Psalm 119:105-112 in Tamil in Tamil

சங்கீதம் 119

105 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. Thy word is a lamp unto my feet, and a light unto my path.

106 உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன். I have sworn, and I will perform it, that I will keep thy righteous judgments.

107 நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும். I am afflicted very much: quicken me, O LORD, according unto thy word.

108 கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். Accept, I beseech thee, the freewill offerings of my mouth, O LORD, and teach me thy judgments.

109 என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன். My soul is continually in my hand: yet do I not forget thy law.

110 துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழி தவறேன். The wicked have laid a snare for me: yet I erred not from thy precepts.

111 உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி. Thy testimonies have I taken as an heritage for ever: for they are the rejoicing of my heart.

112 முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன். I have inclined mine heart to perform thy statutes alway, even unto the end.

Read Full Chapter : சங்கீதம் 119