Sinthaiyudan Deivalayanthanil - சிந்தையுடன் தெய்வாலயந்தனில்
சிந்தையுடன் தெய்வாலயந்தனில்
பல்லவி
சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம்,-திரி
யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம்.
அனுபல்லவி
1. தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்;-அவர்
செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம்;-தமின்
மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம் – சிந்
2. கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்;-எந்தக்
காலமும் துதிமுழங்கும் கான வாலயம்;-பரி
சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம் – சிந்
3. திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம்;-அது
தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமலாயம்;-தீட்
டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம். – சிந்
4. வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம்;-பக்தர்
மகிமை ஜோதிமய மாகுமாலயம்;-மெய்ஞ்
ஞானபாக்கியங்கள் பெய்யும் நாதராலாயம். – சிந்
Sinthaiyudan Deivalayanthanil - சிந்தையுடன் தெய்வாலயந்தனில் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Sinthaiyudan Deivalayanthanil - சிந்தையுடன் தெய்வாலயந்தனில்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Sinthaiyudan Deivalayanthanil - சிந்தையுடன் தெய்வாலயந்தனில் PPT Sinthaiyudan Deivalayanthanil PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum