Bible Topic

Other Levites - மற்ற லேவியர்கள்

1 Chronicles 24:20-31

1 Chronicles 24:20

லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,

And the rest of the sons of Levi were these: Of the sons of Amram; Shubael: of the sons of Shubael; Jehdeiah.

1 Chronicles 24:21

ரெகபியாவின் குமாரரில் மூத்தவனாகிய இஷியாவும்,

Concerning Rehabiah: of the sons of Rehabiah, the first was Isshiah.

1 Chronicles 24:22

இத்சாரியரில் செலெமோத்தும், செலெமோத்தின் குமாரரில் யாகாத்தும்,

Of the Izharites; Shelomoth: of the sons of Shelomoth; Jahath.

1 Chronicles 24:23

எப்ரோனின் குமாரரில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் குமாரனாகிய அமரியாவும், மூன்றாம் குமாரனாகிய யாகாசியேலும், நான்காம் குமாரனாகிய எக்காமியாமும்,

And the sons of Hebron; Jeriah the first, Amariah the second, Jahaziel the third, Jekameam the fourth.

1 Chronicles 24:24

ஊசியேலின் குமாரரில் மீகாவும், மீகாவின் குமாரரில் சாமீரும்,

Of the sons of Uzziel; Michah: of the sons of Michah; Shamir.

1 Chronicles 24:25

மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின குமாரரில் சகரியாவும்,

The brother of Michah was Isshiah: of the sons of Isshiah; Zechariah.

1 Chronicles 24:26

மெராரியின் குமாரராகிய மகேலிமூசி என்பவர்களும், யாசியாவின் குமாரனாகிய பேனோவும்,

The sons of Merari were Mahli and Mushi: the sons of Jaaziah; Beno.

1 Chronicles 24:27

மெராரியின் குமாரனாகிய யாசியாவின் குமாரரான பேனோ, ரோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,

The sons of Merari by Jaaziah; Beno, and Shoham, and Zaccur, and Ibri.

1 Chronicles 24:28

மகேலியின் குமாரரில் புத்திரனில்லாத எலெயாசாரும்,

Of Mahli came Eleazar, who had no sons.

1 Chronicles 24:29

கீசின் புத்திரரில் யெராமியேலும்,

Concerning Kish: the son of Kish was Jerahmeel.

1 Chronicles 24:30

மூசியின் குமாரரான மகேலி, ஏதேர் எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்.

The sons also of Mushi; Mahli, and Eder, and Jerimoth. These were the sons of the Levites after the house of their fathers.

1 Chronicles 24:31

இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியரிலும் லேவியரிலும் பிதாக்களாயிருக்கிற தலைவருக்கும் முன்பாக, தங்கள் சகோதரராகிய ஆரோனின் புத்திரர் செய்ததுபோல, தங்களிலிருக்கிற பிதாக்களான தலைவருக்கும், அவர்களுடைய சிறிய சகோதரருக்கும், சரிசமானமாய்ச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.

These likewise cast lots over against their brethren the sons of Aaron in the presence of David the king, and Zadok, and Ahimelech, and the chief of the fathers of the priests and Levites, even the principal fathers over against their younger brethren.