Genesis 10:1-20 in Tamil in Tamil

ஆதியாகமம் 10

1 நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்ச வரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள். Now these are the generations of the sons of Noah, Shem, Ham, and Japheth: and unto them were sons born after the flood.

2 யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். The sons of Japheth; Gomer, and Magog, and Madai, and Javan, and Tubal, and Meshech, and Tiras.

3 கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். And the sons of Gomer; Ashkenaz, and Riphath, and Togarmah.

4 யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். And the sons of Javan; Elishah, and Tarshish, Kittim, and Dodanim.

5 இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறு வேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன. By these were the isles of the Gentiles divided in their lands; every one after his tongue, after their families, in their nations.

6 காமுடைய குமாரர், கூஷ் மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள். And the sons of Ham; Cush, and Mizraim, and Phut, and Canaan.

7 கூஷுடைய குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள், ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள். And the sons of Cush; Seba, and Havilah, and Sabtah, and Raamah, and Sabtechah: and the sons of Raamah; Sheba, and Dedan.

8 கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். And Cush begat Nimrod: he began to be a mighty one in the earth.

9 இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று. He was a mighty hunter before the LORD: wherefore it is said, Even as Nimrod the mighty hunter before the LORD.

10 சிநேயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தானங்கள். And the beginning of his kingdom was Babel, and Erech, and Accad, and Calneh, in the land of Shinar.

11 அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகோபோத் பட்டணத்தையும், காலாகையும், Out of that land went forth Asshur, and builded Nineveh, and the city Rehoboth, and Calah,

12 நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம். And Resen between Nineveh and Calah: the same is a great city.

13 மிஸ்ராயீம், லுூதீமையும் அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும், And Mizraim begat Ludim, and Anamim, and Lehabim, and Naphtuhim,

14 பத்ரூசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லுூகீமையும், கப்தோரீமையும் பெற்றான். And Pathrusim, and Casluhim, (out of whom came Philistim,) and Caphtorim.

15 கானான் தன் மூத்த மகனாகிய சீதோனையும், கேத்தையும், And Canaan begat Sidon his first born, and Heth,

16 எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும், And the Jebusite, and the Amorite, and the Girgasite,

17 ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும், And the Hivite, and the Arkite, and the Sinite,

18 அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும், பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள். And the Arvadite, and the Zemarite, and the Hamathite: and afterward were the families of the Canaanites spread abroad.

19 கானானியரின் எல்லை, சீதோன்முதல் கேரார் வழியாய்க் காசாமட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசாமட்டுக்கும் இருந்தது. And the border of the Canaanites was from Sidon, as thou comest to Gerar, unto Gaza; as thou goest, unto Sodom, and Gomorrah, and Admah, and Zeboim, even unto Lasha.

20 இவர்கள் தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும், காமுடைய சந்ததியார். These are the sons of Ham, after their families, after their tongues, in their countries, and in their nations.

Read Full Chapter : ஆதியாகமம் 10