Yesunaatha Un Adaikalamae - ஏசுநாதா உன் அடைக்கலமே
ஏசுநாதா உன் அடைக்கலமே
ஏசுநாதா உன் அடைக்கலமே
பல்லவி
அடைக்கலம் அடைக்கலமே, இயேசுநாதா, உன்
அடைக்கலம் அடைக்கலமே!
அனுபல்லவி
திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு. – அடை
சரணங்கள்
1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
தோஷமொடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! – அடை
2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
கிட்டிவந்தலறும் ஏழைக் கெஞ்சுதல் கேளய்யனே! – அடை
3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சல மகற்றிடும்;
பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! – அடை
4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதினில் எனக்கும் பங்கில்லையோ?
அன்றுனது பக்கமதில் ஆயிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? – அடை
Yesunaatha Un Adaikalamae - ஏசுநாதா உன் அடைக்கலமே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yesunaatha Un Adaikalamae - ஏசுநாதா உன் அடைக்கலமே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesunaatha Un Adaikalamae - ஏசுநாதா உன் அடைக்கலமே PPT Yesunaatha Un Adaikalamae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum