Bible Topic

A song of praise given by the Gorakh family to the leader of Iraq. It is about a painful disease. This is a song by Ezra the Emanite Maskil. - கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல்.

Psalm 88:1-18

Psalm 88:1

என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

O lord God of my salvation, I have cried day and night before thee:

Psalm 88:2

என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.

Let my prayer come before thee: incline thine ear unto my cry;

Psalm 88:3

என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.

For my soul is full of troubles: and my life draweth nigh unto the grave.

Psalm 88:4

நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்ற மனுஷனைப் போலானேன்.

I am counted with them that go down into the pit: I am as a man that hath no strength:

Psalm 88:5

மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக்குழிகளிலே கிடக்கிறவர்களைப் போலானேன்.

Free among the dead, like the slain that lie in the grave, whom thou rememberest no more: and they are cut off from thy hand.

Psalm 88:6

என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.

Thou hast laid me in the lowest pit, in darkness, in the deeps.

Psalm 88:7

உம்முடைய கோபம் என்னை இருத்துகிறது; உம்முடைய அலைகளெல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா.)

Thy wrath lieth hard upon me, and thou hast afflicted me with all thy waves. Selah.

Psalm 88:8

எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினார்; நான் வெளியே புறப்படக் கூடாதபடி அடைபட்டிருக்கிறேன்.

Thou hast put away mine acquaintance far from me; thou hast made me an abomination unto them: I am shut up, and I cannot come forth.

Psalm 88:9

துக்கத்தினால் என் கண் தொய்ந்துபோயிற்று; கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன்.

Mine eye mourneth by reason of affliction: LORD, I have called daily upon thee, I have stretched out my hands unto thee.

Psalm 88:10

மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா.)

Wilt thou shew wonders to the dead? shall the dead arise and praise thee? Selah.

Psalm 88:11

பிரேதக்குழியில் உமது கிருபையும் அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?

Shall thy lovingkindness be declared in the grave? or thy faithfulness in destruction?

Psalm 88:12

இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?

Shall thy wonders be known in the dark? and thy righteousness in the land of forgetfulness?

Psalm 88:13

நானோ, கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.

But unto thee have I cried, O LORD; and in the morning shall my prayer prevent thee.

Psalm 88:14

கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?

LORD, why castest thou off my soul? why hidest thou thy face from me?

Psalm 88:15

சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.

I am afflicted and ready to die from my youth up: while I suffer thy terrors I am distracted.

Psalm 88:16

உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; உம்முடைய பயங்கரங்கள் என்னை அதம்பண்ணுகிறது.

Thy fierce wrath goeth over me; thy terrors have cut me off.

Psalm 88:17

அவைகள் நாடோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, ஏகமாய் என்னை வளைந்துகொள்ளுகிறது.

They came round about me daily like water; they compassed me about together.

Psalm 88:18

சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்துபோனார்கள்.

Lover and friend hast thou put far from me, and mine acquaintance into darkness.