Bible Topic

Is it okay to heal on the Sabbath? - ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா?

Luke 14:1-6

Luke 14:1

ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.

And it came to pass, as he went into the house of one of the chief Pharisees to eat bread on the sabbath day, that they watched him.

Luke 14:2

அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர் மேல் நோக்கமாயிருந்தார்கள்.

And, behold, there was a certain man before him which had the dropsy.

Luke 14:3

இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஒய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.

And Jesus answering spake unto the lawyers and Pharisees, saying, Is it lawful to heal on the sabbath day?

Luke 14:4

அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு,

And they held their peace. And he took him, and healed him, and let him go;

Luke 14:5

அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.

And answered them, saying, Which of you shall have an ass or an ox fallen into a pit, and will not straightway pull him out on the sabbath day?

Luke 14:6

அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.

And they could not answer him again to these things.