Pokkisam Serthidungal - பொக்கிஷம் சேர்த்திடுங்கள்
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்
பல்லவி
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்-பரத்திலே
அனுபல்லவி
பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்
மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம். – பொக்
சரணங்கள்
1. பொட்டும் அரிக்காதே,-அங்கே புழுப்
பூச்சி கெடுக்காதே;
துட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரே;
துருவும் பிடியாது, குறையாது, அழியாது. – பொக்
2. விண்ணுலகந் தன்னிலே-பொக்கிஷத்தை
விரும்பியே சேர்த்திடுவோர்
மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமே;
மாயப் ப்ரபஞ்சத்தின் வாழ்வெல்லாங் குப்பையே – பொக்
3. உங்கள் பொக்கிஷம் எங்கேயோ,-அங்கே உங்கள்
உள்ளமுமே யிருக்கும்,
இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவே,
என்றும் வைக்கப்பாரும் உங்கள் பொக்கிஷத்தை. – பொக்
4. ஜீவன் சுகத்துடனே-இருக்கையில்
ஆவலா யிப்பொழுதே,
தேவலோகத்திலே ஜீவ பொக்கிஷத்தைச்
சேர்த்திடுவோர் மெத்தப் பாக்கியவான்களே. – பொக்
Pokkisam Serthidungal - பொக்கிஷம் சேர்த்திடுங்கள் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Pokkisam Serthidungal - பொக்கிஷம் சேர்த்திடுங்கள்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Pokkisam Serthidungal - பொக்கிஷம் சேர்த்திடுங்கள் PPT Pokkisam Serthidungal PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum