Bible Topic

One of the songs that David gave to the Iraqi leader playing musical instruments was called Maskil. Zipporah came to Saul and sang, saying, "David is hidden among our people." - இசைக் கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல்களுள் ஒன்று. சீப்பூரார் சவுலிடம் வந்து, “எங்கள் ஜனங்கள் மத்தியில் தாவீது ஒளிந்திருக்கிறார்” எனக் கூறிய காலத்தில் பாடியது.

Psalm 54:1-7

Psalm 54:1

தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ்செய்யும்.

Save me, O God, by thy name, and judge me by thy strength.

Psalm 54:2

தேவனே, என் விண்ணப்பத்தைக்கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.

Hear my prayer, O God; give ear to the words of my mouth.

Psalm 54:3

அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். (சேலா.)

For strangers are risen up against me, and oppressors seek after my soul: they have not set God before them. Selah.

Psalm 54:4

இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.

Behold, God is mine helper: the Lord is with them that uphold my soul.

Psalm 54:5

அவர் என் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும்.

He shall reward evil unto mine enemies: cut them off in thy truth.

Psalm 54:6

உற்சாகத்துடன் நான் உமக்குப்பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது.

I will freely sacrifice unto thee: I will praise thy name, O LORD; for it is good.

Psalm 54:7

அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.

For he hath delivered me out of all trouble: and mine eye hath seen his desire upon mine enemies.