1சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,And Samson went down to Timnath, and saw a woman in Timnath of the daughters of the Philistines.
2திரும்ப வந்து, தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ள வேண்டும் என்றான்.And he came up, and told his father and his mother, and said, I have seen a woman in Timnath of the daughters of the Philistines: now therefore get her for me to wife.
3அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக் கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன் தகப்பனை நோக்கி: அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்.Then his father and his mother said unto him, Is there never a woman among the daughters of thy brethren, or among all my people, that thou goest to take a wife of the uncircumcised Philistines? And Samson said unto his father, Get her for me; for she pleaseth me well.
4அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்; அக்காலத்திலே பெலிஸ்தர் இஸ்ரவேலை ஆண்டார்கள்.But his father and his mother knew not that it was of the LORD, that he sought an occasion against the Philistines: for at that time the Philistines had dominion over Israel.
5அப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள்மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது.Then went Samson down, and his father and his mother, to Timnath, and came to the vineyards of Timnath: and, behold, a young lion roared against him.
6அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப் போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.And the Spirit of the LORD came mightily upon him, and he rent him as he would have rent a kid, and he had nothing in his hand: but he told not his father or his mother what he had done.
7அவன் போய் அந்தப் பெண்ணோடே பேசினான்; அவள் சிம்சோனின் கண்ணுக்குப் பிரியமாயிருந்தாள்.And he went down, and talked with the woman; and she pleased Samson well.
8சிலநாளைக்குப்பின்பு, அவன் அவளை விவாகம்பண்ணத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.And after a time he returned to take her, and he turned aside to see the carcass of the lion: and, behold, there was a swarm of bees and honey in the carcass of the lion.
9அவன் அதைத் தன் கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன் தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள், ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை.And he took thereof in his hands, and went on eating, and came to his father and mother, and he gave them, and they did eat: but he told not them that he had taken the honey out of the carcass of the lion.
10அவன் தகப்பன் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் போனபோது, சிம்சோன் அங்கே விருந்துசெய்தான்; வாலிபர் அப்படிச் செய்வது வழக்கம்.So his father went down unto the woman: and Samson made there a feast; for so used the young men to do.
11அவர்கள் அவனைக் கண்டபோது, அவனோடேகூட இருக்கும்படி முப்பது தோழரை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.And it came to pass, when they saw him, that they brought thirty companions to be with him.
12சிம்சோன் அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்துண்கிற ஏழுநாளைக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன்.And Samson said unto them, I will now put forth a riddle unto you: if ye can certainly declare it me within the seven days of the feast, and find it out, then I will give you thirty sheets and thirty change of garments:
13அதை எனக்கு விடுவிக்காதே போனால், நீங்கள் எனக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு; நாங்கள் அதைக் கேட்கட்டும் என்றார்கள்.But if ye cannot declare it me, then shall ye give me thirty sheets and thirty change of garments. And they said unto him, Put forth thy riddle, that we may hear it.
14அப்பொழுது அவன்: பட்சிக்கிறவனிடத்திலுருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்; அந்த விடுகதை அவர்களால் மூன்று நாள்மட்டும் விடுவிக்கக் கூடாதே போயிற்று.And he said unto them, Out of the eater came forth meat, and out of the strong came forth sweetness. And they could not in three days expound the riddle.
15ஏழாம்நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து: உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன் தகப்பன் வீட்டையும் அக்கினியால் சுட்டெரித்துப்போடுவோம்; எங்களுக்குள்ளவைகளைப் பறித்துக்கொள்ளவா எங்களை அழைத்தீர்கள் என்றார்கள்.And it came to pass on the seventh day, that they said unto Samson's wife, Entice thy husband, that he may declare unto us the riddle, lest we burn thee and thy father's house with fire: have ye called us to take that we have? is it not so?
16அப்பொழுது சிம்சோனின் பெண்சாதி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசியாமல் என்னைப் பகைக்கிறாய், என் ஜனங்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள்; அதற்கு அவன்: இதோ, நான் என் தாய்தகப்பனுக்கும் அதை விடுவிக்கவில்லையே, உனக்கு அதை விடுவிப்பேனோ என்றான்.And Samson's wife wept before him, and said, Thou dost but hate me, and lovest me not: thou hast put forth a riddle unto the children of my people, and hast not told it me. And he said unto her, Behold, I have not told it my father nor my mother, and shall I tell it thee?
17விருந்துண்கிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்; ஏழாம்நாளிலே அவள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன் ஜனங்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்.And she wept before him the seven days, while their feast lasted: and it came to pass on the seventh day, that he told her, because she lay sore upon him: and she told the riddle to the children of her people.
18ஆகையால் ஏழாம்நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனுஷர் அவனை நோக்கி, தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.And the men of the city said unto him on the seventh day before the sun went down, What is sweeter than honey? And what is stronger than a lion? and he said unto them, If ye had not plowed with my heifer, ye had not found out my riddle.
19கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவன் அஸ்கலோனுக்குப்போய், அவ்வூராரில் முப்பதுபேரைக்கொன்று, அவர்களுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டுவந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று வஸ்திரங்களைக் கொடுத்து, கோபம் மூண்டவனாய்ப் புறப்பட்டு, தன் தகப்பன் வீட்டுக்குப் போய்விட்டான்.And the Spirit of the LORD came upon him, and he went down to Ashkelon, and slew thirty men of them, and took their spoil, and gave change of garments unto them which expounded the riddle. And his anger was kindled, and he went up to his father's house.
20சிம்சோனின் பெண்சாதியோவென்றால், அவனுடைய தோழரில் அவனோடே சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.But Samson's wife was given to his companion, whom he had used as his friend.
1Simson thimnaaththukkup poy, thimnaaththilae pelistharin kumaaraththikalil oru pennnnaik kanndu,And Samson went down to Timnath, and saw a woman in Timnath of the daughters of the Philistines.
2Thirumpa vanthu, than thaayaiyum thakappanaiyum Nnokki: thimnaaththilae pelistharin kumaaraththikalil oru pennnnaik kanntaen; avalai enakkuk kolla vaenndum entan.And he came up, and told his father and his mother, and said, I have seen a woman in Timnath of the daughters of the Philistines: now therefore get her for me to wife.
3Appoluthu avan thaayum avan thakappanum avanai Nnokki: nee poy, viruththasethanamillaatha pelistharidaththil oru pennnnaik kollavaenntiyathenna? Un sakothararin kumaaraththikalilum, engal janamanaiththilum penn illaiyaa entarkal. Simson than thakappanai Nnokki: aval en kannnukkup piriyamaanaval, avalaiyae enakkuk kollavaenndum entan.Then his father and his mother said unto him, Is there never a woman among the daughters of thy brethren, or among all my people, that thou goest to take a wife of the uncircumcised Philistines? And Samson said unto his father, Get her for me; for she pleaseth me well.
4Avan pelistharidaththil kuttam pitikka mukaantharam unndaakumpati, ithu karththarin seyal entu avan thaayum thakappanum ariyaathirunthaarkal; akkaalaththilae pelisthar isravaelai aanndaarkal.But his father and his mother knew not that it was of the LORD, that he sought an occasion against the Philistines: for at that time the Philistines had dominion over Israel.
5Appatiyae simsonum avan thaayum thakappanum thimnaaththukkup pokap purappattarkal; avarkal thimnaath oor thiraatchaththottangalmattum vanthapothu, itho, kerchchikkira paalasingam ontu avanukku ethiraaka vanthathu.Then went Samson down, and his father and his mother, to Timnath, and came to the vineyards of Timnath: and, behold, a young lion roared against him.
6Appoluthu karththarutaiya aavi avanmael palamaay iranginathinaal, avan than kaiyil ontum illaathirunthum, athai oru aattukkuttiyaik kiliththuppodukirathupol kiliththup pottan; aanaalum thaan seythathai avan than thaay thakappanukku arivikkavillai.And the Spirit of the LORD came mightily upon him, and he rent him as he would have rent a kid, and he had nothing in his hand: but he told not his father or his mother what he had done.
7Avan poy anthap pennnnotae paesinaan; aval simsonin kannnukkup piriyamaayirunthaal.And he went down, and talked with the woman; and she pleased Samson well.
8Silanaalaikkuppinpu, avan avalai vivaakampannnath thirumpivanthu, singaththin udalaip paarkkiratharku valivilakip ponaan; itho, singaththin udalukkullae thaeneekkoottamum thaenum irunthathu.And after a time he returned to take her, and he turned aside to see the carcass of the lion: and, behold, there was a swarm of bees and honey in the carcass of the lion.
9Avan athaith than kaikalil eduththu, saappittukkonntae nadanthu, than thaaythakappanidaththil vanthu, avarkalukkum koduththaan; avarkalum saappittarkal, aanaalum thaan anthath thaenaich singaththin udalilae eduththathai avarkalukku arivikkavillai.And he took thereof in his hands, and went on eating, and came to his father and mother, and he gave them, and they did eat: but he told not them that he had taken the honey out of the carcass of the lion.
10Avan thakappan anthap penn irukkum idaththil ponapothu, simson angae virunthuseythaan; vaalipar appatich seyvathu valakkam.So his father went down unto the woman: and Samson made there a feast; for so used the young men to do.
11Avarkal avanaik kanndapothu, avanotaekooda irukkumpati muppathu tholarai avanidaththil konnduvanthaarkal.And it came to pass, when they saw him, that they brought thirty companions to be with him.
12Simson avarkalai Nnokki: oru vidukathaiyai ungalukkuch sollukiraேn; athai neengal virunthunnkira aelunaalaikkullae kanndupitiththu enakku viduviththaal, naan ungalukku muppathu thuppattikalaiyum muppathu maattaு vasthirangalaiyum koduppaen.And Samson said unto them, I will now put forth a riddle unto you: if ye can certainly declare it me within the seven days of the feast, and find it out, then I will give you thirty sheets and thirty change of garments:
13Athai enakku viduvikkaathae ponaal, neengal enakku muppathu thuppattikalaiyum muppathu maattaு vasthirangalaiyum kodukkavaenndum entan. Atharku avarkal: un vidukathaiyaich sollu; naangal athaik kaetkattum entarkal.But if ye cannot declare it me, then shall ye give me thirty sheets and thirty change of garments. And they said unto him, Put forth thy riddle, that we may hear it.
14Appoluthu avan: patchikkiravanidaththilurunthu patchanamum, palavaanidaththilirunthu mathuramum vanthathu entan; antha vidukathai avarkalaal moontu naalmattum viduvikkak koodaathae poyittaு.And he said unto them, Out of the eater came forth meat, and out of the strong came forth sweetness. And they could not in three days expound the riddle.
15Aelaamnaalilae avarkal simsonin pennsaathiyaip paarththu: un purushan antha vidukathaiyai engalukku viduvikkumpatikku nee avanai nayam pannnu; illaavittal naangal unnaiyum un thakappan veettaைyum akkiniyaal sutteriththuppoduvom; engalukkullavaikalaip pariththukkollavaa engalai alaiththeerkal entarkal.And it came to pass on the seventh day, that they said unto Samson's wife, Entice thy husband, that he may declare unto us the riddle, lest we burn thee and thy father's house with fire: have ye called us to take that we have? is it not so?
16Appoluthu simsonin pennsaathi avanukku munpaaka aluthu, nee ennai naesiyaamal ennaip pakaikkiraay, en janangalukku oru vidukathaiyaich sonnaay, athai enakkaavathu viduvikkavillaiyae ental; atharku avan: itho, naan en thaaythakappanukkum athai viduvikkavillaiyae, unakku athai viduvippaeno entan.And Samson's wife wept before him, and said, Thou dost but hate me, and lovest me not: thou hast put forth a riddle unto the children of my people, and hast not told it me. And he said unto her, Behold, I have not told it my father nor my mother, and shall I tell it thee?
17Virunthunnkira aelunaalum aval avan munpaaka aluthukonntae irunthaal; aelaamnaalilae aval avanai alattikkonntirunthapatiyaal, athai avalukku viduviththaan; appoluthu aval than janangalukku antha vidukathaiyai viduviththaal.And she wept before him the seven days, while their feast lasted: and it came to pass on the seventh day, that he told her, because she lay sore upon him: and she told the riddle to the children of her people.
18Aakaiyaal aelaamnaalilae poluthu pokumunnae, antha oor manushar avanai Nnokki, thaenaippaarkkilum mathuramaanathu enna, singaththaippaarkkilum palamaanathum enna entarkal; atharku avan: neengal en kidaariyaal ulaathiruntheerkalaanaal, en vidukathaiyaik kanndupitippathillai entan.And the men of the city said unto him on the seventh day before the sun went down, What is sweeter than honey? And what is stronger than a lion? and he said unto them, If ye had not plowed with my heifer, ye had not found out my riddle.
19Karththarutaiya aavi avanmael iranginathinaal, avan askalonukkuppoy, avvooraaril muppathupaeraikkontu, avarkalutaiya vasthirangalai urinthukonnduvanthu, vidukathaiyai viduviththavarkalukku antha maattaு vasthirangalaik koduththu, kopam moonndavanaayp purappattu, than thakappan veettukkup poyvittan.And the Spirit of the LORD came upon him, and he went down to Ashkelon, and slew thirty men of them, and took their spoil, and gave change of garments unto them which expounded the riddle. And his anger was kindled, and he went up to his father's house.
20Simsonin pennsaathiyovental, avanutaiya tholaril avanotae sinaekamaayiruntha oruvanukkuk kodukkappattal.But Samson's wife was given to his companion, whom he had used as his friend.