1நாங்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா என்று அறிந்தோம்.And when they were escaped, then they knew that the island was called Melita.
2அந்நியராகிய அந்தத் தீவார் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த வேளையிலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்.And the barbarous people shewed us no little kindness: for they kindled a fire, and received us every one, because of the present rain, and because of the cold.
3பவுல் சில விறகுகளை வாரி அந்தநெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது.And when Paul had gathered a bundle of sticks, and laid them on the fire, there came a viper out of the heat, and fastened on his hand.
4விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.And when the barbarians saw the venomous beast hang on his hand, they said among themselves, No doubt this man is a murderer, whom, though he hath escaped the sea, yet vengeance suffereth not to live.
5அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.And he shook off the beast into the fire, and felt no harm.
6அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள்.Howbeit they looked when he should have swollen, or fallen down dead suddenly: but after they had looked a great while, and saw no harm come to him, they changed their minds, and said that he was a god.
7தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது, அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்றுநாள் பட்சமாய் விசாரித்தான்.In the same quarters were possessions of the chief man of the island, whose name was Publius; who received us, and lodged us three days courteously.
8புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான்.And it came to pass, that the father of Publius lay sick of a fever and of a bloody flux: to whom Paul entered in, and prayed, and laid his hands on him, and healed him.
9இது நடந்தபின்பு, தீவிலே இருந்தமற்ற வியாதிக்காரரும் வந்து, குணமாக்கப்பட்டார்கள்.So when this was done, others also, which had diseases in the island, came, and were healed:
10அவர்கள் எங்களுக்கு அநேக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.Who also honoured us with many honours; and when we departed, they laded us with such things as were necessary.
11மூன்றுமாதம் சென்றபின்பு, அந்த தீவிலே மழைகாலத்திற்குத் தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலிலே நாங்கள் ஏறிப் புறப்பட்டு,And after three months we departed in a ship of Alexandria, which had wintered in the isle, whose sign was Castor and Pollux.
12சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம்.And landing at Syracuse, we tarried there three days.
13அவ்விடம் விட்டுச் சுற்றியோடி, ரேகியு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தோம். மறுநாளில் தென்றற் காற்றெடுக்கையில் புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து,And from thence we fetched a compass, and came to Rhegium: and after one day the south wind blew, and we came the next day to Puteoli:
14அங்கே சகோதரரைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.Where we found brethren, and were desired to tarry with them seven days: and so we went toward Rome.
15அவ்விடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபுரம்வரைக்கும், சிலர் மூன்று சத்திரம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தான்.And from thence, when the brethren heard of us, they came to meet us as far as Appii forum, and The three taverns: whom when Paul saw, he thanked God, and took courage.
16நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூற்றுக்கு அதிபதி தன் காவலிலிருந்தவர்களைச் சேனாபதியினிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.And when we came to Rome, the centurion delivered the prisoners to the captain of the guard: but Paul was suffered to dwell by himself with a soldier that kept him.
17மூன்றுநாளைக்குப்பின்பு, பவுல் யூதரில் பிரதானமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரரே, நம்முடைய ஜனங்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.And it came to pass, that after three days Paul called the chief of the Jews together: and when they were come together, he said unto them, Men and brethren, though I have committed nothing against the people, or customs of our fathers, yet was I delivered prisoner from Jerusalem into the hands of the Romans.
18அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்துக்கேதுவான குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.Who, when they had examined me, would have let me go, because there was no cause of death in me.
19யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனுக்கு அபயமிடவேண்டியதாயிருந்தது; ஆயினும் என் ஜனத்தார்மேல் யாதொரு குற்றஞ் சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.But when the Jews spake against it, I was constrained to appeal unto Caesar; not that I had ought to accuse my nation of.
20இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களுடனே பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான்.For this cause therefore have I called for you, to see you, and to speak with you: because that for the hope of Israel I am bound with this chain.
21அதற்கு அவர்கள் உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் காகிதம் வரவுமில்லை, வந்த சகோதரரில் ஒருவனும் உன்பேரில் ஒரு பொல்லாங்கை அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.And they said unto him, We neither received letters out of Judaea concerning thee, neither any of the brethren that came shewed or spake any harm of thee.
22எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.But we desire to hear of thee what thou thinkest: for as concerning this sect, we know that every where it is spoken against.
23அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விஸ்தரித்துப் பேசினான்.And when they had appointed him a day, there came many to him into his lodging; to whom he expounded and testified the kingdom of God, persuading them concerning Jesus, both out of the law of Moses, and out of the prophets, from morning till evening.
24அவன் சொன்னவைகளைச் சிலர் விசுவாசித்தார்கள், சிலர் விசுவாசியாதிருந்தார்கள்.And some believed the things which were spoken, and some believed not.
25இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்து, புறப்பட்டுப்போகையில், பவுல் அவர்களுக்குச் சொன்ன வாக்கியமாவது:And when they agreed not among themselves, they departed, after that Paul had spoken one word, Well spake the Holy Ghost by Esaias the prophet unto our fathers,
26நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள்Saying, Go unto this people, and say, Hearing ye shall hear, and shall not understand; and seeing ye shall see, and not perceive:
27இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்.For the heart of this people is waxed gross, and their ears are dull of hearing, and their eyes have they closed; lest they should see with their eyes, and hear with their ears, and understand with their heart, and should be converted, and I should heal them.
28ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான்.Be it known therefore unto you, that the salvation of God is sent unto the Gentiles, and that they will hear it.
29இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் தர்க்கம்பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள்.And when he had said these words, the Jews departed, and had great reasoning among themselves.
30பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு,And Paul dwelt two whole years in his own hired house, and received all that came in unto him,
31மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.Preaching the kingdom of God, and teaching those things which concern the Lord Jesus Christ, with all confidence, no man forbidding him.
1Naangal thappik karaisernthapinpu, anthath theevinpaer meliththaa entu arinthom.And when they were escaped, then they knew that the island was called Melita.
2Anniyaraakiya anthath theevaar engalukkup paaraattina anpu konjamalla. Antha vaelaiyilae pitiththiruntha malaikkaakavum kulirukkaakavum avarkal neruppai mootti, engal anaivaraiyum serththukkonndaarkal.And the barbarous people shewed us no little kindness: for they kindled a fire, and received us every one, because of the present rain, and because of the cold.
3Pavul sila virakukalai vaari anthaneruppinmael podukaiyil, oru viriyanpaampu analuraiththup purappattu avanutaiya kaiyaik kavvikkonndathu.And when Paul had gathered a bundle of sticks, and laid them on the fire, there came a viper out of the heat, and fastened on his hand.
4Vishappoochchi avan kaiyilae thongukirathai anniyaraakiya anthath theevaar kanndapothu, intha manushan kolaipaathakan, itharkuch santhaekamillai; ivan samuththiraththukkuth thappivanthum, paliyaanathu ivanaip pilaikkavottavillaiyentu thangalukkullae sollikkonndaarkal.And when the barbarians saw the venomous beast hang on his hand, they said among themselves, No doubt this man is a murderer, whom, though he hath escaped the sea, yet vengeance suffereth not to live.
5Avan anthap poochchiyaith theeyilae utharippottu, oru theengum ataiyaathirunthaan.And he shook off the beast into the fire, and felt no harm.
6Avanukku veekkanganndu, allathu avan satithiyaay vilunthu saavaanentu avarkal paarththukkonntirunthaarkal; nedunaeramaayp paarththukkonntirunthum, oru sethamum avanukku varaathathaik kanndapothu, vaeraு sinthaiyaaki, ivan thaevanentu sollikkonndaarkal.Howbeit they looked when he should have swollen, or fallen down dead suddenly: but after they had looked a great while, and saw no harm come to him, they changed their minds, and said that he was a god.
7Theevukku muthalaaliyaakiya pupiliyu ennum paerkonndavanutaiya nilangal antha idaththirkuch sameepamaayirunthathu, avan engalai aettaுkkonndu, moontunaal patchamaay visaariththaan.In the same quarters were possessions of the chief man of the island, whose name was Publius; who received us, and lodged us three days courteously.
8Pupiliyuvinutaiya thakappan juraththinaalum iraththapaethiyinaalum varuththappattuk kidanthaan; pavul avanidaththirkup poy Jebampannnni, avanmael kaikalai vaiththu, avanaik kunamaakkinaan.And it came to pass, that the father of Publius lay sick of a fever and of a bloody flux: to whom Paul entered in, and prayed, and laid his hands on him, and healed him.
9Ithu nadanthapinpu, theevilae irunthamatta viyaathikkaararum vanthu, kunamaakkappattarkal.So when this was done, others also, which had diseases in the island, came, and were healed:
10Avarkal engalukku anaeka mariyaathai seythu, naangal kappal aerippokirapothu engalukkuth thaevaiyaanavaikalai aettinaarkal.Who also honoured us with many honours; and when we departed, they laded us with such things as were necessary.
11Moontumaatham sentapinpu, antha theevilae malaikaalaththirkuth thangiyiruntha mithunam ennum ataiyaalamutaiya aleksanthiriyaa pattanaththuk kappalilae naangal aerip purappattu,And after three months we departed in a ship of Alexandria, which had wintered in the isle, whose sign was Castor and Pollux.
12Seerakoosaa pattanaththaich sernthu, angae moontunaal thanginom.And landing at Syracuse, we tarried there three days.
13Avvidam vittuch suttiyoti, raekiyu thuraimukaththukku vanthu sernthom. Maraுnaalil thentar kaattedukkaiyil purappattu, iranndaam naal puththaeyoli pattanaththirku vanthu,And from thence we fetched a compass, and came to Rhegium: and after one day the south wind blew, and we came the next day to Puteoli:
14Angae sakothararaik kanntoom; avarkal engalai aelunaal thangalidaththil irukkumpati vaenntikkonndaarkal; anthappati naangal irunthu pinpu romaapurikkup ponom.Where we found brethren, and were desired to tarry with them seven days: and so we went toward Rome.
15Avvidaththilulla sakothararkal naangal varukira seythiyaik kaelvippattu, silar appiyupuramvaraikkum, silar moontu saththiramvaraikkum, engalukku ethirkonnduvanthaarkal; avarkalaip pavul kanndu, thaevanai sthoththiriththuth thairiyamatainthaan.And from thence, when the brethren heard of us, they came to meet us as far as Appii forum, and The three taverns: whom when Paul saw, he thanked God, and took courage.
16Naangal romaapuriyil sernthapothu, noottaுkku athipathi than kaavalilirunthavarkalaich senaapathiyinidaththil oppukkoduththaan; appoluthu pavul thannaik kaaththirukkira sevakanudanae thaniththuk kutiyirukkumpati uththaravu pettaுkkonndaan.And when we came to Rome, the centurion delivered the prisoners to the captain of the guard: but Paul was suffered to dwell by himself with a soldier that kept him.
17Moontunaalaikkuppinpu, pavul yootharil pirathaanamaanavarkalai varavalaiththaan; avarkal kootivanthirunthapothu, avan avarkalai Nnokki: sakothararae, nammutaiya janangalukkum nammutaiya munnorkalin muraimaikalukkum virothamaanathontaiyum naan seyyaamalirunthum, kattappattavanaaka erusalaemilirunthu romar kaikalil oppukkodukkappattaேn.And it came to pass, that after three days Paul called the chief of the Jews together: and when they were come together, he said unto them, Men and brethren, though I have committed nothing against the people, or customs of our fathers, yet was I delivered prisoner from Jerusalem into the hands of the Romans.
18Avarkal ennai niyaayam visaariththapothu maranaththukkaethuvaana kuttam ontum ennidaththil kaannaathapatiyinaal, ennai viduthalaiyaakka manathaayirunthaarkal.Who, when they had examined me, would have let me go, because there was no cause of death in me.
19Yootharkal atharku ethirpaesinapothu, naan iraayanukku apayamidavaenntiyathaayirunthathu; aayinum en janaththaarmael yaathoru kuttanj saattavaenndumentu naan appatich seyyavillai.But when the Jews spake against it, I was constrained to appeal unto Caesar; not that I had ought to accuse my nation of.
20Inthak kaariyaththinimiththamae ungalaik kaanavum ungaludanae paesavum ungalai alaippiththaen. Isravaelutaiya nampikkaikkaakavae inthach sangiliyaal kattappattirukkiraேn entan.For this cause therefore have I called for you, to see you, and to speak with you: because that for the hope of Israel I am bound with this chain.
21Atharku avarkal unnaikkuriththu yoothaeyaavilirunthu engalukkuk kaakitham varavumillai, vantha sakothararil oruvanum unpaeril oru pollaangai ariviththathumillai, athaippattip paesinathumillai.And they said unto him, We neither received letters out of Judaea concerning thee, neither any of the brethren that came shewed or spake any harm of thee.
22Engum intha mathapaethaththukku virothamaayp paesukirathaaka naangal arinthirukkirapatiyaal, ithaikkuriththu unnutaiya apippiraayam ennaventu kaettariya virumpukirom entarkal.But we desire to hear of thee what thou thinkest: for as concerning this sect, we know that every where it is spoken against.
23Atharkaaka avarkal oru naalaikkuriththu, anaekampaer avan thangiyiruntha veettirku avanidaththil vanthaarkal. Avan kaalamae thodangi saayangaalamattum Mosesyin niyaayappiramaanaththilum theerkkatharisikalin aakamangalilum irunthu Yesuvukkaduththa viseshangalai avarkalukkup pothiththu, thaevanutaiya raajyaththaik kuriththuch saatchikoduththu visthariththup paesinaan.And when they had appointed him a day, there came many to him into his lodging; to whom he expounded and testified the kingdom of God, persuading them concerning Jesus, both out of the law of Moses, and out of the prophets, from morning till evening.
24Avan sonnavaikalaich silar visuvaasiththaarkal, silar visuvaasiyaathirunthaarkal.And some believed the things which were spoken, and some believed not.
25Ippati avarkal oruvarotoruvar ovvaamalirunthu, purappattuppokaiyil, pavul avarkalukkuch sonna vaakkiyamaavathu:And when they agreed not among themselves, they departed, after that Paul had spoken one word, Well spake the Holy Ghost by Esaias the prophet unto our fathers,
26Neengal kaathaarakkaettum unaraathiruppeerkal, kannnnaarakkanndum paaraathiruppeerkalSaying, Go unto this people, and say, Hearing ye shall hear, and shall not understand; and seeing ye shall see, and not perceive:
27Ivarkal kannkalinaal kaannaamalum, kaathukalinaal kaelaamalum, iruthayaththinaal unarnthu kunappadaamalum, naan ivarkalai aarokkiyamaakkaamalum irukkumpatikku, intha janaththin iruthayam koluththirukkirathu; kaathukalinaal manthamaayk kaettuth thangal kannkalai mootikkonndaarkal entu intha janaththinidaththil poych sollu enpathaip Parisuththa aavi aesaayaa theerkkatharisiyaikkonndu nammutaiya pithaakkaludanae nantaych solliyirukkiraar.For the heart of this people is waxed gross, and their ears are dull of hearing, and their eyes have they closed; lest they should see with their eyes, and hear with their ears, and understand with their heart, and should be converted, and I should heal them.
28Aathalaal thaevanutaiya iratchippu purajaathiyaarukku anuppappattirukkirathentum, avarkal atharkuch sevikoduppaarkalentum ungalukkuth therinthirukkakkadavathu entan.Be it known therefore unto you, that the salvation of God is sent unto the Gentiles, and that they will hear it.
29Ippati avan sonnapinpu, yootharkal thangalukkullae mikavum tharkkampannnnikkonndu, poyvittarkal.And when he had said these words, the Jews departed, and had great reasoning among themselves.
30Pinpu pavul thanakkaaka vaadakaikku vaangiyiruntha veettilae iranndu varushamuluthum thangi, thannidaththil vantha yaavaraiyum aettaுkkonndu,And Paul dwelt two whole years in his own hired house, and received all that came in unto him,
31Mikuntha thairiyaththudanae thataiyillaamal, thaevanutaiya raajyaththaik kuriththup pirasangiththu, karththaraakiya YesuKristhuvaippattiya viseshangalai upathaesiththukkonntirunthaan.Preaching the kingdom of God, and teaching those things which concern the Lord Jesus Christ, with all confidence, no man forbidding him.