Yeapparama Oli Enum Baalanakaai - ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த்
ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த்
பல்லவி
ஏகப்பரம ஒளி – எனும் பாலகனாய்த்
தேவன் பாரினில் பிறந்தார்
அனுபல்லவி
நீச மகாஜன பாவப்பரிகார
நேச மனோகரனான மரிசுதன்
சரணங்கள்
1. பார்தனில் தாவிய பாவந் தொலைக்கவே
பூர்வத்திலே பிதா நேமப்படி தீர்க்கர்
ஓர் அற்புதன் எழும்பிடுவா ரென
சீர் பெறவோதிய செய்தி விளங்கிட – ஏக
2. ஆயர்கள் இராக்காலம் ஆட்டு மந்தை காக்க
அந்தரத்தில் தேவதூதர் மொழி கேட்க
தேவலோகம் களிகூர்ந்து பாடல் பாட
தேவன் பெத்லேம் ஆவின் கூடத்தேழையாக – ஏக
3. விண்ணினில் ஜோதிகள் எண்ணிலா சேனைகள்
மண்ணினில் ஜாதி உயிர்த்திரள் போற்றிட
கண்ணினில் கண்ணொளியாகும் குமாரனாய்
அண்ணலாம் இயேசு அருணோதயமான – ஏக
4
4. அந்தரத்தில் தேவசுந்தர பாலகன்
எந்தவுலகுக்கும் ஏற்ற நல் இரட்சகன்
வந்தவதரித்த வானவராம் நேசன்
சொந்தம் நம்மோடினின்றும் என்றும் சகவாசன் – ஏக
Yeapparama Oli Enum Baalanakaai - ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yeapparama Oli Enum Baalanakaai - ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Yeapparama Oli Enum Baalanakaai - ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த் PPT Yeapparama Oli Enum Baalanakaai PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum