1அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது.Then verily the first covenant had also ordinances of divine service, and a worldly sanctuary.
2எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும்.For there was a tabernacle made; the first, wherein was the candlestick, and the table, and the shewbread; which is called the sanctuary.
3இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது.And after the second veil, the tabernacle which is called the Holiest of all;
4அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.Which had the golden censer, and the ark of the covenant overlaid round about with gold, wherein was the golden pot that had manna, and Aaron's rod that budded, and the tables of the covenant;
5அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைக் குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுது சமயமில்லை.And over it the cherubims of glory shadowing the mercyseat; of which we cannot now speak particularly.
6இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள்.Now when these things were thus ordained, the priests went always into the first tabernacle, accomplishing the service of God.
7இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.But into the second went the high priest alone once every year, not without blood, which he offered for himself, and for the errors of the people:
8அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்.The Holy Ghost this signifying, that the way into the holiest of all was not yet made manifest, while as the first tabernacle was yet standing:
9அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.Which was a figure for the time then present, in which were offered both gifts and sacrifices, that could not make him that did the service perfect, as pertaining to the conscience;
10இவைகள் சீர்திருந்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல.Which stood only in meats and drinks, and divers washings, and carnal ordinances, imposed on them until the time of reformation.
11கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,But Christ being come an high priest of good things to come, by a greater and more perfect tabernacle, not made with hands, that is to say, not of this building;
12வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.Neither by the blood of goats and calves, but by his own blood he entered in once into the holy place, having obtained eternal redemption for us.
13அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால்,For if the blood of bulls and of goats, and the ashes of an heifer sprinkling the unclean, sanctifieth to the purifying of the flesh:
14நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!How much more shall the blood of Christ, who through the eternal Spirit offered himself without spot to God, purge your conscience from dead works to serve the living God?
15ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.And for this cause he is the mediator of the new testament, that by means of death, for the redemption of the transgressions that were under the first testament, they which are called might receive the promise of eternal inheritance.
16ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்தச் சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்.For where a testament is, there must also of necessity be the death of the testator.
17எப்படியெனில், மரணமுண்டானபின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.For a testament is of force after men are dead: otherwise it is of no strength at all while the testator liveth.
18அந்தப்படி, முதலாம் உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டைபண்ணப்படவில்லை.Whereupon neither the first testament was dedicated without blood.
19எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து:For when Moses had spoken every precept to all the people according to the law, he took the blood of calves and of goats, with water, and scarlet wool, and hyssop, and sprinkled both the book, and all the people,
20தேவன் உங்களுக்குக், கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்.Saying, This is the blood of the testament which God hath enjoined unto you.
21இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமூட்டுகளிள்மேலும் இரத்தத்தைத் தெளித்தான்.Moreover he sprinkled with blood both the tabernacle, and all the vessels of the ministry.
22நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.And almost all things are by the law purged with blood; and without shedding of blood is no remission.
23ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே.It was therefore necessary that the patterns of things in the heavens should be purified with these; but the heavenly things themselves with better sacrifices than these.
24அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.For Christ is not entered into the holy places made with hands, which are the figures of the true; but into heaven itself, now to appear in the presence of God for us:
25பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை.Nor yet that he should offer himself often, as the high priest entereth into the holy place every year with blood of others;
26அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.For then must he often have suffered since the foundation of the world: but now once in the end of the world hath he appeared to put away sin by the sacrifice of himself.
27அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,And as it is appointed unto men once to die, but after this the judgment:
28கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.So Christ was once offered to bear the sins of many; and unto them that look for him shall he appear the second time without sin unto salvation.
1Antiyum, muthalaam udanpatikkaiyaanathu aaraathanaikkaetta muraimaikalum poomikkuriya Parisuththa sthalamum utaiyathaayirunthathu.Then verily the first covenant had also ordinances of divine service, and a worldly sanctuary.
2Eppatiyenil, oru koodaaram unndaakkappattirunthathu; athin munthina paakaththil kuththuvilakkum, maejaiyum, thaevasamukaththappangalum irunthana; athu Parisuththa sthalamennappadum.For there was a tabernacle made; the first, wherein was the candlestick, and the table, and the shewbread; which is called the sanctuary.
3Iranndaan thiraikkullae makaa Parisuththa sthalamennappatta koodaaram irunthathu.And after the second veil, the tabernacle which is called the Holiest of all;
4Athilae ponnaarseytha thoopakalasamum, muluvathum pottakadu pothinthirukkappatta udanpatikkaip pettiyum irunthana; anthap pettiyilae mannaa vaikkappatta porpaaththiramum, aaronutaiya thalirththa kolum, udanpatikkaiyin karpalakaikalum irunthana.Which had the golden censer, and the ark of the covenant overlaid round about with gold, wherein was the golden pot that had manna, and Aaron's rod that budded, and the tables of the covenant;
5Atharku maelae makimaiyulla kaerupeenkal vaikkappattuk kirupaasanaththai nilalittirunthana; ivaikalaik kuriththu vivaramaayppaesa ippoluthu samayamillai.And over it the cherubims of glory shadowing the mercyseat; of which we cannot now speak particularly.
6Ivaikal ivvithamaay aayaththamaakkappattirukka, aasaariyarkal aaraathanai muraimaikalai niraivaettaுmpatikku muthalaangaூdaaraththilae niththamum piravaesippaarkal.Now when these things were thus ordained, the priests went always into the first tabernacle, accomplishing the service of God.
7Iranndaangaூdaaraththilae pirathaana aasaariyanmaaththiram varushaththirku orutharam iraththaththotae piravaesiththu, antha iraththaththaith thanakkaakavum janangalutaiya thappithangalukkaakavum seluththuvaan.But into the second went the high priest alone once every year, not without blood, which he offered for himself, and for the errors of the people:
8Athinaalae, muthalaangaூdaaram nirkumalavum Parisuththa sthalaththirkuppokira maarkkam innum velippadavillaiyentu Parisuththa Aaviyaanavar theriyappaduththiyirukkiraar.The Holy Ghost this signifying, that the way into the holiest of all was not yet made manifest, while as the first tabernacle was yet standing:
9Anthak koodaaram ikkaalaththirku uthavukira oppanaiyaayirukkirathu; atharkaettapatiyae seluththappattuvarukira kaannikkaikalum palikalum aaraathanai seykiravanutaiya manachchaாtchiyaip pooranappaduththakkoodaathavaikalaam.Which was a figure for the time then present, in which were offered both gifts and sacrifices, that could not make him that did the service perfect, as pertaining to the conscience;
10Ivaikal seerthirunthal unndaakum kaalamvaraikkum nadanthaeraுmpati kattalaiyidappatta pojanapaanangalum, palavitha snaanangalum, sareeraththirkaetta sadangukalumaeyallaamal vaeralla.Which stood only in meats and drinks, and divers washings, and carnal ordinances, imposed on them until the time of reformation.
11Kristhuvaanavar varappokira nanmaikalukkuriya pirathaana aasaariyaraay velippattu, kaiyinaal seyyappattathaakiya inthach sirushtisampanthamaana koodaaraththin valiyaaka alla, perithum uththamamumaana koodaaraththin valiyaakavum,But Christ being come an high priest of good things to come, by a greater and more perfect tabernacle, not made with hands, that is to say, not of this building;
12Vellaattukkadaa, ilangaalai ivaikalutaiya iraththaththinaalae alla, thammutaiya sontha iraththaththinaalum oraetharam makaa Parisuththa sthalaththilae piravaesiththu, niththiya meetpai unndupannnninaar.Neither by the blood of goats and calves, but by his own blood he entered in once into the holy place, having obtained eternal redemption for us.
13Atheppatiyenil, kaalai vellaattukkadaa ivaikalin iraththamum, theettuppattavarkalmael thelikkappatta kadaariyin saampalum, sareerasuththiyunndaakumpati Parisuththappaduththumaanaal,For if the blood of bulls and of goats, and the ashes of an heifer sprinkling the unclean, sanctifieth to the purifying of the flesh:
14Niththiya aaviyinaalae thammaiththaamae paluthatta paliyaaka thaevanukku oppukkoduththa Kristhuvinutaiya iraththam jeevanulla thaevanukku ooliyanjaெyvatharku ungal manachchaாtchiyaich seththakkiriyaikalarach suththikarippathu evvalavu nichchayam!How much more shall the blood of Christ, who through the eternal Spirit offered himself without spot to God, purge your conscience from dead works to serve the living God?
15Aakaiyaal muthalaam udanpatikkaiyin kaalaththilae nadantha akkiramangalai nivirththiseyyumporuttu avar maranamatainthu, alaikkappattavarkal vaakkuththaththampannnappatta niththiya suthantharaththai atainthukolvatharkaaka, puthu udanpatikkaiyin maththiyastharaayirukkiraar.And for this cause he is the mediator of the new testament, that by means of death, for the redemption of the transgressions that were under the first testament, they which are called might receive the promise of eternal inheritance.
16Aenental, engae maranasaathanamunntoo, angae anthach saathanaththai eluthinavanutaiya maranamum unndaakavaenndum.For where a testament is, there must also of necessity be the death of the testator.
17Eppatiyenil, maranamunndaanapinpae maranasaasanam uraுthippadum; athai eluthinavan uyirotirukkaiyil atharkup pelanillaiyae.For a testament is of force after men are dead: otherwise it is of no strength at all while the testator liveth.
18Anthappati, muthalaam udanpatikkaiyum iraththamillaamal pirathishtaipannnappadavillai.Whereupon neither the first testament was dedicated without blood.
19Eppatiyenil, Moses, niyaayappiramaanaththinpati, sakala janangalukkum ellaak kattalaikalaiyum sonnapinpu, ilangaalai vellaattukkadaa ivaikalin iraththaththaith thannnneerodum, sivappaana aattumayirodum, eesoppodungaூda eduththu pusthakaththinmaelum janangalellaarmaelum theliththu:For when Moses had spoken every precept to all the people according to the law, he took the blood of calves and of goats, with water, and scarlet wool, and hyssop, and sprinkled both the book, and all the people,
20Dhevan ungalukkuk, kattalaiyitta udanpatikkaiyin iraththam ithuvae entu sonnaan.Saying, This is the blood of the testament which God hath enjoined unto you.
21Ivvithamaaka, koodaaraththinmaelum aaraathanaikkuriya sakala pannimoottukalilmaelum iraththaththaith theliththaan.Moreover he sprinkled with blood both the tabernacle, and all the vessels of the ministry.
22Niyaayappiramaanaththinpati konjanguraiya ellaam iraththaththinaalae suththikarikkappadum; iraththanjinthuthalillaamal mannippu unndaakaathu.And almost all things are by the law purged with blood; and without shedding of blood is no remission.
23Aathalaal, paralokaththilullavaikalukkuch saayalaanavaikal ippatippatta palikalinaalae suththikarikkappadavaenntiyathaayirunthathu; paralokaththilullavaikalo ivaikalilum viseshiththa palikalaalae suththikarikkappadavaenntiyathaamae.It was therefore necessary that the patterns of things in the heavens should be purified with these; but the heavenly things themselves with better sacrifices than these.
24Anthappati, meyyaana Parisuththa sthalaththukku ataiyaalamaana kaiyinaal seyyappattathaayirukkira Parisuththa sthalaththilae Kristhuvaanavar piravaesiyaamal, paralokaththilaethaanae ippoluthu namakkaaka thaevanutaiya samukaththil piraththiyatchamaakumpati piravaesiththirukkiraar.For Christ is not entered into the holy places made with hands, which are the figures of the true; but into heaven itself, now to appear in the presence of God for us:
25Pirathaana aasaariyan anniya iraththaththotae varushanthoraுm Parisuththa sthalaththukkul piravaesikkirathupola, avar anaekantharam thammaip paliyidumpatikkup piravaesikkavillai.Nor yet that he should offer himself often, as the high priest entereth into the holy place every year with blood of others;
26Appatiyirunthathaanaal, ulakamunndaanathu mutharkonndu avar anaekantharam paadupadavaenntiyathaayirukkumae; appatiyalla, avar thammaiththaamae paliyidukirathinaalae paavangalai neekkumporuttaka inthak kataisikkaalaththil oraetharam velippattar.For then must he often have suffered since the foundation of the world: but now once in the end of the world hath he appeared to put away sin by the sacrifice of himself.
27Antiyum, oraetharam marippathum, pinpu niyaayaththeerppataivathum, manusharukku niyamikkappattirukkirapatiyae,And as it is appointed unto men once to die, but after this the judgment:
28Kristhuvum anaekarutaiya paavangalaich sumanthu theerkkumpatikku oraetharam paliyidappattu, thamakkaakak kaaththukkonntirukkiravarkalukku iratchippai arulumpati iranndaantharam paavamillaamal tharisanamaavaar.So Christ was once offered to bear the sins of many; and unto them that look for him shall he appear the second time without sin unto salvation.