Aar Ivar Aaraaro - ஆர் இவர் ஆராரோ இந்த அவனியோர் மாதிடமே
ஆர் இவர் ஆராரோ இந்த அவனியோர் மாதிடமே
ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத
பாலகனார் ?
1. பாருருவாகுமுன்னே – இருந்த – பரப் பொருள் தானிவரோ ?
சீருடன் புவி , வான் , அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த
மாவலரோ ? — ஆர்
2. மேசியா இவர்தானோ ? – நம்மை – மேய்த்திடும் நரர்கோனோ ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ ? — ஆர்
3. தித்திக்குந் தீங்கனியோ ? – நமது தேவனின் கண்மணியோ ?
மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசயமேவிய விண்
ணொளியோ ? — ஆர்
4. பட்டத்துத் துரைமகனோ ? – நம்மைப் – பண்புடன் ஆள்பவனோ ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்
தாயகனோ ? — ஆர்
5. ஜீவனின் அப்பமோதான் ? – தாகம் தீர்த்திடும்பானமோதான் ?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர்
இவர்தானோ ? — ஆர்
Aar Ivar Aaraaro Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Aar Ivar Aaraaro
by clicking the fullscreen button in the Top left. Or you can download Aar Ivar Aaraaro PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum