Lyrics PPT

Maha Menmaium PPT - மகா மேன்மையும் அருமையுமான

மகா மேன்மையும் அருமையுமான
வாக்குத்தத்தங்களைக் கொடுத்து
உந்தன் ஆசீர்வாதம்
என் மேல் தங்கச் செய்தீரே
உந்தன் அன்பை பாடி புகழ்ந்திடுவேன்
என் ஜீவன் நீரே உம்மைத் துதிப்பேன்

Slide 1

மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களைக் கொடுத்து உந்தன் ஆசீர்வாதம் என் மேல் தங்கச் செய்தீரே உந்தன் அன்பை பாடி புகழ்ந்திடுவேன் என் ஜீவன் நீரே உம்மைத் துதிப்பேன்

Slide 2

ஆராதிக்கின்றேன் என் நல்ல பிதாவே ஆராதிக்கின்றேன் என் மீட்பர் இயேசுவே ஆராதிக்கின்றேன் ஆவியானவரே

Slide 3

சென்ற இடமெல்லாம் கூட வந்தவரே செய்த எல்லாவற்றிலும் பலன் தந்தீரே ஜெபங்களுக்கெல்லாம் பதில் தந்தீரே தேவைகளை பூரணமாய் பூர்த்தி செய்தீரே செம்மையான பாதையில் என்னை நடத்தி சேதமின்றி காத்துக்கொண்டீரே

Slide 4

ஆவியோடும் உண்மையோடும் நான் உம்மை ஆராதிப்பேன் ஆயுள் முழுதும்

Slide 5

கவலைகள் சூழ்ந்த எல்லா நேரங்களிலும் ஆறுதல் பெலன் தரும் வார்த்தை தந்தீரே வியாதியில் தெய்வீக சுகம் தந்தீரே விசுவாச போராட்டத்தில் ஜெயம் தந்தீரே நல்ல தேவன் உம்மைப்போலவே இந்த பாரில் வேறு யாருமில்லையே

Slide 6

வல்லவரே பெரியவரே எந்தன் மேன்மைக்கு காரணரே

Slide 7

இந்த புவி வாழ்க்கையில் உமக்காய் வாழ்வேன் உந்தன் வார்த்தை சத்தியத்தில் நிலைத்திருப்பேன் கனம் பண்ணுவேன் உந்தன் வேலை செய்வதை மேலாய் எண்ணுவேன்

Slide 8

கனிகள் உள்ள கொடியாய் நான் உமக்காக படர்ந்திடுவேன் உந்தன் நாமம் மகிமைப்பட நான் எல்லா நாளும் உயர்ந்திருப்பேன்

Maha menmaium PowerPoint

Maha Menmaium - மகா மேன்மையும் அருமையுமான Lyrics

Maha Menmaium PPT

Download Maha menmaium Tamil PPT