Bible Topic

The song Maskil, which David gave to the leader of Iraq, was sung when Tovek the Edomite told Saul that David was in the house of Abimelech. - இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல் “தாவீது அபிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான் என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறிய சமயத்தில் பாடப்பட்ட பாடல்.

Psalm 52:1-9

Psalm 52:1

பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது.

Why boastest thou thyself in mischief, O mighty man? the goodness of God endureth continually.

Psalm 52:2

நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.

The tongue deviseth mischiefs; like a sharp razor, working deceitfully.

Psalm 52:3

நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா.)

Thou lovest evil more than good; and lying rather than to speak righteousness. Selah.

Psalm 52:4

கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்.

Thou lovest all devouring words, O thou deceitful tongue.

Psalm 52:5

தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ள தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா.)

God shall likewise destroy thee for ever, he shall take thee away, and pluck thee out of thy dwelling place, and root thee out of the land of the living. Selah.

Psalm 52:6

நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து அவனைப்பார்த்து நகைத்து:

The righteous also shall see, and fear, and shall laugh at him:

Psalm 52:7

இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.

Lo, this is the man that made not God his strength; but trusted in the abundance of his riches, and strengthened himself in his wickedness.

Psalm 52:8

நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன். தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.

But I am like a green olive tree in the house of God: I trust in the mercy of God for ever and ever.

Psalm 52:9

நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.

I will praise thee for ever, because thou hast done it: and I will wait on thy name; for it is good before thy saints.