Siluvai Thaangu Meetpae Pin - சிலுவை தாங்கு மீட்பர் பின்
சிலுவை தாங்கு மீட்பர் பின்
1 சிலுவை தாங்கு மீட்பர் பின்
அவரின் சீஷனாகவே;
வெறுப்பாய் உன்னை லோகத்தை;
பின் செல்வாய் தாழ்மையாகவே.
2.சிலுவை தாங்கு, பாரத்தால்
கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய்;
விண் பலம் உன்னைத் தாங்கிடும்,
வல்லமை வீரம் பெறுவாய்.
3.சிலுவை தாங்கு, மேட்டிமை
கொள்ளாய், எந்நிலை எண்ணிடாய்;
நீ பாவம் சாவை மேற்கொள்ள
உன் மீட்பர் மாண்டார் ஈனமாய்.
4. சிலுவை தாங்கி நின்றிடு,
தீரமாய் மோசம் யாவிலும்;
சிலுவை சேர்க்கும் மோட்சத்தில்
சாவின்மேல் வெற்றி தந்திடும்.
5. சிலுவை தாங்கி கிறிஸ்துவை
பின்செல்வாய் ஆயுள் முற்றுமே;
மகிமை கிரீடம் சூடுவாய்
சிலுவை தாங்கின்மட்டுமே.
6.திரியேகரான மா கர்த்தா,
என்றென்றும் போற்றப்படுவீர்;
மேலோக நித்திய வாழ்வுக்கே
அடியாரை நடத்துவீர்.
Siluvai Thaangu Meetpae Pin - சிலுவை தாங்கு மீட்பர் பின் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Siluvai Thaangu Meetpae Pin - சிலுவை தாங்கு மீட்பர் பின்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Siluvai Thaangu Meetpae Pin - சிலுவை தாங்கு மீட்பர் பின் PPT Siluvai Thaangu Meetpae Pin PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum