Bible Topic

A prayer to the Lord - கர்த்தருக்கு ஒரு ஜெபம்

Lamentations 5:1-22

Lamentations 5:1

கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.

Remember, O LORD, what is come upon us: consider, and behold our reproach.

Lamentations 5:2

எங்கள் சுதந்தரம் அந்நியர் வசமாகவும், எங்கள் வீடுகள் புறத்தேசத்தார்வசமாகவும் தாண்டிப்போயின.

Our inheritance is turned to strangers, our houses to aliens.

Lamentations 5:3

திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.

We are orphans and fatherless, our mothers are as widows.

Lamentations 5:4

எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கிக் குடிக்கிறோம்; எங்கள் விறகு விலைக்கிரயமாய் வருகிறது.

We have drunken our water for money; our wood is sold unto us.

Lamentations 5:5

பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை.

Our necks are under persecution: we labour, and have no rest.

Lamentations 5:6

அப்பத்தால் திருப்தியாகும்படி எகிப்தியருக்கும் அசீரியருக்கும் எங்களைக் கையளித்தோம்.

We have given the hand to the Egyptians, and to the Assyrians, to be satisfied with bread.

Lamentations 5:7

எங்கள் பிதாக்கள் பாவஞ்செய்து மாண்டுபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம்.

Our fathers have sinned, and are not; and we have borne their iniquities.

Lamentations 5:8

அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பாரில்லை.

Servants have ruled over us: there is none that doth deliver us out of their hand.

Lamentations 5:9

வனாந்தரத்தில் இருக்கிற பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் எங்கள் அப்பத்தைத் தேடுகிறோம்.

We gat our bread with the peril of our lives because of the sword of the wilderness.

Lamentations 5:10

பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று.

Our skin was black like an oven because of the terrible famine.

Lamentations 5:11

சீயோனில் இருந்த ஸ்திரீகளையும் யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளையும் அவமானப்படுத்தினார்கள்.

They ravished the women in Zion, and the maids in the cities of Judah.

Lamentations 5:12

பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.

Princes are hanged up by their hand: the faces of elders were not honoured.

Lamentations 5:13

வாலிபரை ஏந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்; இளைஞர் விறகு சுமந்து இடறிவிழுகிறார்கள்.

They took the young men to grind, and the children fell under the wood.

Lamentations 5:14

முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோயிற்று.

The elders have ceased from the gate, the young men from their musick.

Lamentations 5:15

எங்கள் இருதயத்தின் களிகூருதல் ஒழிந்துபோயிற்று; எங்கள் சந்தோஷம் துக்கமாய் மாறிற்று.

The joy of our heart is ceased; our dance is turned into mourning.

Lamentations 5:16

எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.

The crown is fallen from our head: woe unto us, that we have sinned!

Lamentations 5:17

அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின.

For this our heart is faint; for these things our eyes are dim.

Lamentations 5:18

பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.

Because of the mountain of Zion, which is desolate, the foxes walk upon it.

Lamentations 5:19

கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.

Thou, O LORD, remainest for ever; thy throne from generation to generation.

Lamentations 5:20

தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன?

Wherefore dost thou forget us for ever, and forsake us so long time?

Lamentations 5:21

கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்தது போல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.

Turn thou us unto thee, O LORD, and we shall be turned; renew our days as of old.

Lamentations 5:22

எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள்பேரில் கடுங்கோபமாயிருக்கிறீரே!

But thou hast utterly rejected us; thou art very wroth against us.