1பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.And Nadab and Abihu, the sons of Aaron, took either of them his censer, and put fire therein, and put incense thereon, and offered strange fire before the LORD, which he commanded them not.
2அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.And there went out fire from the LORD, and devoured them, and they died before the LORD.
3அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம்பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாமலிருந்தான்.Then Moses said unto Aaron, This is it that the LORD spake, saying, I will be sanctified in them that come nigh me, and before all the people I will be glorified. And Aaron held his peace.
4பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான உசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்ட வந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.And Moses called Mishael and Elzaphan, the sons of Uzziel the uncle of Aaron, and said unto them, Come near, carry your brethren from before the sanctuary out of the camp.
5மோசே சொன்னபடி அவர்கள் கிட்டவந்து, அவர்களை அவர்கள் உடுத்தியிருந்த சட்டைகளோடும் எடுத்துப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோனார்கள்.So they went near, and carried them in their coats out of the camp; as Moses had said.
6மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொழுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.And Moses said unto Aaron, and unto Eleazar and unto Ithamar, his sons, Uncover not your heads, neither rend your clothes; lest ye die, and lest wrath come upon all the people: but let your brethren, the whole house of Israel, bewail the burning which the LORD hath kindled.
7நீங்கள் சாகாதபடிக்கு ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து புறப்படாதிருங்கள்; கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள்.And ye shall not go out from the door of the tabernacle of the congregation, lest ye die: for the anointing oil of the LORD is upon you. And they did according to the word of Moses.
8கர்த்தர் ஆரோனை நோக்கி:And the LORD spake unto Aaron, saying,
9நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.Do not drink wine nor strong drink, thou, nor thy sons with thee, when ye go into the tabernacle of the congregation, lest ye die: it shall be a statute for ever throughout your generations:
10பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும்,And that ye may put difference between holy and unholy, and between unclean and clean;
11கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.And that ye may teach the children of Israel all the statutes which the LORD hath spoken unto them by the hand of Moses.
12மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.And Moses spake unto Aaron, and unto Eleazar and unto Ithamar, his sons that were left, Take the meat offering that remaineth of the offerings of the LORD made by fire, and eat it without leaven beside the altar: for it is most holy:
13அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே புசியுங்கள்; அது கர்த்தருடைய தகனபலிகளில் உனக்கும் உன்குமாரருக்கும் ஏற்படுத்தப்பட்டதாயிருக்கிறது; இப்படிக் கட்டளை பெற்றிருக்கிறேன்.And ye shall eat it in the holy place, because it is thy due, and thy sons' due, of the sacrifices of the LORD made by fire: for so I am commanded.
14அசைவாட்டும் மார்க்கண்டத்தையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந் தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் குமாரத்திகளும் சுத்தமான ஸ்தலத்திலே புசிப்பீர்களாக; இஸ்ரவேல் புத்திரருடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.And the wave breast and heave shoulder shall ye eat in a clean place; thou, and thy sons, and thy daughters with thee: for they be thy due, and thy sons' due, which are given out of the sacrifices of peace offerings of the children of Israel.
15கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந் தொடையையும், அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் கொண்டுவருவார்கள்; அது கர்த்தர் கட்டளையிட்டபடியே உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் நித்திய கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றான்.The heave shoulder and the wave breast shall they bring with the offerings made by fire of the fat, to wave it for a wave offering before the LORD; and it shall be thine, and thy sons' with thee, by a statute for ever; as the LORD hath commanded.
16பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது தகனிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாயிருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரர்மேல் அவன் கோபங்கொண்டு:And Moses diligently sought the goat of the sin offering, and, behold, it was burnt: and he was angry with Eleazar and Ithamar, the sons of Aaron which were left alive, saying,
17பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்குக் கொடுத்தாரே.Wherefore have ye not eaten the sin offering in the holy place, seeing it is most holy, and God hath given it you to bear the iniquity of the congregation, to make atonement for them before the LORD?
18அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்.Behold, the blood of it was not brought in within the holy place: ye should indeed have eaten it in the holy place, as I commanded.
19அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான்.And Aaron said unto Moses, Behold, this day have they offered their sin offering and their burnt offering before the LORD; and such things have befallen me: and if I had eaten the sin offering to day, should it have been accepted in the sight of the LORD?
20மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்.And when Moses heard that, he was content.
1Pinpu aaronin kumaararaakiya naathaapum apiyoovum thanthan thoopakalasaththai eduththu, avaikalil akkiniyaiyum athinmael thoopavarkkaththaiyum pottu, Karththar thangalukkuk kattalaiyidaatha anniya akkiniyai avarutaiya sannithiyil konnduvanthaarkal.And Nadab and Abihu, the sons of Aaron, took either of them his censer, and put fire therein, and put incense thereon, and offered strange fire before the LORD, which he commanded them not.
2Appoluthu akkini karththarutaiya sannithiyilirunthu purappattu, avarkalaip patchiththathu; avarkal karththarutaiya sannithiyil seththaarkal.And there went out fire from the LORD, and devoured them, and they died before the LORD.
3Appoluthu Moses aaronai Nnokki: ennidaththil serukiravarkalaal naan Parisuththampannnappattu, sakala janangalukkum munpaaka naan makimaippaduvaen entu Karththar sonnathu ithuthaan entan; aaron paesaamalirunthaan.Then Moses said unto Aaron, This is it that the LORD spake, saying, I will be sanctified in them that come nigh me, and before all the people I will be glorified. And Aaron held his peace.
4Pinpu Moses aaronin siriya thakappanaana usiyaelin kumaararaakiya meesavaelaiyum elsaapaanaiyum alaiththu: neengal kitta vanthu, ungal sakothararaip Parisuththa sthalaththukku munnintu eduththu, paalayaththukkup purampae konndupongal entan.And Moses called Mishael and Elzaphan, the sons of Uzziel the uncle of Aaron, and said unto them, Come near, carry your brethren from before the sanctuary out of the camp.
5Moses sonnapati avarkal kittavanthu, avarkalai avarkal uduththiyiruntha sattaைkalodum eduththup paalayaththukkup purampae konnduponaarkal.So they went near, and carried them in their coats out of the camp; as Moses had said.
6Moses aaronaiyum eleyaasaar iththaamaar ennum avan kumaararaiyum Nnokki: neengal saakaathapatikkum, Sabaiyanaiththinmaelum kadungaோpam varaathapatikkum, neengal ungal thalaippaakaiyai eduththuppodaamalum, ungal vasthirangalaik kilikkaamalum iruppeerkalaaka; ungal sakothararaakiya Israel kudumpaththaar yaavarum Karththar koluththina intha akkinikkaakap pulampuvaarkalaaka.And Moses said unto Aaron, and unto Eleazar and unto Ithamar, his sons, Uncover not your heads, neither rend your clothes; lest ye die, and lest wrath come upon all the people: but let your brethren, the whole house of Israel, bewail the burning which the LORD hath kindled.
7Neengal saakaathapatikku aasarippuk koodaaravaasalilirunthu purappadaathirungal; karththarutaiya apishaekathailam ungalmael irukkirathae entan; avarkal Mosesyinutaiya vaarththaiyinpatiyae seythaarkal.And ye shall not go out from the door of the tabernacle of the congregation, lest ye die: for the anointing oil of the LORD is upon you. And they did according to the word of Moses.
8Karththar aaronai Nnokki:And the LORD spake unto Aaron, saying,
9Neeyum unnotaekooda un kumaararum saakaathirukkavaenndumaanaal, aasarippuk koodaaraththukkul piravaesikkirapothu, thiraatcharasaththaiyum mathuvaiyum kutikkavaenndaam.Do not drink wine nor strong drink, thou, nor thy sons with thee, when ye go into the tabernacle of the congregation, lest ye die: it shall be a statute for ever throughout your generations:
10Parisuththamullatharkum Parisuththamillaathatharkum, viththiyaasampannnumpatikkum,And that ye may put difference between holy and unholy, and between unclean and clean;
11Karththar Mosesyaikkonndu Israel puththirarukkuch sonna sakala piramaanangalaiyum avarkalukkup pothikkumpatikkum, ithu ungal thalaimuraithoraுm niththiya kattalaiyaayirukkum entar.And that ye may teach the children of Israel all the statutes which the LORD hath spoken unto them by the hand of Moses.
12Moses aaronaiyum meethiyaayiruntha avan kumaararaakiya eleyaasaaraiyum iththaamaaraiyum Nnokki: neengal karththarutaiya thakanapalikalil meethiyaana pojanapaliyai eduththu, palipeedaththanntaiyilae pulippillaathathaakap pusiyungal; athu makaa Parisuththamaanathu.And Moses spake unto Aaron, and unto Eleazar and unto Ithamar, his sons that were left, Take the meat offering that remaineth of the offerings of the LORD made by fire, and eat it without leaven beside the altar: for it is most holy:
13Athaip Parisuththa sthalaththilae pusiyungal; athu karththarutaiya thakanapalikalil unakkum unkumaararukkum aerpaduththappattathaayirukkirathu; ippatik kattalai pettirukkiraேn.And ye shall eat it in the holy place, because it is thy due, and thy sons' due, of the sacrifices of the LORD made by fire: for so I am commanded.
14Asaivaattum maarkkanndaththaiyum, aeraெduththup pataikkum munnan thotaiyaiyum, neeyum unnotaekooda un kumaararum kumaaraththikalum suththamaana sthalaththilae pusippeerkalaaka; Israel puththirarutaiya samaathaanapalikalil avaikal unakkum un pillaikalukkum kitaikkumpati aerpaduththappattirukkirathu.And the wave breast and heave shoulder shall ye eat in a clean place; thou, and thy sons, and thy daughters with thee: for they be thy due, and thy sons' due, which are given out of the sacrifices of peace offerings of the children of Israel.
15Koluppaakiya thakanapalikalotae avarkal karththarutaiya sannithiyil asaivaattum paliyaaka asaivaattumpati aeraெduththup pataikkum munnan thotaiyaiyum, asaivaattum maarkkanndaththaiyum konnduvaruvaarkal; athu Karththar kattalaiyittapatiyae unakkum unpillaikalukkum niththiya kattalaiyaaka aerpaduththappattirukkirathu entan.The heave shoulder and the wave breast shall they bring with the offerings made by fire of the fat, to wave it for a wave offering before the LORD; and it shall be thine, and thy sons' with thee, by a statute for ever; as the LORD hath commanded.
16Paavanivaaranapaliyaakach seluththappatta vellaattukkadaavai Moses thaetippaarththaan; athu thakanikkappattirunthathu; aakaiyaal, meethiyaayiruntha eleyaasaar iththaamaar ennum aaronin kumaararmael avan kopangaொnndu:And Moses diligently sought the goat of the sin offering, and, behold, it was burnt: and he was angry with Eleazar and Ithamar, the sons of Aaron which were left alive, saying,
17Paavanivaaranapaliyai neengal Parisuththa sthalaththil pusiyaamarponathenna? Athu makaa Parisuththamaayirukkirathae; Sabaiyin akkiramaththaich sumanthu theerppatharkuk karththarutaiya sannithiyil avarkalukkaakap paavanivirththi seyyumporuttu, athai ungalukkuk koduththaarae.Wherefore have ye not eaten the sin offering in the holy place, seeing it is most holy, and God hath given it you to bear the iniquity of the congregation, to make atonement for them before the LORD?
18Athin iraththam Parisuththa sthalaththukkullae konnduvarappadavillaiyae; naan kattalaiyittapati neengal athaip Parisuththa sthalaththil pusikkavaenntiyathaayirunthathae entan.Behold, the blood of it was not brought in within the holy place: ye should indeed have eaten it in the holy place, as I commanded.
19Appoluthu aaron Mosesyai Nnokki: avarkal thangal paavanivaaranapaliyaiyum, thangal sarvaanga thakanapaliyaiyum karththarutaiya sannithiyil seluththina intuthaanae enakku ippati naerittathae; paavanivaaranapaliyai intu naan pusiththaenaanaal, athu karththarin paarvaikku nantay irukkumo entan.And Aaron said unto Moses, Behold, this day have they offered their sin offering and their burnt offering before the LORD; and such things have befallen me: and if I had eaten the sin offering to day, should it have been accepted in the sight of the LORD?
20Moses athaik kaettapothu amaithalaayirunthaan.And when Moses heard that, he was content.