1நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய கர்த்தரால் துரத்திவிடப்பட்டு, எல்லா ஜாதிகளிடத்திலும் போயிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து,And it shall come to pass, when all these things are come upon thee, the blessing and the curse, which I have set before thee, and thou shalt call them to mind among all the nations, whither the LORD thy God hath driven thee,
2உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால்,And shalt return unto the LORD thy God, and shalt obey his voice according to all that I command thee this day, thou and thy children, with all thine heart, and with all thy soul;
3உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்.That then the LORD thy God will turn thy captivity, and have compassion upon thee, and will return and gather thee from all the nations, whither the LORD thy God hath scattered thee.
4உன்னுடையவர்கள் வானத்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக் கூட்டி, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து,If any of thine be driven out unto the outmost parts of heaven, from thence will the LORD thy God gather thee, and from thence will he fetch thee:
5உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார்.And the LORD thy God will bring thee into the land which thy fathers possessed, and thou shalt possess it; and he will do thee good, and multiply thee above thy fathers.
6உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி,And the LORD thy God will circumcise thine heart, and the heart of thy seed, to love the LORD thy God with all thine heart, and with all thy soul, that thou mayest live.
7இந்தச் சாபங்களையெல்லாம் உன் சத்துருக்கள்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைஞர்மேலும் சுமரப்பண்ணுவார்.And the LORD thy God will put all these curses upon thine enemies, and on them that hate thee, which persecuted thee.
8நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.And thou shalt return and obey the voice of the LORD, and do all his commandments which I command thee this day.
9அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.And the LORD thy God will make thee plenteous in every work of thine hand, in the fruit of thy body, and in the fruit of thy cattle, and in the fruit of thy land, for good: for the LORD will again rejoice over thee for good, as he rejoiced over thy fathers:
10உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்.If thou shalt hearken unto the voice of the LORD thy God, to keep his commandments and his statutes which are written in this book of the law, and if thou turn unto the LORD thy God with all thine heart, and with all thy soul.
11நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல.For this commandment which I command thee this day, it is not hidden from thee, neither is it far off.
12நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் அவர் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல;It is not in heaven, that thou shouldest say, Who shall go up for us to heaven, and bring it unto us, that we may hear it, and do it?
13நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல;Neither is it beyond the sea, that thou shouldest say, Who shall go over the sea for us, and bring it unto us, that we may hear it, and do it?
14நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.But the word is very nigh unto thee, in thy mouth, and in thy heart, that thou mayest do it.
15இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.See, I have set before thee this day life and good, and death and evil;
16நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.In that I command thee this day to love the LORD thy God, to walk in his ways, and to keep his commandments and his statutes and his judgments, that thou mayest live and multiply: and the LORD thy God shall bless thee in the land whither thou goest to possess it.
17நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப்பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால்,But if thine heart turn away, so that thou wilt not hear, but shalt be drawn away, and worship other gods, and serve them;
18நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நெடுநாள் வாழாமல், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.I denounce unto you this day, that ye shall surely perish, and that ye shall not prolong your days upon the land, whither thou passest over Jordan to go to possess it.
19நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,I call heaven and earth to record this day against you, that I have set before you life and death, blessing and cursing: therefore choose life, that both thou and thy seed may live:
20கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.That thou mayest love the LORD thy God, and that thou mayest obey his voice, and that thou mayest cleave unto him: for he is thy life, and the length of thy days: that thou mayest dwell in the land which the LORD sware unto thy fathers, to Abraham, to Isaac, and to Jacob, to give them.
1Naan unakku munpaaka vaiththa aaseervaathamum saapamumaakiya inthak kaariyangalellaam unmael varumpothu: nee un thaevanaakiya karththaraal thuraththividappattu, ellaa jaathikalidaththilum poyirukkumpothu, nee un iruthayaththilae sinthanaiseythu,And it shall come to pass, when all these things are come upon thee, the blessing and the curse, which I have set before thee, and thou shalt call them to mind among all the nations, whither the LORD thy God hath driven thee,
2Un thaevanaakiya karththaridaththukkae thirumpi, intu naan unakkuk karpikkirapatiyellaam, neeyum un pillaikalum ungal mulu iruthayaththodum ungal mulu aaththumaavodum avarutaiya saththaththirkuch sevikoduththaal,And shalt return unto the LORD thy God, and shalt obey his voice according to all that I command thee this day, thou and thy children, with all thine heart, and with all thy soul;
3Un thaevanaakiya Karththar un siraiyiruppaith thiruppi, unakku irangi, un thaevanaakiya Karththar unnaich sithara atiththa ellaa janangalidaththilum irukkira unnaith thirumpach serththukkolluvaar.That then the LORD thy God will turn thy captivity, and have compassion upon thee, and will return and gather thee from all the nations, whither the LORD thy God hath scattered thee.
4Unnutaiyavarkal vaanaththin kataiyaana thisaimattum thuraththunntirunthaalum, un thaevanaakiya Karththar angae irukkira unnaik kootti, angaeyirunthu unnaik konnduvanthu,If any of thine be driven out unto the outmost parts of heaven, from thence will the LORD thy God gather thee, and from thence will he fetch thee:
5Un pithaakkal suthanthariththiruntha thaesaththai nee suthantharikkumpatikku, un thaevanaakiya Karththar athil unnaich serththu, unakku nanmaiseythu, un pithaakkalaippaarkkilum unnaip perukappannnuvaar.And the LORD thy God will bring thee into the land which thy fathers possessed, and thou shalt possess it; and he will do thee good, and multiply thee above thy fathers.
6Un thaevanaakiya karththaril nee un mulu iruthayaththodum un mulu aaththumaavodum anpukoornthu pilaikkumpati, un thaevanaakiya Karththar un iruthayaththaiyum un santhathiyaarin iruthayaththaiyum viruththasethanampannnni,And the LORD thy God will circumcise thine heart, and the heart of thy seed, to love the LORD thy God with all thine heart, and with all thy soul, that thou mayest live.
7Inthach saapangalaiyellaam un saththurukkalmaelum unnaith thunpappaduththina un pakainjarmaelum sumarappannnuvaar.And the LORD thy God will put all these curses upon thine enemies, and on them that hate thee, which persecuted thee.
8Neeyo mananthirumpi, karththarin saththaththirkuch sevikoduththu, naan intu unakkuk karpikkira avarutaiya ellaak karpanaikalinpatiyum seyvaay.And thou shalt return and obey the voice of the LORD, and do all his commandments which I command thee this day.
9Appoluthu unakku nanmai unndaakumpati un thaevanaakiya Karththar un kaikal seyyum ellaa vaelaikalilum, un karppaththin kaniyilum, un mirukajeevanin palanilum, un nilaththin kaniyilum unakkup paripooranamunndaakach seyvaar.And the LORD thy God will make thee plenteous in every work of thine hand, in the fruit of thy body, and in the fruit of thy cattle, and in the fruit of thy land, for good: for the LORD will again rejoice over thee for good, as he rejoiced over thy fathers:
10Un thaevanaakiya karththarutaiya saththaththirkuch sevikoduththu, intha niyaayappiramaana pusthakaththil eluthiyirukkira avarutaiya karpanaikalaiyum avarutaiya kattalaikalaiyum kaikkollumpothum, un thaevanaakiya karththaridaththil un mulu iruthayaththodum un mulu aaththumaavodum thirumpumpothum, Karththar un pithaakkalmael santhoshamaayirunthathupola, unmaelum unakku nanmai unndaakath thirumpavum santhoshamaayiruppaar.If thou shalt hearken unto the voice of the LORD thy God, to keep his commandments and his statutes which are written in this book of the law, and if thou turn unto the LORD thy God with all thine heart, and with all thy soul.
