1அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து;After these things Paul departed from Athens, and came to Corinth;
2யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப்போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்துதேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் நாமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாவையும் அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான்.And found a certain Jew named Aquila, born in Pontus, lately come from Italy, with his wife Priscilla; (because that Claudius had commanded all Jews to depart from Rome:) and came unto them.
3அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி வேலைசெய்துகொண்டு வந்தான்.And because he was of the same craft, he abode with them, and wrought: for by their occupation they were tentmakers.
4ஓய்வுநாள் தோறும் அவன் ஜெபஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னான்.And he reasoned in the synagogue every sabbath, and persuaded the Jews and the Greeks.
5மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்.And when Silas and Timotheus were come from Macedonia, Paul was pressed in the spirit, and testified to the Jews that Jesus was Christ.
6அவர்கள் எதிர்த்து நின்று தூஷித்தபோது, அவன் தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன்; இதுமுதல் புறஜாதியாரிடத்திற்குப் போகிறேனென்று அவர்களுடனே சொல்லி,And when they opposed themselves, and blasphemed, he shook his raiment, and said unto them, Your blood be upon your own heads; I am clean; from henceforth I will go unto the Gentiles.
7அவ்விடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்னும் பேருள்ள ஒருவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெபஆலயத்திற்கு அடுத்ததாயிருந்தது.And he departed thence, and entered into a certain man's house, named Justus, one that worshipped God, whose house joined hard to the synagogue.
8ஜெபஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.And Crispus, the chief ruler of the synagogue, believed on the Lord with all his house; and many of the Corinthians hearing believed, and were baptized.
9இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே;Then spake the Lord to Paul in the night by a vision, Be not afraid, but speak, and hold not thy peace:
10நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; அந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.For I am with thee, and no man shall set on thee to hurt thee: for I have much people in this city.
11அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.And he continued there a year and six months, teaching the word of God among them.
12கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒருமனப்பட்டு, பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோய்:And when Gallio was the deputy of Achaia, the Jews made insurrection with one accord against Paul, and brought him to the judgment seat,
13இவன் வேதப்பிரமாணத்துக்கு விகற்பமாய் தேவனைச் சேவிக்குபடி மனுஷருக்குப் போதிக்கிறான் என்றார்கள்.Saying, This fellow persuadeth men to worship God contrary to the law.
14பவுல் பேசுவதற்கு எத்தனப்படுகையில், கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத நடக்கையாயிருக்குமேயானால் நான் உங்களுக்குப் பொறுமையாய்ச் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும்.And when Paul was now about to open his mouth, Gallio said unto the Jews, If it were a matter of wrong or wicked lewdness, O ye Jews, reason would that I should bear with you:
15இது சொற்களுக்கும், நாமங்களுக்கும், உங்கள் வேதத்துக்கும் அடுத்த தர்க்கமானபடியினாலே, இப்படிப்பட்டவைகளைக்குறித்து விசாரணைசெய்ய எனக்கு மனதில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,But if it be a question of words and names, and of your law, look ye to it; for I will be no judge of such matters.
16அவர்களை நியாயாசனத்தினின்று துரத்திவிட்டான்.And he drave them from the judgment seat.
17அப்பொழுது கிரேக்கரெல்லாரும் ஜெபஆலயத்தலைவனாகிய சொஸ்தேனயைப் பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லைThen all the Greeks took Sosthenes, the chief ruler of the synagogue, and beat him before the judgment seat. And Gallio cared for none of those things.
18பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகேξதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.And Paul after this tarried there yet a good while, and then took his leave of the brethren, and sailed thence into Syria, and with him Priscilla and Aquila; having shorn his head in Cenchrea: for he had a vow.
19அவன் எபேசு பட்டணத்துக்கு வந்தபோது, அங்கே அவர்களை விட்டு நீங்கி, ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷணைபண்ணினான்.And he came to Ephesus, and left them there: but he himself entered into the synagogue, and reasoned with the Jews.
20அவன் இன்னுஞ் சிலகாலம் தங்களுடனே இருக்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டபோது, அவன் சம்மதியாமல்,When they desired him to tarry longer time with them, he consented not;
21வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு,But bade them farewell, saying, I must by all means keep this feast that cometh in Jerusalem: but I will return again unto you, if God will. And he sailed from Ephesus.
22செசரியா பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப் போய், சபையைச் சந்தித்து, அந்தியோகியாவுக்குப் போனான்.And when he had landed at Caesarea, and gone up, and saluted the church, he went down to Antioch.
23அங்கே சிலகாலம் சஞ்சரித்தபின்பு, புறப்பட்டு, கிரமமாய்க் கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீஷரெல்லாரையும் திடப்படுத்தினான்.And after he had spent some time there, he departed, and went over all the country of Galatia and Phrygia in order, strengthening all the disciples.
24அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான்.And a certain Jew named Apollos, born at Alexandria, an eloquent man, and mighty in the scriptures, came to Ephesus.
25அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.This man was instructed in the way of the Lord; and being fervent in the spirit, he spake and taught diligently the things of the Lord, knowing only the baptism of John.
26அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள்.And he began to speak boldly in the synagogue: whom when Aquila and Priscilla had heard, they took him unto them, and expounded unto him the way of God more perfectly.
27பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள்.And when he was disposed to pass into Achaia, the brethren wrote, exhorting the disciples to receive him: who, when he was come, helped them much which had believed through grace:
28அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்.For he mightily convinced the Jews, and that publickly, shewing by the scriptures that Jesus was Christ.
1Athanpinpu pavul aththaenae pattanaththai vittu, korinthu pattanaththukku vanthu;After these things Paul departed from Athens, and came to Corinth;
2Yootharellaarum romaapuriyai vittuppokumpati kilavuthiyuraayan kattalaiyittapatiyinaalae, iththaaliyaavilirunthu puthithaay vanthiruntha ponthuthaesaththaanaakiya aakkillaa ennum naamulla oru yoothanaiyum avan manaiviyaakiya piriskillaavaiyum angae kanndu, avarkalidaththirkup ponaan.And found a certain Jew named Aquila, born in Pontus, lately come from Italy, with his wife Priscilla; (because that Claudius had commanded all Jews to depart from Rome:) and came unto them.
3Avarkal koodaarampannnukira tholilaalikalaayirunthaarkal; thaanum anthath tholil seykiravanaanapatiyinaalae avarkalidaththil thangi vaelaiseythukonndu vanthaan.And because he was of the same craft, he abode with them, and wrought: for by their occupation they were tentmakers.
4Oyvunaal thoraுm avan jepaaalayaththilae sampaashannaipannnni, yootharukkum kiraekkarukkum puththisonnaan.And he reasoned in the synagogue every sabbath, and persuaded the Jews and the Greeks.
5Makkethoniyaavilirunthu seelaavum theemoththaeyum vanthapothu, pavul aaviyil vairaakkiyangaொnndu, Yesuvae Kristhu entu yootharukkuth thirushdaanthappaduththinaan.And when Silas and Timotheus were come from Macedonia, Paul was pressed in the spirit, and testified to the Jews that Jesus was Christ.
6Avarkal ethirththu nintu thooshiththapothu, avan than vasthirangalai uthari: ungal iraththappali ungal thalaiyinmael irukkum; naan suththamaayirukkiraேn; ithumuthal purajaathiyaaridaththirkup pokiraேnentu avarkaludanae solli,And when they opposed themselves, and blasphemed, he shook his raiment, and said unto them, Your blood be upon your own heads; I am clean; from henceforth I will go unto the Gentiles.
7Avvidaththaivittu, thaevanai vanangukiravanaakiya yusthu ennum paerulla oruvanutaiya veettirku vanthaan; avan veedu jepaaalayaththirku aduththathaayirunthathu.And he departed thence, and entered into a certain man's house, named Justus, one that worshipped God, whose house joined hard to the synagogue.
8Jepaaalayaththalaivanaakiya kirispu enpavan than veettar anaivarodum karththaridaththil visuvaasamullavanaanaan. Korinthiyaril anaekarum suviseshaththaik kaettu, visuvaasiththu, njaanasnaanam pettaாrkal.And Crispus, the chief ruler of the synagogue, believed on the Lord with all his house; and many of the Corinthians hearing believed, and were baptized.
9Iraaththiriyilae Karththar pavulukkuth tharisanamaaki: nee payappadaamal paesu, mavunamaayiraathae;Then spake the Lord to Paul in the night by a vision, Be not afraid, but speak, and hold not thy peace:
10Naan unnudanaekooda irukkiraேn, unakkuth theenguseyyumpati oruvanum unmael kaipoduvathillai; anthap pattanaththil enakku anaeka janangal unndu entar.For I am with thee, and no man shall set on thee to hurt thee: for I have much people in this city.
11Avan oru varushamum aaraு maathamum angae thangi, thaevavasanaththai avarkalukkullae upathaesampannnnikkonnduvanthaan.And he continued there a year and six months, teaching the word of God among them.
12Kalliyon enpavan akaayaa naattirku athipathiyaanapothu, yootharkal orumanappattu, pavulukku virothamaay elumpi, avanai niyaayaasanaththukku munpaakak konndupoy:And when Gallio was the deputy of Achaia, the Jews made insurrection with one accord against Paul, and brought him to the judgment seat,
13Ivan vaethappiramaanaththukku vikarpamaay thaevanaich sevikkupati manusharukkup pothikkiraan entarkal.Saying, This fellow persuadeth men to worship God contrary to the law.
14Pavul paesuvatharku eththanappadukaiyil, kalliyon yootharai Nnokki: yootharkalae ithu oru aniyaayamaay, allathu pollaatha nadakkaiyaayirukkumaeyaanaal naan ungalukkup poraுmaiyaaych sevikoduppathu niyaayamaayirukkum.And when Paul was now about to open his mouth, Gallio said unto the Jews, If it were a matter of wrong or wicked lewdness, O ye Jews, reason would that I should bear with you:
15Ithu sorkalukkum, naamangalukkum, ungal vaethaththukkum aduththa tharkkamaanapatiyinaalae, ippatippattavaikalaikkuriththu visaarannaiseyya enakku manathillai, neengalae paarththukkollungal entu solli,But if it be a question of words and names, and of your law, look ye to it; for I will be no judge of such matters.
16Avarkalai niyaayaasanaththinintu thuraththivittan.And he drave them from the judgment seat.
17Appoluthu kiraekkarellaarum jepaaalayaththalaivanaakiya sosthaenayaip pitiththu, niyaayaasanaththukku munpaaka atiththaarkal. Ivaikalil ontaiyunguriththuk kalliyon kavalaippadavillaiThen all the Greeks took Sosthenes, the chief ruler of the synagogue, and beat him before the judgment seat. And Gallio cared for none of those things.
18Pavul anaekanaal angae thariththirunthapinpu, sakaeξthararidaththil uththaravu pettaுkkonndu, thanakku oru piraarththanai unndaayirunthapatiyinaal kengiraeyaa pattanaththil thalaichchavaram pannnnikkonndu, seeriyaathaesaththukkup pokak kappal aerinaan. Piriskillaalum aakkillaavum avanudanae koodapponaarkal.And Paul after this tarried there yet a good while, and then took his leave of the brethren, and sailed thence into Syria, and with him Priscilla and Aquila; having shorn his head in Cenchrea: for he had a vow.
19Avan epaesu pattanaththukku vanthapothu, angae avarkalai vittu neengi, jepaaalayaththil piravaesiththu, yootharudanae sampaashannaipannnninaan.And he came to Ephesus, and left them there: but he himself entered into the synagogue, and reasoned with the Jews.
20Avan innunj silakaalam thangaludanae irukkavaenndumentu avarkal kaettukkonndapothu, avan sammathiyaamal,When they desired him to tarry longer time with them, he consented not;
21Varukira panntikaiyilae eppatiyaayinum naan erusalaemil irukkavaenndum, thaevanukkuch siththamaanaal thirumpi ungalidaththirku varuvaenentu solli, avarkalidaththil uththaravu pettaுkkonndu, kappal aeri, epaesuvai vittup purappattu,But bade them farewell, saying, I must by all means keep this feast that cometh in Jerusalem: but I will return again unto you, if God will. And he sailed from Ephesus.
22Sesariyaa pattanaththukku vanthu, erusalaemukkup poy, Sabaiyaich santhiththu, anthiyokiyaavukkup ponaan.And when he had landed at Caesarea, and gone up, and saluted the church, he went down to Antioch.
23Angae silakaalam sanjariththapinpu, purappattu, kiramamaayk kalaaththiyaa naattilaeyum pirikiyaa naattilaeyum suttiththirinthu, seesharellaaraiyum thidappaduththinaan.And after he had spent some time there, he departed, and went over all the country of Galatia and Phrygia in order, strengthening all the disciples.
24Appoluthu aleksanthiriyaa pattanaththil piranthavanum saathuriyavaanum vaethaakamangalil vallavanumaana appollo ennum paerkonnda oru yoothan epaesu pattanaththukku vanthaan.And a certain Jew named Apollos, born at Alexandria, an eloquent man, and mighty in the scriptures, came to Ephesus.
25Avan karththarutaiya maarkkaththilae upathaesikkappattu, yovaan koduththa snaanaththaimaaththiram arinthavanaayirunthu, aaviyil analullavanaayk karththarukku aduththavaikalaith thittamaayp pothakampannnnikkonnduvanthaan.This man was instructed in the way of the Lord; and being fervent in the spirit, he spake and taught diligently the things of the Lord, knowing only the baptism of John.
26Avan jepaaalayaththil thairiyamaayp paesaththodanginapothu, aakkillaavum piriskillaalum avan paesukirathaik kaettu, avanaich serththukkonndu, thaevanutaiya maarkkaththai athika thittamaay avanukku vivariththukkaannpiththaarkal.And he began to speak boldly in the synagogue: whom when Aquila and Priscilla had heard, they took him unto them, and expounded unto him the way of God more perfectly.
27Pinpu avan akaayaa naattirkup pokavaenndumentirukkaiyil, seesharkal avanai aettaுkkollumpati sakotharar avarkalukku eluthinaarkal.And when he was disposed to pass into Achaia, the brethren wrote, exhorting the disciples to receive him: who, when he was come, helped them much which had believed through grace:
28Avan angae vanthapinpu veliyarangamaaka yootharkaludanae palamaayth tharkkampannnni, Yesuvae Kristhu entu vaethavaakkiyangalaikkonndu thirushdaanthappaduththinapatiyaal, kirupaiyinaalae visuvaasikalaanavarkalukku mikavum uthaviyaayirunthaan.For he mightily convinced the Jews, and that publickly, shewing by the scriptures that Jesus was Christ.