Bible Topic

லாமேட்

Psalm 119:89-96

சங்கீதம் 119:89

கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.

For ever, O LORD, thy word is settled in heaven.

சங்கீதம் 119:90

உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர். அது நிலைத்திருக்கிறது.

Thy faithfulness is unto all generations: thou hast established the earth, and it abideth.

சங்கீதம் 119:91

உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும்.

They continue this day according to thine ordinances: for all are thy servants.

சங்கீதம் 119:92

உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.

Unless thy law had been my delights, I should then have perished in mine affliction.

சங்கீதம் 119:93

நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.

I will never forget thy precepts: for with them thou hast quickened me.

சங்கீதம் 119:94

நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.

I am thine, save me: for I have sought thy precepts.

சங்கீதம் 119:95

துன்மார்க்கர் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

The wicked have waited for me to destroy me: but I will consider thy testimonies.

சங்கீதம் 119:96

சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம்.

I have seen an end of all perfection: but thy commandment is exceeding broad.