Unnathamanavarin Uyar - உன்னதமானவரின் உயர்
உன்னதமானவரின் உயர்
உன்னதமானவரின் உயர்
மறைவில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே – 2
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார் – 2
தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே – 2
இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் – 2
ஆயிரம் பதினாயிரம் பேர்கள்
உன் பக்கம் விழுந்தாலும் – அது
ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தபரமே – 2
தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் – 2
உன் வழிகளிலெல்லாம் உன்னை
தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தம் கரங்களில் ஏந்திடுவார் – 2
சிங்கத்தின் மேல் நடந்து
வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார் – 2
ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர்
Unnadhamaanavarin – Unnathamanavarin Uyar Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Unnadhamaanavarin – Unnathamanavarin Uyar
by clicking the fullscreen button in the Top left. Or you can download Unnadhamaanavarin – Unnathamanavarin Uyar PPT Unnathamanavarin Uyar PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum