiyum aaronaiyum Nnokki:And the LORD spake unto Moses and unto Aaron, saying,
9Ungal patchaththirku oru arputham kaattungal entu paarvon ungalotae sonnaal ; appoluthu nee aaronai Nnokki: un kolai eduththu athaip paarvonukku munpaakap podu enpaayaaka; athu sarppamaakum entar.When Pharaoh shall speak unto you, saying, Show a miracle for you: then thou shalt say unto Aaron, Take thy rod, and cast it before Pharaoh, and it shall become a serpent.
10Mosesyum aaronum paarvonidaththil poy, Karththar thangalukkuk kattalaiyittapati seythaarkal. Aaron paarvonukku munpaakavum, avan ooliyakkaararukku munpaakavum than kolaip pottan, athu sarppamaayittaு.And Moses and Aaron went in unto Pharaoh, and they did so as the LORD had commanded: and Aaron cast down his rod before Pharaoh, and before his servants, and it became a serpent.
11Appoluthu paarvon saasthirikalaiyum sooniyakkaararaiyum alaippiththaan. Ekipthin manthiravaathikalum thangal manthiraviththaiyinaal appatich seythaarkal.Then Pharaoh also called the wise men and the sorcerers: now the magicians of Egypt, they also did in like manner with their enchantments.
12Avarkal ovvoruvanaakath than than kolaip pottapothu, avaikal sarppangalaayina; aaronutaiya kolo avarkalutaiya kolai vilungittaு.For they cast down every man his rod, and they became serpents: but Aaron's rod swallowed up their rods.
13Karththar solliyirunthapati paarvonin iruthayam katinappattathu, avarkalukkuch sevikodaamar ponaan.And he hardened Pharaoh's heart, that he hearkened not unto them; as the LORD had said.
14Appoluthu Karththar Mosesyai Nnokki: paarvonin iruthayam katinamaayittaு; janangalai vidamaattaேn enkiraan.And the LORD said unto Moses, Pharaoh's heart is hardened, he refuseth to let the people go.
15Kaalamae nee paarvonidaththukkup po, avan nathikkup purappattu varuvaan; nee avanukku ethiraaka nathiyoraththilae nintu, sarppamaaka maarina kolai un kaiyilae pitiththukkonndu,Get thee unto Pharaoh in the morning; lo, he goeth out unto the water; and thou shalt stand by the river's brink against he come; and the rod which was turned to a serpent shalt thou take in thine hand.
16Avanai Nnokki: vanaantharaththil enakku aaraathanaiseyya en janangalai anuppivida vaenndum entu sollumpati epireyarutaiya thaevanaakiya Karththar ennai ummidaththirku anuppiyum, ithuvaraikkum neer kaelaamarponeer.And thou shalt say unto him, The LORD God of the Hebrews hath sent me unto thee, saying, Let my people go, that they may serve me in the wilderness: and, behold, hitherto thou wouldest not hear.
17Itho, en kaiyilirukkira kolinaal nathiyil irukkira thannnneer mael atippaen; appoluthu athu iraththamaay maari,Thus saith the LORD, In this thou shalt know that I am the LORD: behold, I will smite with the rod that is in mine hand upon the waters which are in the river, and they shall be turned to blood.
18Nathiyil irukkira meenkal seththu, nathi naarippom; appoluthu nathiyil irukkira thannnneerai ekipthiyar kutikkak koodaamal arosippaarkal; ithinaal naanae Karththar enpathai arinthukolvaay entu Karththar sollukiraar entu sol entar.And the fish that is in the river shall die, and the river shall stink; and the Egyptians shall loathe to drink of the water of the river.
19Maelum, Karththar Mosesyai Nnokki: nee aaronidaththil un kolai eduththu ekipthin neer nilaikalaakiya avarkal vaaykkaalkalmaelum nathikalmaelum kulangalmaelum thannnneer nirkira ellaa idangal maelum, avaikal iraththamaakum patikku, un kaiyai neettu; appoluthu ekipthu thaesam engum marap paaththirangalilum karpaaththirangalilum iraththam unndaayirukkum entu sol entar.And the LORD spake unto Moses, Say unto Aaron, Take thy rod, and stretch out thine hand upon the waters of Egypt, upon their streams, upon their rivers, and upon their ponds, and upon all their pools of water, that they may become blood; and that there may be blood throughout all the land of Egypt, both in vessels of wood, and in vessels of stone.
20Karththar kattalaiyittapati Mosesyum aaronum seythaarkal; paarvonutaiya kannkalukku munpaakavum, avan ooliyakkaararin kannkalukku munpaakavum kolai ongi; nathiyilulla thannnneerai atikka, nathiyilulla thannnneerellaam iraththamaay maarippoyittaு.And Moses and Aaron did so, as the LORD commanded; and he lifted up the rod, and smote the waters that were in the river, in the sight of Pharaoh, and in the sight of his servants; and all the waters that were in the river were turned to blood.
21Nathiyin meenkal seththu, nathi naarippoyittaு; nathiyin thannnneeraik kutikka ekipthiyarukkuk koodaamar poyittaு, ekipthu thaesamengum iraththamaayirunthathu.And the fish that was in the river died; and the river stank, and the Egyptians could not drink of the water of the river; and there was blood throughout all the land of Egypt.
22Ekipthin manthiravaathikalum thangal manthira viththaiyinaal appatich seythaarkal; Karththar solliyirunthapati paarvonin iruthayam katinappattathu. Avarkalukkuch sevikodaamar ponaan.And the magicians of Egypt did so with their enchantments: and Pharaoh's heart was hardened, neither did he hearken unto them; as the LORD had said.
23Paarvon ithaiyum sinthiyaamal, than veettirkuth thirumpipponaan.And Pharaoh turned and went into his house, neither did he set his heart to this also.
24Nathiyin thannnneer kutikka uthavaathapatiyaal, kutikkaththakka thannnneerukkaaka ekipthiyar ellaarum nathiyoraththil oottaுth thonntinaarkal.And all the Egyptians digged round about the river for water to drink; for they could not drink of the water of the river.
25Karththar nathiyai atiththu aelu naalaayittaு.And seven days were fulfilled, after that the LORD had smitten the river.