Paavi Mayakkan Kondirathae - பாவி மயக்கங் கொண்டிராதே
பாவி மயக்கங் கொண்டிராதே
பல்லவி
பாவி! மயக்கங் கொண்டிராதே
பல மாயையினாலே
சரணங்கள்
1. தினமும் பரனடி மகிழ்ந்து நீ போற்று;
சித்தப்படி யலையும் மனதையே மாற்று;
சினமுள்ள கோபத்தை நெறியுடன் ஆற்று
சேதமில்லாத வழி அறிந்து நீ சொல்லு – பாவி
2. சத்திய வழியினிற் சார்பதாய் நில்லு
சர்ப்பனை இன்னதென்று திடம் பண்ணிக் கொள்ளு
புத்திமதிகளைப் பிறருக்குச் சொல்லு
பேயின் மா தந்திரத்தை அறிந்து நீ வெல்லு – பாவி
3. உலகத்தின் வாழ்வுகள் நெடுநாள் நில்லாதே
உண்மை தவறினவனிடத்தில் செல்லாதே
எவரையும் தந்திரத்தால் மோசம் பண்ணாதே
இரட்சகர் புத்திதனை இகழ்ந்து தள்ளாதே – பாவி
4. மூடனுக்கறிவுதான் உரைத்தால் வெல்லாதே
மூர்க்கன் வெறியனென்று பேரெடுக்காதே
தேடாத் திரவியத்தைத் திருடிக்கொள்ளாதே
தேவனுரை மறந்தால் சிட்சை பொல்லாதே – பாவி
Paavi Mayakkan Kondirathae- பாவி மயக்கங் கொண்டிராதே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Paavi Mayakkan Kondirathae- பாவி மயக்கங் கொண்டிராதே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Paavi Mayakkan Kondirathae- பாவி மயக்கங் கொண்டிராதே PPT Paavi Mayakkan Kondirathae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum