Kallum Allavae Kaayam - கல்லும் அல்லவே காயம்
கல்லும் அல்லவே காயம்
பல்லவி
கல்லும் அல்லவே, காயம்-வல்லும் அல்லவே-இது
அனுபல்லவி
வெள்ளி, பொன் விலைமதியா மேரும் அல்லவே. – கல்
சரணங்கள்
1. வல்லமை பேசாதே, நாளை வருவதறியாய்,-அதால்
நல்ல வழி தேடி, தேவ நாமத்தைத் தியானி. – கல்
2. சூரியன் கீழ்க் கண்டதெல்லாம் மாயை அல்லவோ?-சாலமோன்
பார் அறிய சொன்னதை நீ பார்த்தறியாயோ? – கல்
3. காற்றடித்த மேகம் புகைக்கொப்பதாகவே,-இங்கே
போற்றிய மனுடர் ஜீவன் போய் ஒழியுமே. – கல்
4. வேகமாய் வடியும் ஆற்றுக் கொப்பதாகவே,-மாய
தேக நரர் நாட்களும் சீக் கிரம் கழியுமே. – கல்
5. இராப் பகல், இருள், வெளிச்சம் மாறும் வண்ணமே,-ஐயோ!
நராட்களின் மகிழ்ச்சிக்கு மா மாறுதல் உண்டே. – கல்
6. பூவதும் உதிரும், பசும் புல்லும் வதங்கும்.-அது
போலவே நரர் உருவம் மாறி வதங்கும். – கல்
7. மேலது கீழ், கீழதுமேல் ஆம் உருளைபோல்,-நரர்
மேன்மையும் வாழ்வும் கீழது மேலும் ஆகுமே. – கல்
8. நுண்ணிமை ஞானி என்றாலும் கீர்த்திபெற்றாலும்,-ஐயோ!
அன்னவன் மலையும் நேரம் யாவும் கலையும். – கல்
9. ஆசனம், துரைத்தனம், தத்துவங்கள் ஒழியும்,-அர
சாண்ட மன்னரும் ஒரு நாள் மாண்டொழிவாரே. – கல்
10. யாவும் ஓட்டமாகப் பாயும், யாவும் அழியும்,-மெய்த்
தேவபக்தி யே கெலிக்கும்; ஜீவன் நிலைக்கும். – கல்
Kallum Allavae Kaayam - கல்லும் அல்லவே காயம் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Kallum Allavae Kaayam - கல்லும் அல்லவே காயம்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Kallum Allavae Kaayam - கல்லும் அல்லவே காயம் PPT Kallum Allavae Kaayam PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum