Bible Topic

The king's administrators - அரசனின் நிர்வாகிகள்

1 Chronicles 27:25-34

1 Chronicles 27:25

ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் குமாரன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் துருக்கங்களிலுமுள்ள நிலத்தின் வருமான பண்டகசாலைகளின்மேல் உசியாவின் குமாரன் யோனத்தானும்,

And over the king's treasures was Azmaveth the son of Adiel: and over the storehouses in the fields, in the cities, and in the villages, and in the castles, was Jehonathan the son of Uzziah:

1 Chronicles 27:26

நிலத்தைப் பயிரிட வயல்வெளியின் வேலைசெய்கிறவர்களின்மேல் கேலுூப்பின்குமாரன் எஸ்ரியும்,

And over them that did the work of the field for tillage of the ground was Ezri the son of Chelub:

1 Chronicles 27:27

திராட்சத்தோட்டங்களின்மேல் ராமாத்தியனான சீமேயும், திராட்சத்தோட்டங்களின் வரத்தாகிய திராட்சரசம் வைக்கும் இடங்களின்மேல் சிப்மியனாகிய சப்தியும்,

And over the vineyards was Shimei the Ramathite: over the increase of the vineyards for the wine cellars was Zabdi the Shiphmite:

1 Chronicles 27:28

பள்ளத்தாக்குகளிலுள்ள ஒலிவமரங்களின்மேலும் முசுக்கட்டை விருட்சங்கனின்மேலும் கெதேரியனான பால்கானானும், எண்ணெய்கிடங்குகளின்மேல் யோவாசும்,

And over the olive trees and the sycamore trees that were in the low plains was Baalhanan the Gederite: and over the cellars of oil was Joash:

1 Chronicles 27:29

சாரோனில் மேய்கிற மாடுகளின்மேல் சாரோனியனான சித்ராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளின்மேல் அத்லாயின் குமாரன் சாப்பாத்தும்,

And over the herds that fed in Sharon was Shitrai the Sharonite: and over the herds that were in the valleys was Shaphat the son of Adlai:

1 Chronicles 27:30

ஒட்டகங்களின்மேல் இஸ்மவேலியனாகிய ஓபிலும், கழுதைகளின்மேல் மெரோனோத்தினாகிய எகெதியாவும்,

Over the camels also was Obil the Ishmaelite: and over the asses was Jehdeiah the Meronothite:

1 Chronicles 27:31

ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இவர்களெல்லாரும் தாவீது ராஜாவின்பொருள்களுக்கு விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.

And over the flocks was Jaziz the Hagerite. All these were the rulers of the substance which was king David's.

1 Chronicles 27:32

தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தன்; அக்மோனியின் குமாரன் யெகியேல் ராஜாவின் குமாரரோடிருந்தான்.

Also Jonathan David's uncle was a counselor, a wise man, and a scribe: and Jehiel the son of Hachmoni was with the king's sons:

1 Chronicles 27:33

அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாயிருந்தான்; அர்கியனான ஊஷாயி ராஜாவின் தோழனாயிருந்தான்.

And Ahithophel was the king's counselor: and Hushai the Archite was the king's companion:

1 Chronicles 27:34

பெனாயாவின் குமாரன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக் உதவியாயிருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாயிருந்தான்.

And after Ahithophel was Jehoiada the son of Benaiah, and Abiathar: and the general of the king's army was Joab.