Yesuvae Neerthaamae - இயேசுவே நீர்தாமே
இயேசுவே நீர்தாமே
1.இயேசுவே, நீர்தாமே
என் மகிழ்ச்சியாமே
நீர் என் பூரிப்பு;
என் மனம் நாள்தோறும்
ஆசை வாஞ்சையோடும்
ஏங்குகின்றது.
கர்த்தரே, உலகிலே
உம்மை யன்றி வாழ்விராது,
இன்பமுங் காணாது.
2.நல் மறைவின் கீழே
நான் ஒதுங்க, நீரே
என் அரண்மனை;
சாத்தான் வர்மிக்கட்டும்,
எதிரி சீறட்டும்,
இயேசு என் துணை.
திகிலும் பயங்களும்
பாவ நரகக்கெடியும்
இயேசுவால் தணியும்.
3.வலு சர்ப்பத்துக்கும்
சாவின் பற்களுக்கும்
நான் திடுக்கிடேன்.
லோகமே, விரோதி;
நான் சங்கீதம் ஓதி
தோத்திரிக்கிறேன்.
தெய்வக்கை என் சலுகை;
இனி, சாத்தான் கூட்டத்தார்கள்
மௌனம் அடைவார்கள்.
4.பொக்கிஷங்கள் யாவும்
வீணும் விருதாவும்;
இயேசு என் கதி
லோகத்தார் இச்சிக்கும்
வாழ்வோர் குமிழிக்கும்
கானற்குஞ்சரி,
அதை ஏன் தொடருவேன்,
இயேசுவோடடைந்த தாழ்வு
பெரிதான வாழ்வு.
5.லோகத்தின் மினுக்கே,
நீ மகா அழுக்கே.
என்னைவிட்டுப் போ;
பாவங்களுடைய
தீழ்ப்பே, நீ மறைய
வேளையாம்; இதோ
இச்சையே, துன்மார்க்கமே,
நீ எல்லாஞ் சமூலமாக
அற்றுப் போவாயாக.
6.மனமே, நீ ஆறு,
பூரிப்பாகப் பாடு.
இயேசு சேர்ந்தாரே;
அத்தால் எந்தப் பாடும்
தித்திப்பாக மாறும்.
நான் உலகிலே
நிந்தையும் நிஷ்டூரமும்
உத்தரித்தும், இயேசுதாவே
என் மகிழ்ச்சியாமே.
Yesuvae Neerthaamae - இயேசுவே நீர்தாமே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yesuvae Neerthaamae - இயேசுவே நீர்தாமே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesuvae Neerthaamae - இயேசுவே நீர்தாமே PPT Yesuvae Neerthaamae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum