Bible Topic
The altar of burnt offering - தகனபலிகளுக்குரிய பலிபீடம்
Exodus 27:1-8
ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டுபண்ணுவாயாக; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாயிருப்பதாக.
And thou shalt make an altar of shittim wood, five cubits long, and five cubits broad; the altar shall be foursquare: and the height thereof shall be three cubits.
அதின் நாலு மூலைகளிலும் நாலு கொம்புகளை உண்டாக்குவாயாக; அதின் கொம்புகள் அதனோடே ஏகமாய் இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும்.
And thou shalt make the horns of it upon the four corners thereof: his horns shall be of the same: and thou shalt overlay it with brass.
அதின் சாம்பலை எடுக்கத்தக்க சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணிகளையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்குவாயாக; அதின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தால் பண்ணுவாயாக.
And thou shalt make his pans to receive his ashes, and his shovels, and his basins, and his fleshhooks, and his firepans: all the vessels thereof thou shalt make of brass.
வலைப்பின்னல் போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைப் பண்ணி, அந்தச் சல்லடையின் நாலு மூலைகளிலும் நாலு வெண்கல வளையங்களை உண்டாக்கி,
And thou shalt make for it a grate of network of brass; and upon the net shalt thou make four brazen rings in the four corners thereof.
அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதியுயரத்தில் இருக்கும்படி அதைத் தாழப் பலிபீடத்தின் சுற்றடைப்புக்குக் கீழாக வைப்பாயாக.
And thou shalt put it under the compass of the altar beneath, that the net may be even to the midst of the altar.
பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்Τால் தண்டுகளையும் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடுவாயாக.
And thou shalt make staves for the altar, staves of shittim wood, and overlay them with brass.
பலிபீடத்தைச் சுமக்கத்தக்கதாக அந்தத் தண்டுகள் அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.
And the staves shall be put into the rings, and the staves shall be upon the two sides of the altar, to bear it.
அதை உள் வெளிவிட்டுப் பலகைகளினாலே பண்ணவேண்டும். மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்டபடியே அதைப் பண்ணக்கடவர்கள்.
Hollow with boards shalt thou make it: as it was showed thee in the mount, so shall they make it.