Proverbs 8:1-11 in Tamil in Tamil
நீதிமொழிகள் 8
1 ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ? Doth not wisdom cry? and understanding put forth her voice?
2 அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது. She standeth in the top of high places, by the way in the places of the paths.
3 அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு: She crieth at the gates, at the entry of the city, at the coming in at the doors.
4 மனுஷரே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும். Unto you, O men, I call; and my voice is to the sons of man.
5 பேதைகளே விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள். O ye simple, understand wisdom: and, ye fools, be ye of an understanding heart.
6 கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தமகாரியங்களை வசனிக்கும். Hear; for I will speak of excellent things; and the opening of my lips shall be right things.
7 என் வாய் சத்தியத்தை விளம்பும், ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது. For my mouth shall speak truth; and wickedness is an abomination to my lips.
8 என் வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை. All the words of my mouth are in righteousness; there is nothing froward or perverse in them.
9 அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தமுமாயிருக்கும். They are all plain to him that understandeth, and right to them that find knowledge.
10 வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப் பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். Receive my instruction, and not silver; and knowledge rather than choice gold.
11 முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல. For wisdom is better than rubies; and all the things that may be desired are not to be compared to it.
Read Full Chapter : நீதிமொழிகள் 8