1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:And the word of the LORD came unto me, saying,
2மனுபுத்திரனே, நீ இஸ்ரவேலின் பர்வதங்களுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்,Son of man, set thy face toward the mountains of Israel, and prophesy against them,
3இஸ்ரவேலின் பர்வதங்களே, கர்த்தராகிய ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் பர்வதங்களையும் குன்றுகளையும் ஓடைகளையும் பள்ளத்தாக்குகளையும் நோக்கி: இதோ, உங்கள்மேல் நான், நானே பட்டயத்தை வரப்பண்ணி, உங்கள் மேடைகளை அழித்துப்போடுவேன்.And say, Ye mountains of Israel, hear the word of the Lord GOD; Thus saith the Lord GOD to the mountains, and to the hills, to the rivers, and to the valleys; Behold, I, even I, will bring a sword upon you, and I will destroy your high places.
4உங்கள் பலிபீடங்கள் பாழாக்கப்பட்டு, உங்கள் சிலைகள் தகர்க்கப்படும்; உங்களில் கொலையுண்கிறவர்களை உங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக விழப்பண்ணுவேன்.And your altars shall be desolate, and your images shall be broken: and I will cast down your slain men before your idols.
5நான் இஸ்ரவேல் புத்திரருடைய பிரேதங்களை அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் முன்னே கிடக்கப்பண்ணி, உங்கள் பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எலும்புகளைச் சிதறப்பண்ணுவேன்.And I will lay the dead carcases of the children of Israel before their idols; and I will scatter your bones round about your altars.
6உங்கள் பலிபீடங்கள் நிர்மூலமும் பாழுமாகும்படிக்கும், உங்கள் நரகலான விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டு, ஓய்ந்து, உங்கள் சிலைகள் வெட்டுண்டு, உங்கள் கிரியைகள் குலைந்துபோகும்படிக்கும், உங்களுடைய சகல வாசஸ்தலங்களிலுமுள்ள பட்டணங்கள் நிர்மூலமும் உங்கள் மேடைகள் பாழுமாகும்.In all your dwellingplaces the cities shall be laid waste, and the high places shall be desolate; that your altars may be laid waste and made desolate, and your idols may be broken and cease, and your images may be cut down, and your works may be abolished.
7கொலைசெய்யப்பட்டவர்கள் உங்கள் நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.And the slain shall fall in the midst of you, and ye shall know that I am the LORD.
8நீங்கள் தேசங்களில் சிதறடிக்கப்படும்போது, புறஜாதிகளுக்குள்ளே பட்டயத்துக்குத் தப்புவாரை உங்களுக்கு மீதியாக வைப்பேன்.Yet will I leave a remnant, that ye may have some that shall escape the sword among the nations, when ye shall be scattered through the countries.
9என்னை விட்டுச் சோரம்போகிற இருதயத்தைக்குறித்தும், தங்கள் நரகலான விக்கிரகங்களின் பின்னே சோரம்போகிற தங்கள் கண்களைக்குறித்தும் மனமடிவானேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் புறஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய சகல அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளினிமித்தம் தங்களையே வெறுத்து,And they that escape of you shall remember me among the nations whither they shall be carried captives, because I am broken with their whorish heart, which hath departed from me, and with their eyes, which go a whoring after their idols: and they shall lothe themselves for the evils which they have committed in all their abominations.
10இந்தத் தீங்குகளையெல்லாம் தங்களுக்கு நேரிடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் விருதாவாய்ச் சொன்னதில்லையென்று அறிந்துகொள்வார்கள் என்றார்.And they shall know that I am the LORD, and that I have not said in vain that I would do this evil unto them.
11கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் கையில் அடித்து, உன் காலால் தட்டி, இஸ்ரவேல் வம்சத்தாருடைய சகல பொல்லாத அருவருப்புகளினிமித்தமும் ஐயோ! என்று சொல்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் விழுவார்கள்.Thus saith the Lord GOD; Smite with thine hand, and stamp with thy foot, and say, Alas for all the evil abominations of the house of Israel! for they shall fall by the sword, by the famine, and by the pestilence.
12தூரத்திலிருக்கிறவன் கொள்ளைநோயால் சாவான்; சமீபத்திலிருக்கிறவன் பட்டயத்தால் விழுவான்; மீதியாயிருந்து, முற்றிக்கைபோடப்பட்டவன் பஞ்சத்தால் சாவான்; இப்படி அவர்களில் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொள்ளுவேன்.He that is far off shall die of the pestilence; and he that is near shall fall by the sword; and he that remaineth and is besieged shall die by the famine: thus will I accomplish my fury upon them.
13அவர்கள் தங்கள் நரகலான சகல விக்கிரகங்களுக்கும் மதுரவாசனையான தூபத்தைக் காட்டின ஸ்தலங்களாகிய உயர்ந்த சகல மேடுகளிலும், பர்வதங்களுடைய சகல சிகரங்களிலும், பச்சையான சகல விருட்சங்களின் கீழும், தழைத்திருக்கிற சகல கர்வாலி மரங்களின் கீழும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் நடுவிலும் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும், அவர்களில் கொலையுண்டவர்கள் கிடக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.Then shall ye know that I am the LORD, when their slain men shall be among their idols round about their altars, upon every high hill, in all the tops of the mountains, and under every green tree, and under every thick oak, the place where they did offer sweet savour to all their idols.
14நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, அவர்களுடைய எல்லா வாசஸ்தலங்களுமுள்ள தேசத்தை அழித்து, அதைத் திப்லாத்தின் வனாந்தரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்ப் பாழாக்குவேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.So will I stretch out my hand upon them, and make the land desolate, yea, more desolate than the wilderness toward Diblath, in all their habitations: and they shall know that I am the LORD.
1Karththarutaiya vaarththai enakku unndaaki, avar:And the word of the LORD came unto me, saying,
2Manupuththiranae, nee isravaelin parvathangalukku naeraaka un mukaththaith thiruppi, avaikalukku virothamaakath theerkkatharisanam uraiththuch sollavaenntiyathu ennavental,Son of man, set thy face toward the mountains of Israel, and prophesy against them,
3Isravaelin parvathangalae, karththaraakiya aanndavarin vaarththaiyaik kaelungal; karththaraakiya aanndavar parvathangalaiyum kuntukalaiyum otaikalaiyum pallaththaakkukalaiyum Nnokki: itho, ungalmael naan, naanae pattayaththai varappannnni, ungal maetaikalai aliththuppoduvaen.And say, Ye mountains of Israel, hear the word of the Lord GOD; Thus saith the Lord GOD to the mountains, and to the hills, to the rivers, and to the valleys; Behold, I, even I, will bring a sword upon you, and I will destroy your high places.
4Ungal palipeedangal paalaakkappattu, ungal silaikal thakarkkappadum; ungalil kolaiyunnkiravarkalai ungal narakalaana vikkirakangalukku munpaaka vilappannnuvaen.And your altars shall be desolate, and your images shall be broken: and I will cast down your slain men before your idols.
5Naan Israel puththirarutaiya piraethangalai avarkalutaiya narakalaana vikkirakangalin munnae kidakkappannnni, ungal palipeedangalaich suttilum ungal elumpukalaich sitharappannnuvaen.And I will lay the dead carcases of the children of Israel before their idols; and I will scatter your bones round about your altars.
6Ungal palipeedangal nirmoolamum paalumaakumpatikkum, ungal narakalaana vikkirakangal thakarkkappattu, oynthu, ungal silaikal vettunndu, ungal kiriyaikal kulainthupokumpatikkum, ungalutaiya sakala vaasasthalangalilumulla pattanangal nirmoolamum ungal maetaikal paalumaakum.In all your dwellingplaces the cities shall be laid waste, and the high places shall be desolate; that your altars may be laid waste and made desolate, and your idols may be broken and cease, and your images may be cut down, and your works may be abolished.
7Kolaiseyyappattavarkal ungal naduvil viluvaarkal; appoluthu naan Karththar entu arinthukolveerkal.And the slain shall fall in the midst of you, and ye shall know that I am the LORD.
8Neengal thaesangalil sitharatikkappadumpothu, purajaathikalukkullae pattayaththukkuth thappuvaarai ungalukku meethiyaaka vaippaen.Yet will I leave a remnant, that ye may have some that shall escape the sword among the nations, when ye shall be scattered through the countries.
9Ennai vittuch sorampokira iruthayaththaikkuriththum, thangal narakalaana vikkirakangalin pinnae sorampokira thangal kannkalaikkuriththum manamativaanaen entu ungalil thappippona avarkal thaangal siraippattirukkum purajaathikalukkullae ennai ninaiththu, thangalutaiya sakala aruvaruppukalinaalum thaangal seytha pollaappukalinimiththam thangalaiyae veraுththu,And they that escape of you shall remember me among the nations whither they shall be carried captives, because I am broken with their whorish heart, which hath departed from me, and with their eyes, which go a whoring after their idols: and they shall lothe themselves for the evils which they have committed in all their abominations.
10Inthath theengukalaiyellaam thangalukku naeridappannnuvaen entu karththaraakiya naan viruthaavaaych sonnathillaiyentu arinthukolvaarkal entar.And they shall know that I am the LORD, and that I have not said in vain that I would do this evil unto them.
11Karththaraakiya aanndavar sollukirathu ennavental: nee un kaiyil atiththu, un kaalaal thatti, Israel vamsaththaarutaiya sakala pollaatha aruvaruppukalinimiththamum aiyo! Entu sol; avarkal pattayaththaalum panjaththaalum kollaiNnoyaalum viluvaarkal.Thus saith the Lord GOD; Smite with thine hand, and stamp with thy foot, and say, Alas for all the evil abominations of the house of Israel! for they shall fall by the sword, by the famine, and by the pestilence.
12Thooraththilirukkiravan kollaiNnoyaal saavaan; sameepaththilirukkiravan pattayaththaal viluvaan; meethiyaayirunthu, muttikkaipodappattavan panjaththaal saavaan; ippati avarkalil en ukkiraththaith theerththukkolluvaen.He that is far off shall die of the pestilence; and he that is near shall fall by the sword; and he that remaineth and is besieged shall die by the famine: thus will I accomplish my fury upon them.
13Avarkal thangal narakalaana sakala vikkirakangalukkum mathuravaasanaiyaana thoopaththaik kaattina sthalangalaakiya uyarntha sakala maedukalilum, parvathangalutaiya sakala sikarangalilum, pachchaைyaana sakala virutchangalin geelum, thalaiththirukkira sakala karvaali marangalin geelum, avarkalutaiya narakalaana vikkirakangalin naduvilum avarkalutaiya palipeedangalaich suttilum, avarkalil kolaiyunndavarkal kidakkumpothu, naan Karththar entu arinthukolvaarkal.Then shall ye know that I am the LORD, when their slain men shall be among their idols round about their altars, upon every high hill, in all the tops of the mountains, and under every green tree, and under every thick oak, the place where they did offer sweet savour to all their idols.
14Naan en kaiyai avarkalukku virothamaaka neetti, avarkalutaiya ellaa vaasasthalangalumulla thaesaththai aliththu, athaith thiplaaththin vanaantharaththaippaarkkilum athikamaayp paalaakkuvaen, appoluthu naan Karththar entu arinthukolvaarkal entar.So will I stretch out my hand upon them, and make the land desolate, yea, more desolate than the wilderness toward Diblath, in all their habitations: and they shall know that I am the LORD.