1அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின் மேலும் வரப்பண்ணுவேன்; அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான்; சமூலமாய் உங்களைப் போகவிடுவதும் அல்லாமல், உங்களை இவ்விடத்திலிருந்து துரத்தியும் விடுவான்.And the LORD said unto Moses, Yet will I bring one plague more upon Pharaoh, and upon Egypt; afterwards he will let you go hence: when he shall let you go, he shall surely thrust you out hence altogether.
2இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி ஜனங்களுக்குச் சொல் என்றார்.Speak now in the ears of the people, and let every man borrow of his neighbor, and every woman of her neighbor, jewels of silver and jewels of gold.
3அப்படியே கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவுகிடைக்கும்படி செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வைக்கும் ஜனங்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாயிருந்தான்.And the LORD gave the people favor in the sight of the Egyptians. Moreover the man Moses was very great in the land of Egypt, in the sight of Pharaoh's servants, and in the sight of the people.
4அப்பொழுது மோசே: கர்த்தர் நடு இராத்திரியிலே நான் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப் போவேன்.And Moses said, Thus saith the LORD, About midnight will I go out into the midst of Egypt:
5அப்பொழுது சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் ஏந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று உரைக்கிறார் என்று சொன்னதுமன்றி,And all the firstborn in the land of Egypt shall die, from the first born of Pharaoh that sitteth upon his throne, even unto the firstborn of the maidservant that is behind the mill; and all the firstborn of beasts.
6அதினால் எகிப்து தேசமெங்கும் முன்னும் பின்னும் ஒருக்காலும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும்.And there shall be a great cry throughout all the land of Egypt, such as there was none like it, nor shall be like it any more.
7ஆனாலும் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் மனிதர் முதல்மிருக ஜீவன்கள் வரைக்கும் ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை.But against any of the children of Israel shall not a dog move his tongue, against man or beast: that ye may know how that the LORD doth put a difference between the Egyptians and Israel.
8அப்பொழுது உம்முடைய ஊழியக்காரராகிய இவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, பணிந்து, நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின் பின் புறப்படுவேன் என்று சொல்லி, உக்கிரமான கோபத்தோடே பார்வோனைவிட்டுப் புறப்பட்டான்.And all these thy servants shall come down unto me, and bow down themselves unto me, saying, Get thee out, and all the people that follow thee: and after that I will go out. And he went out from Pharaoh in a great anger.
9கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்துதேசத்தில் என் அற்புதங்கள் அநேகமாகும்படிக்கு, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான் என்று சொல்லியிருந்தார்.And the LORD said unto Moses, Pharaoh shall not hearken unto you; that my wonders may be multiplied in the land of Egypt.
10மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினதினால், அவன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து போகவிடவில்லை.And Moses and Aaron did all these wonders before Pharaoh: and the LORD hardened Pharaoh's heart, so that he would not let the children of Israel go out of his land.
1Appoluthu Karththar Mosesyai Nnokki: innum oru vaathaiyaip paarvonmaelum ekipthin maelum varappannnuvaen; atharkuppin avan ungalai ivvidaththilirunthu pokaviduvaan; samoolamaay ungalaip pokaviduvathum allaamal, ungalai ivvidaththilirunthu thuraththiyum viduvaan.And the LORD said unto Moses, Yet will I bring one plague more upon Pharaoh, and upon Egypt; afterwards he will let you go hence: when he shall let you go, he shall surely thrust you out hence altogether.
2Ippoluthu ovvoruvanum avanavan ayalaanidaththilum, ovvoruththiyum avalaval ayalaalidaththilum velliyutaimaikalaiyum ponnutaimaikalaiyum kaetkumpati janangalukkuch sol entar.Speak now in the ears of the people, and let every man borrow of his neighbor, and every woman of her neighbor, jewels of silver and jewels of gold.
3Appatiyae Karththar janangalukku ekipthiyarin kannkalil thayavukitaikkumpati seythaar. Moses enpavan ekipthu thaesaththil paarvonutaiya ooliyakkaararin paarvaikkum janangalin paarvaikkum mikavum periyavanaayirunthaan.And the LORD gave the people favor in the sight of the Egyptians. Moreover the man Moses was very great in the land of Egypt, in the sight of Pharaoh's servants, and in the sight of the people.
4Appoluthu Moses: Karththar nadu iraaththiriyilae naan ekipthin maththiyil purappattup povaen.And Moses said, Thus saith the LORD, About midnight will I go out into the midst of Egypt:
5Appoluthu singaasanaththin mael veettirukkum paarvonutaiya thalaippillai muthal aenthiram araikkum atimaippennnutaiya thalaippillai varaikkum, ekipthu thaesaththilirukkira mutharpaeranaiththum mirukajeevankalin thalaiyeettanaiththum saakum entu uraikkiraar entu sonnathumanti,And all the firstborn in the land of Egypt shall die, from the first born of Pharaoh that sitteth upon his throne, even unto the firstborn of the maidservant that is behind the mill; and all the firstborn of beasts.
6Athinaal ekipthu thaesamengum munnum pinnum orukkaalum unndaakaatha periya kookkural unndaakum.And there shall be a great cry throughout all the land of Egypt, such as there was none like it, nor shall be like it any more.
7Aanaalum Karththar ekipthiyarukkum isravaelarukkum pannnukira viththiyaasaththai neengal ariyumpatikku, Israel puththirar anaivarukkullum manithar muthalmiruka jeevankal varaikkum oru naayaakilum than naavai asaippathillai.But against any of the children of Israel shall not a dog move his tongue, against man or beast: that ye may know how that the LORD doth put a difference between the Egyptians and Israel.
8Appoluthu ummutaiya ooliyakkaararaakiya ivarkal ellaarum ennidaththil vanthu, panninthu, neeyum unnaip pinpattaுkiravarkal yaavarum purappattuppongal entu solluvaarkal; athin pin purappaduvaen entu solli, ukkiramaana kopaththotae paarvonaivittup purappattan.And all these thy servants shall come down unto me, and bow down themselves unto me, saying, Get thee out, and all the people that follow thee: and after that I will go out. And he went out from Pharaoh in a great anger.
9Karththar Mosesyai Nnokki: ekipthuthaesaththil en arputhangal anaekamaakumpatikku, paarvon ungalukkuch sevikodukkamaattan entu solliyirunthaar.And the LORD said unto Moses, Pharaoh shall not hearken unto you; that my wonders may be multiplied in the land of Egypt.
10Mosesyum aaronum intha arputhangalaiyellaam paarvonukku munpaakach seythaarkal. Karththar paarvonin iruthayaththaik katinappaduththinathinaal, avan Israel puththiraraith than thaesaththilirunthu pokavidavillai.And Moses and Aaron did all these wonders before Pharaoh: and the LORD hardened Pharaoh's heart, so that he would not let the children of Israel go out of his land.