11Naan intu unakku vithikkira kattalai unakku maraiporulum alla, athu unakkuth thooramaanathum alla.For this commandment which I command thee this day, it is not hidden from thee, neither is it far off.
12Naangal athaik kaettu, athinpati seyyumporuttu, engalnimiththam avar vaanaththukku aeri, athai engalukkuk konnduvarukiravan yaarentu nee sollaththakkathaaka, athu vaanaththilullathum alla;It is not in heaven, that thou shouldest say, Who shall go up for us to heaven, and bring it unto us, that we may hear it, and do it?
13Naangal athaik kaettu, athinpati seyyumporuttu, engalnimiththam samuththiraththaik kadanthu, athaik konnduvarukiravan yaar entu nee sollaththakkathaaka, athu samuththiraththirku appuraththilullathum alla;Neither is it beyond the sea, that thou shouldest say, Who shall go over the sea for us, and bring it unto us, that we may hear it, and do it?
14Nee antha vaarththaiyinpatiyae seyyumporuttu, athu unakku mikavum sameepamaay un vaayilum un iruthayaththilum irukkirathu.But the word is very nigh unto thee, in thy mouth, and in thy heart, that thou mayest do it.
15Itho, jeevanaiyum nanmaiyaiyum, maranaththaiyum theemaiyaiyum intu unakku munnae vaiththaen.See, I have set before thee this day life and good, and death and evil;
16Nee pilaiththup perukumpatikkum, nee suthantharikkappokira thaesaththil un thaevanaakiya Karththar unnai aaseervathikkumpatikkum, nee un thaevanaakiya karththaril anpukooravum, avar valikalil nadakkavum, avar karpanaikalaiyum kattalaikalaiyum niyaayangalaiyum kaikkollavum, naan intu unakkuk karpikkiraேn.In that I command thee this day to love the LORD thy God, to walk in his ways, and to keep his commandments and his statutes and his judgments, that thou mayest live and multiply: and the LORD thy God shall bless thee in the land whither thou goest to possess it.
17Nee kaelaathapatikku, manam paethiththu, iluppunndupoy, vaeraே thaevarkalaippanninthu, avarkalaich sevippaayaanaal,But if thine heart turn away, so that thou wilt not hear, but shalt be drawn away, and worship other gods, and serve them;
18Neengal suthantharikkiratharku yorthaanaik kadanthupokira thaesaththil nedunaal vaalaamal, nichchayamaay alinthupoveerkal enpathai intu ungalukku arivikkiraேn.I denounce unto you this day, that ye shall surely perish, and that ye shall not prolong your days upon the land, whither thou passest over Jordan to go to possess it.
19Naan jeevanaiyum maranaththaiyum, aaseervaathaththaiyum saapaththaiyum unakkumun vaiththaen entu ungalmael vaanaththaiyum poomiyaiyum intu saatchivaikkiraேn; aakaiyaal, neeyum un santhathiyum pilaikkumpatikku, nee jeevanaith therinthukonndu,I call heaven and earth to record this day against you, that I have set before you life and death, blessing and cursing: therefore choose life, that both thou and thy seed may live:
20Karththar un pithaakkalaakiya aapirakaamukkum eesaakkukkum yaakkopukkum koduppaen entu avarkalukku aannaiyittuk koduththa thaesaththilae kutiyirukkumpatikku, un thaevanaakiya karththaril anpukoornthu, avar saththaththirkuch sevikoduththu, avaraip pattikkolvaayaaka; avarae unakku jeevanum theerkkaayusumaanavar entan.That thou mayest love the LORD thy God, and that thou mayest obey his voice, and that thou mayest cleave unto him: for he is thy life, and the length of thy days: that thou mayest dwell in the land which the LORD sware unto thy fathers, to Abraham, to Isaac, and to Jacob, to give them.